குடும்பத்திற்கேற்ற அனுபவங்களை உருவாக்குதல்

உங்கள் குடும்பத்திற்கு அதிக மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஆக்க எங்களின் தயாரிப்புகள் பலவற்றிலும் ஸ்மார்ட் ஃபில்டர்கள், தளத் தடுப்பான்கள், உள்ளடக்க மதிப்பீடுகள் போன்ற சிறப்பம்சங்களை உள்ளமைக்கிறோம்.

குழந்தைகளுக்கான உள்ளடக்கத்தையும் அனுபவங்களையும் கண்டறிதல்

 • YouTube கிட்ஸ் மூலம் கற்றல் மற்றும் வேடிக்கை உலகைக் கண்டறியுங்கள்

  உலகில் இருக்கும் எல்லாப் பிள்ளைகளும் தங்களுடைய ஆர்வங்களை ஆன்லைன் வீடியோக்கள் மூலம் கண்டறிய, அவர்களுக்கான பாதுகாப்பான சூழ்நிலையாக YouTube கிட்ஸை உருவாக்கியுள்ளோம். பெற்றோர் கட்டுப்பாடுகள் தொகுப்பின் மூலமாக, வேடிக்கையான குடும்ப அனுவங்களைத் தேர்ந்தெடுப்பதை, உங்களுக்காக எளிமையாக்கியுள்ளோம்:

  • உங்கள் பிள்ளைகள் எவ்வளவு நேரம் வீடியோக்கள் பார்க்கலாம் என்பதை வரம்பிட, டைமரை அமைக்கலாம்.
  • நம்பகமான மூன்றாம் தரப்பினர்களின் மூலம் அல்லது YouTube கிட்ஸ் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சேனல்களின் தொகுப்புகளை மட்டுமே பார்ப்பதற்கு, உங்கள் பிள்ளைகளை அனுமதிக்கலாம்.
  • “மீண்டும் பார்க்கவும்” என்பதில் உங்கள் பிள்ளைகள் சமீபத்தில் பார்த்தவற்றைக் கண்காணிக்கலாம்.
  • YouTube கிட்ஸ் குழுவால் சரிபார்க்கப்பட்ட சேனல்களின் மூலம் இன்னும் கட்டுப்பாடான அனுபவத்தைப் பெற, தேடலை முடக்கலாம்.
  • உங்கள் பிள்ளையின் ஆப்ஸில் வீடியோக்கள் அல்லது சேனல்கள் தோன்றுவதைத் தடுக்கலாம்.
  • ஆப்ஸில் இருக்கக்கூடாதவை என்று நீங்கள் கருதும் வீடியோக்களை மதிப்பாய்வு செய்யும்படி கொடியிடலாம்.

  YouTube கிட்ஸில் உள்ள வீடியோக்கள் குடும்பத்திற்கேற்றதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்காக, வடிப்பான்கள், பயனர் கருத்துகள், மதிப்பாய்வாளர்களின் உதவி என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். இருப்பினும், எந்தவொரு அமைப்பும் முழுவதும் சரியாக இருக்காது என்பதால், பொருத்தமற்ற வீடியோக்கள் தவறுதலாகத் தோன்றலாம். எனவே, எங்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் இன்னும் அதிகமான பெற்றோர்க் கட்டுப்பாடுகளை வழங்கவும், தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

 • Google Playயில் குடும்பங்களுக்கு ஏற்ற இடத்தை உருவாக்குதல்

  உங்கள் பிள்ளைக்கு எது சரியானது என்பதைத் தீர்மானிப்பதில் உதவ, மதிப்புரைகளைப் படிக்கவும், மேலும் ஆப்ஸிலும் கேம்களிலும் குடும்ப நட்சத்திர பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். நட்சத்திர பேட்ஜானது, உள்ளடக்கம் மிகவும் கவனத்துடன் மதிப்பாய்வு செய்யப்பட்டது என்பதையும் பிள்ளைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதையும் குறிக்கும். அதில் உள்ளடக்கத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட வயது வரம்பும் இருக்கும்.

  உங்கள் பிள்ளைக்கு எது சரியானது என்பதைத் தீர்மானிக்க, உள்ளடக்க மதிப்பீட்டைப் பார்த்து ஆப்ஸின் முதிர்ச்சிநிலையைப் புரிந்து கொண்டு, அந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் வடிப்பான்களை அமைக்கவும். ஆப்ஸில் விளம்பரங்கள், ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள் உள்ளனவா அல்லது சாதன அனுமதிகள் தேவைப்படுமா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், ஆப்ஸின் ஸ்டோர் பக்கத்தில் கூடுதல் தகவல் பிரிவைப் பார்க்கலாம்.

 • Google அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்தி உங்கள் குடும்பத்துடன் மகிழ்வதற்கான அனுபவங்களைக் கண்டறிதல்

  குடும்பத்தோடு இரவு முழுதும் விளையாடுவது முதல் மியூசிக்கல் சேர் விளையாடுவது வரை, பொழுதுபோக்குகளுக்கு உதவும் பல்வேறு அம்சங்கள் உங்கள் அசிஸ்டண்ட்டில் உள்ளன. தற்போது, குடும்பங்களுக்கான அசிஸ்டண்ட் திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விளையாட்டுகள், ஆக்டிவிட்டிஸ் மற்றும் கதைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு ஆக்டிவிட்டியும் எங்கள் ட்ரஸ்ட் அண்ட் சேஃப்ட்டி குழுவின் மூலம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், இவை குடும்பத்திற்கேற்றவையாக இருக்கும்.

ஆன்லைனில் உங்கள் குடும்பத்தின் அனுபவத்தை நிர்வகிப்பதற்கான கருவிகளை வழங்குதல்

 • பாதுகாப்பான தேடல்' வடிப்பான்களைப் பயன்படுத்தி, Google தேடலில் தகாத தளங்களைத் தடுத்தல்

  பாதுகாப்பான தேடல் அமைப்பானது ஆபாசம் மற்றும் மிகையான வன்முறையைத் தவிர்ப்பதற்காக Google தேடல் முடிவுகளில் இருந்து தகாத படங்கள், வீடியோக்கள் மற்றும் இணையதளங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பாகும். இருப்பினும், இது எப்போதும் துல்லியமாக இயங்கும் என்பது உறுதி இல்லாததால், தகாத முடிவுகளையும் நீங்கள் பார்க்கக்கூடும். அந்தச் சமயங்களில், அதை நீங்கள் புகாரளிக்கலாம். அது போன்ற கருத்துகள், 'பாதுகாப்பான தேடல்' அமைப்பை அனைவருக்கும் சிறப்பானதாக மாற்றுவதில் எங்களுக்கு உதவுகின்றன.

 • YouTube இல் உள்ள வயதுவந்தோருக்கான வீடியோக்களை, கட்டுப்பாட்டுப் பயன்முறை மூலம் தடுத்தல்

  YouTube கட்டுப்பாட்டுப் பயன்முறை அமைப்பை இயக்குவதன் மூலம், உங்கள் டீன் ஏஜர் குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று நீங்கள் நினைக்கும் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைத் தடுக்க உதவுகிறோம். எங்கள் மதிப்பாய்வாளர்களின் குழுவால் "குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமானது" என்று குறிப்பிடப்பட்ட வீடியோக்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், எங்கள் தானியங்கு அமைப்பும் மீத்தரவு, தலைப்பு, வீடியோவில் பயன்படுத்தும் மொழி போன்ற சிக்னல்களைக் கண்காணிக்கிறது. 'கட்டுப்பாட்டுப் பயன்முறை' இயக்கத்தில் இருக்கும் போது தேவையற்ற கலந்துரையாடல்களைத் தவிர்க்குமாறு வீடியோக்களில் உள்ள கருத்துகளையும் பார்க்க முடியாது

 • Google Wifi மூலம் சாதன நேர முடிவுகளை அமைத்தல் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைத் தடுத்தல்

  உங்கள் பிள்ளைகள் பொருத்தமான உள்ளடக்கத்தைப் பார்ப்பதை உறுதிசெய்ய, Google Wifi உதவுகிறது. மோசமான உள்ளடக்கத்தைத் தவிர்ப்பதற்கு உதவ, உங்கள் பிள்ளைகளின் சாதனங்களில் இருந்து ஆபாசம் அல்லது கிராஃபிக் வன்முறை கொண்ட தளங்கள் போன்ற, மில்லியன் கணக்கான வெளிப்படையான இணையதளங்களைத் தானாகத் தடுக்க, Google Wifi மேம்பட்ட தளத் தடுப்பை வழங்குகிறது. வீட்டுப்பாடம் செய்யும் நேரம், வெளியில் இருக்கும் நேரம் அல்லது உறக்கநேரம் போன்ற முக்கியமான சமயத்தில், வைஃபை இடைநிறுத்தத்தையும் திட்டமிடலாம். Google Wifi உடன் வரும், லேபிள்கள் அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் நெட்வொர்க்கில் உள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் வெவ்வேறு வடிப்பான்களையும் இடைநிறுத்தங்களையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பான ஆன்லைன் கற்றலுக்கான கருவிகளை மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் வழங்குதல்

 • G Suite for Educationக்குள் பாதுகாப்பை உருவாக்குதல்

  சாதனங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்வதற்கு G Suite for Education உதவுகிறது. G Suite for Education முக்கியச் சேவைகளில் விளம்பரங்கள் எதுவும் இருக்காது, மேலும் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையுள்ள (K-12) G Suite for Education பயனர்களுக்கு, விளம்பரங்களை இலக்கிடுவதற்காக எந்தத் தனிப்பட்ட தகவலையும் நாங்கள் பயன்படுத்துவது இல்லை. பொருத்தமான செயல்பாடுகள் பற்றிய கொள்கைகளை அமைத்து மாணவர்களின் பள்ளி Google கணக்குகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த உதவுமாறு நிர்வாகிகளுக்கான கருவிகளையும் வழங்குகிறோம். பள்ளிகளின் மாணவர்கள் பயன்படுத்தும் G Suite for Education சேவைகள் பற்றி நன்கு அறிந்துகொண்டு முடிவுகளை எடுப்பதற்கு உதவ, கருவிகளையும் பாடங்களையும் பள்ளிகளுக்கு வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்.

 • Chromebookகுகள் வகுப்பறையில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்தல்

  மில்லியன் கணக்கான மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் Chromebookகுகளையும் Google இன் லேப்டாப்புகளையும் பயன்படுத்துகின்றனர். குழு அமைப்புகளை நிர்வகிக்க நிர்வாகிகளை அனுமதிக்கிறோம். இதன் மூலம் அவர்கள், பள்ளி தேர்வுசெய்யும் அளவிற்கு, குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அம்சங்கள் அல்லது அணுகலை மாணவர்களுக்கு வழங்கலாம். எங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், பிள்ளைகளின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதோடு, கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்க K-12 பள்ளிகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள பல பள்ளிகளில், Chromebookகுகளைச் சிறந்த தேர்வாக மாற்றுவதற்கும் உதவியுள்ளது.

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.