பாதுகாப்பான ஆன்லைன் உலகை
உருவாக்க உதவுகிறோம்.

அனைவருக்குமான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறோம் என்றால் அதைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதுகாக்கிறோம் என்று பொருள். எங்களின் பயனர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் தொழிற்துறை முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Google Assistantடில் தனியுரிமை குறித்த பிளே செய்யக்கூடிய வீடியோ
இணையத்தில் எங்கள் பயனர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குப்
புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கிறோம்.

புதிய அச்சுறுத்தல்கள் தோன்றி வருவதாலும் பயனர்களின் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதாலும் எங்கள் தயாரிப்புகள் முழுவதிலும் ஒவ்வொரு பயனரின் தனிப்பட்ட தகவல்களையும் ஒவ்வொரு அபாய நிலையிலும் தானாகவே பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியாகப் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வருகிறோம்.

ஒரு மொபைலில் "he" என ஒருவர் டைப் செய்வதும் அதை "Hey" என Google தானாகக் கணிப்பதும் காட்டப்பட்டுள்ளது

ஃபெடரேட்டட் லேர்னிங்

குறைந்த தரவைப் பயன்படுத்தி உதவிகரமான தயாரிப்புகளை உருவாக்குகிறோம்

ஃபெடரேட்டட் லேர்னிங் என்பது தரவுச் சேகரிப்பைக் குறைக்கும் Googleளின் முன்னோடித் தொழில்நுட்பமாகும். இது மெஷின் லேர்னிங் (ML) திறனை உங்கள் சாதனத்திற்கே கொண்டுவருகிறது. இந்தப் புதிய அணுகுமுறை ML மாடல்களுக்கு பயிற்சியளிக்க வெவ்வேறு சாதனங்களிலிருந்து அடையாளம் நீக்கிய தகவல்களை ஒருங்கிணைக்கிறது. தனிப்பட்ட தகவல்களை முடிந்தவரை உங்கள் சாதனத்திலேயே வைத்திருப்பதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க ஃபெடரேட்டட் லேர்னிங் உதவுகிறது.

மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம்

அதிகத் தேவையுள்ளவர்களுக்கு Googleளின் மிக வலுவான பாதுகாப்பு கிடைக்கிறது

மேம்பட்ட பாதுகாப்புத் திட்டமானது ஆன்லைனில் இலக்கு வைத்துத் தாக்கப்படும் ஆபத்து அதிகமுள்ள தனிப்பட்ட Google கணக்குகளைப் பாதுகாக்கிறது. உதாரணமாக, பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பிசினஸ் தலைவர்கள், அரசியல் பிரச்சாரக் குழுக்கள் ஆகியோர். இந்தத் திட்டம் பரந்த அளவிலான அச்சுறுத்தல்களுக்கு எதிராக முழு அளவிலான பாதுகாப்பை வழங்குவதோடு, தொடர்ந்து புதிய பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்துக்கொண்டு வருகிறது.

ஒவ்வொருவருக்கும் இணையம்
பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில்
தொழிற்துறைத் தரத்தை உயர்த்துகிறோம்.

Google தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் மட்டுமல்லாது இணையம் முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் எங்கள் பயனர்கள் ஆன்லைனில் இருக்கும் எல்லா நேரங்களிலும் அவர்களைப் பாதுகாக்க விரும்புகிறோம். உலகின் மிகவும் மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்குகிறோம். மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ள அவற்றில் பலவற்றைப் பொதுவாகவும் பகிர்ந்துகொள்கிறோம்.

இணைப்பு பாதுகாப்பானது எனும் அறிவிப்பைக் காட்டும் மொபைல்

HTTPS என்க்ரிப்ஷன்

மேம்பட்ட என்க்ரிப்ஷன் மூலம் இணையம் முழுவதுமுள்ள தளங்களைப் பாதுகாக்க உதவுகிறோம்

எங்கள் சேவைகளுக்கு HTTPS என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாப்பு வழங்குவதால் உங்கள் தகவல்களை யாரும் திருடமுடியாது. மேலும் உங்களால் தளங்களுடன் பாதுகாப்பாக இணைக்க முடிவதையும் கிரெடிட் கார்டு எண்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட முடிவதையும் இது உறுதிசெய்கிறது. எங்கள் தளங்களும் சேவைகளும் இயல்பாகவே நவீன HTTPSஸை வழங்குவதை உறுதிசெய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம். அனைத்து டெவெலப்பர்களுக்கும் கருவிகளையும் வளங்களையும் வழங்கி இணையம் முழுவதும் HTTPSஸுக்கு மாற உதவுவோம்.

நுண் பாதுகாப்பு

நுண் பாதுகாப்பு மூலம் தரவை அடையாளம் நீக்கிச் செயலாக்க பல்வேறு நிறுவனங்களுக்கு உதவுகிறோம்

நுண் பாதுகாப்பு என்பது எங்கள் பயனர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தரவிலிருந்து விவரங்களைப் பெற உதவுகின்ற, அடையாளம் நீக்கிச் செயலாக்குவதற்கான மேம்பட்ட தொழில்நுட்பமாகும். உலகிலேயே மிகப்பெரிய நுண் பாதுகாப்பு அல்காரிதம்களின் லைப்ரரியை பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி உருவாக்கியுள்ளோம். இந்தத் தனிப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் தரவுக்கும் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த லைப்ரரியை ஓப்பன் சோர்ஸாகவும் வைத்துள்ளோம்.

Google பாதுகாப்புப் பொறியியல் மையம்
ஆன்லைன் பாதுகாப்பின்
எதிர்காலத்தை வடிவமைக்கிறோம்.

அனுபவமிக்க பொறியாளர்கள் குழுவின் தலைமையில் செயல்படும் Google பாதுகாப்புப் பொறியியல் மையமானது Googleளின் இணையப் பாதுகாப்புப் பணியின் உலகளாவிய மையமாக விளங்குகிறது. சிக்கலைப் புரிந்துகொள்ளுதல், தீர்வுகளை உருவாக்குதல், மற்றவர்களுடன் இணைந்து பணிபுரிதல், பயனர்கள் அனைவருக்கும் அதிகாரமளித்தல் ஆகியவை மூலம் சிறப்பான மற்றும் பாதுகாப்பான இணையத்தை அனைவருக்கும் எங்களால் ஏற்படுத்தித் தர முடியும்.

மேலும் அறிக

ஆன்லைனில் அனைவரின் பாதுகாப்பிற்கும் Google
எவ்வாறு உதவுகிறது என அறிந்து கொள்ளுங்கள்.