முழு கட்டுப்பாட்டையும் உங்களுக்கே வழங்குகின்ற
தனியுரிமைக் கருவிகள்.

ஒரே வகையான தனியுரிமை அமைப்புகள் அனைவருக்கும் பொருந்தாது என்பதை அறிவோம். எனவேதான் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை நாங்கள் உருவாக்குகிறோம். உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளை நீங்களே தேர்வுசெய்து கொள்ளலாம்.

உங்கள் Google கணக்கில்
எந்தத் தரவு சேமிக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துங்கள்

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்

எந்தத் தரவு சேமிக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்தலாம்

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி Google சேவைகள் அனைத்திலும் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க எந்த வகையான செயல்பாடுகள் உங்கள் கணக்குடன் தொடர்புப்படுத்தப்படலாம் என்பதைத் தீர்மானிக்கலாம். தேடல் & உலாவல் செயல்பாடுகள், YouTube செயல்பாடுகள், இதுவரை சென்ற இடங்கள் போன்ற குறிப்பிட்ட வகையான தரவு உங்கள் கணக்கில் சேமிக்கப்படுவதை நீங்கள் இடைநிறுத்தலாம்.

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் பக்கத்திற்குச் செல்

தானாக நீக்குதல்

உங்கள் தரவைத் தானாக நீக்கும்படி அமைத்துக் கொள்ளலாம்

இன்னும் அதிகக் கட்டுப்பாடுகளைப் பெற, உங்கள் செயல்பாட்டுத் தரவை எவ்வளவு காலம் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான கால அளவை 'தானாக நீக்குதல்' அமைப்புகள் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த கால அளவுக்கு மேல் பெறப்படும் தரவு தொடர்ச்சியாகவும் தானாகவும் உங்கள் கணக்கிலிருந்து நீக்கப்படும். இதனால் நீங்கள் அதை எளிதில் அமைத்துவிட்டு உங்கள் வேலையைப் பார்க்கலாம். எனினும் எப்போது வேண்டுமானாலும் இந்த அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.

எனது செயல்பாட்டைத் தானாக நீக்கு

எனது செயல்பாடு

உங்கள் கணக்கில் உள்ள தரவை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்

எனது செயல்பாடு என்பது எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் தேடிய, பார்த்த, கண்டுகளித்த எல்லா விஷயங்களையும் காட்டும் மைய இடமாகும். உங்கள் முந்தைய ஆன்லைன் செயல்பாட்டை எளிதாக மீண்டும் பார்ப்பதற்காக, தலைப்பு, தேதி மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின்படி தேடும் கருவிகளை அளிக்கிறோம். உங்கள் கணக்குடன் தொடர்புப்படுத்தப்பட விரும்பாத குறிப்பிட்ட செயல்பாடுகளையோ அவ்வகையான மொத்தச் செயல்பாடுகளையோ நீங்கள் நிரந்தரமாக நீக்கலாம்.

எனது செயல்பாட்டிற்குச் செல்
உங்களுக்கேற்ற
தனியுரிமை அமைப்புகளைத்
தேர்ந்தெடுங்கள்.

தனியுரிமைச் சரிபார்ப்பு

தனியுரிமைச் சரிபார்ப்பை மேற்கொள்ளுங்கள்

ஒரு சில நிமிடங்களிலேயே, உங்கள் Google கணக்கில் எந்த வகையான தரவு சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம். மேலும் எந்தத் தரவு நண்பர்களுடன் பகிரப்பட வேண்டும், பொதுவில் காட்டப்பட வேண்டும், எந்தவிதமான விளம்பரங்கள் உங்களுக்குக் காட்டப்பட வேண்டும் போன்றவற்றையும் மாற்றலாம். விரும்பும்போதெல்லாம் இந்த அமைப்புகளை மாற்றலாம், குறிப்பிட்ட கால இடைவெளியில் நினைவூட்டல்களைப் பெறுவதற்கும் தேர்வுசெய்யலாம்.

நீங்கள் தினமும்
பயன்படுத்தும் ஆப்ஸிலிருந்தே
உங்கள் தனியுரிமையைக் கட்டுப்படுத்துங்கள்.

மறைநிலைப் பயன்முறை

Chrome, Search, YouTube, Maps ஆகியவற்றில் மறைநிலைப் பயன்முறை அம்சத்தைப் பயன்படுத்திப் பாருங்கள்

முதன்முதலில் Chromeமில் அறிமுகம் செய்யப்பட்ட மறைநிலைப் பயன்முறை அம்சம் தற்போது எங்களின் மிகவும் பிரபலமான ஆப்ஸிலும் கிடைக்கிறது. YouTube, Search (iOS), Maps ஆகியவற்றில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டி எளிதாக இதை இயக்கலாம் முடக்கலாம். Maps மற்றும் YouTubeல் மறைநிலைப் பயன்முறையை இயக்கினால் உங்கள் செயல்பாடுகள் (நீங்கள் தேடிய இடங்கள், பார்த்த வீடியோக்கள் போன்றவை) Google கணக்கில் சேமிக்கப்படாது. மறைநிலைச் சாளரங்கள் அனைத்தையும் மூடியவுடன் நீங்கள் மறைநிலை அமர்வில் இதுவரை இணையத்தில் பார்த்தவையும் குக்கீகளும் Chromeமில் இருந்து நீக்கப்படும்.

ஆப்ஸில் உங்கள் தரவு

ஆப்ஸிலிருந்தே உங்கள் தரவைக் கட்டுப்படுத்துங்கள்

நீங்கள் தினமும் பயன்படுத்தும் Google சேவைகளிலிருந்தே நேரடியாகத் தரவு குறித்து எளிதில் முடிவெடுக்கலாம். உதாரணமாக, Searchசை விட்டுச் செல்லாமலேயே சமீபத்திய தேடல் செயல்பாடுகளைப் பார்க்கலாம் நீக்கலாம், உங்கள் Google கணக்கிலிருந்து தொடர்புடைய தனியுரிமைக் கட்டுப்பாடுகளை விரைவாக அணுகலாம், உங்கள் தரவை Search எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்தக் கட்டுப்பாடுகளை Search, Maps, Google Assistant ஆகியவற்றில் நீங்கள் அணுகலாம்.

நாங்கள் உங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கும்
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.