எங்கள் தனியுரிமைக் கொள்கைகள்

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்குதல்.

வடிவமைப்பில் தனிப்பட்டதாகவும் அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கும் தயாரிப்புகளை நாங்கள் உருவாக்குகிறோம். அதாவது, நாங்கள் எந்தத் தரவைப் பயன்படுத்துகிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் மற்றும் அதை எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதைக் கருத்தில்கொண்டு செயல்படுகிறோம்.

எங்கள் தயாரிப்புகள், செயல்முறைகள், தரவைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருத்தல், உங்கள் தகவல்களின் மீதான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்குதல் ஆகியவற்றுக்கு வழிகாட்ட இந்தக் கொள்கைகளையே சார்ந்திருக்கிறோம்.

1.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் நாங்கள் எவருக்கும் விற்பதில்லை.

முக்கியமான தருணங்களில் Google தயாரிப்புகள் உதவிகரமாக இருப்பதற்காகத் தரவைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, அருகிலுள்ள உணவகத்தையோ வீட்டிற்குச் செல்லும் வழிகளில் எரிபொருளை மிச்சப்படுத்தக்கூடிய பாதையையோ கண்டறிவதில் உங்களுக்கு உதவுதல்.

மிகவும் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டுவதற்காகவும் தரவைப் பயன்படுத்துகிறோம். தயாரிப்புகளை அனைவருக்கும் கட்டணமில்லாமல் வழங்குவதற்கு இந்த விளம்பரங்கள் எங்களுக்கு உதவினாலும், விளம்பர நோக்கங்கள் உட்பட ஒருபோதும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்க மாட்டோம் என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதும் முக்கியமாகும். அது தனிப்பட்டதாகவே இருக்கும்.

2.

என்ன தரவைச் சேகரிக்கிறோம், ஏன் சேகரிக்கிறோம் என்பதில் வெளிப்படையாக இருக்கிறோம் .

நாங்கள் சேகரிக்கும் தரவு, அதைப் பயன்படுத்தும் விதம், அதற்கான காரணம் ஆகியவை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோம். வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்பதால், இந்தத் தகவல்களைக் கண்டறிவதையும் புரிந்துகொள்வதையும் எளிமையாக்குகிறோம். இதன்மூலம், Google தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் குறித்து புரிதலுடன் முடிவுகளை எடுக்கலாம்.

3.

உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறோம் .

அதாவது, உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளை எளிதாகத் தேர்வுசெய்து Googleளுடன் பகிர்ந்த தனிப்பட்ட தகவல்களை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். உங்கள் தரவை மதிப்பாய்வு செய்தல், பதிவிறக்குதல், நீங்கள் விரும்பினால் அதை வேறு சேவைக்கு நகர்த்துதல்/முழுவதும் நீக்குதல் போன்றவை இதிலடங்கும்.

4.

உங்கள் தனியுரிமையை மேலும் பாதுகாக்க, நாங்கள் பயன்படுத்தும் தரவைக் குறைக்கிறோம் .

Drive, Gmail, Photos போன்ற ஆப்ஸில் நீங்கள் உருவாக்கிச் சேமித்துள்ள உள்ளடக்கத்தை எந்தவொரு விளம்பர நோக்கத்திற்காகவும் நாங்கள் ஒருபோதும் பயன்படுத்தமாட்டோம். மேலும் உங்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்குவதற்கு உடல்நலம், இனம், மதம், பாலியல் நாட்டம் போன்ற பாதுகாக்கவேண்டிய தகவல்களை ஒருபோதும் நாங்கள் பயன்படுத்துவதில்லை.

நீங்கள் Google கணக்கிற்குப் பதிவுசெய்யும்போது 'தானாக நீக்குதல்' அம்சத்தின் கட்டுப்பாடுகள் இயல்பாகவே பயன்படுத்தப்படும். இதனால், உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய ஆன்லைன் செயல்பாடு, நீங்கள் தேடியவை, பார்த்தவை போன்ற தரவை நாங்கள் தொடர்ந்து நீக்குகிறோம்.

5.

இயல்பாகவே பாதுகாப்பாக இருக்கும் தயாரிப்புகளை உருவாக்கி உங்களைப் பாதுகாக்கிறோம்.

எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது எங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் தகவல்களை வழங்குகிறீர்கள். அவற்றைப் பாதுகாப்பது எங்கள் பணியாகும். அதனால்தான், உங்கள் தரவைப் பாதுகாக்க உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு உட்கட்டமைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்துகிறோம்.

இயல்பாகவே பாதுகாப்பாக இருக்கும் வகையில் எங்கள் தயாரிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. தவறான நோக்கமுடையவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயல்வது போன்ற ஆன்லைன் அச்சுறுத்தல்கள் மூலம் அவர்கள் உங்களை நெருங்குவதற்கு முன்பாகவே கண்டறிந்து பாதுகாக்க, பாதுகாப்பு தொடர்பான எங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறோம்.

6.

மேம்பட்ட தனியுரிமைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி பிறருடன் அவற்றைப் பகிர்கிறோம்.

இணையத்தை வெளிப்படையாகவும் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது நாங்கள் செய்யும் அனைத்திலும் முதன்மையானதாகும். Googleளில் மட்டுமல்லாமல் இணையம் முழுவதிலும் உங்கள் ஆன்லைன் உபயோகம் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான், தனியுரிமை தொடர்பான புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு பரந்த தளத்தில் அவை கிடைப்பதற்கும் வழிவகுக்கிறோம். இணையத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்பதால் நாங்கள் கற்றுக்கொண்டவற்றையும் எங்களின் அனுபவங்களையும் கருவிகளையும் கூட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள போட்டியாளர்களுடன் பகிர்கிறோம்.

ஆன்லைனில் அனைவரின் பாதுகாப்பிற்கும் Google
எவ்வாறு உதவுகிறது என அறிந்து கொள்ளுங்கள்.