நாங்கள் உருவாக்கும் அனைத்திலும் பாதுகாப்பைக் கட்டமைத்தல்

Google சேவைகள் உலகின் மிகச் சிறந்தவற்றில் ஒன்றான பாதுகாப்புக் கட்டமைப்பின் மூலம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றன. இந்த உள்ளமைந்த பாதுகாப்பு, ஆன்லைன் ஆபத்துகளைக் கண்டறிந்து தடுக்கிறது. எனவே, உங்கள் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பாக உள்ளதென்று நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

தொடர்ந்து புதுப்பிக்கப்படும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

 • பரிமாற்றத்தின் போது, தரவைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க என்க்ரிப்ஷன் உதவுகிறது

  எங்கள் சேவைகளில் அதிகப் பாதுகாப்பையும் தனியுரிமையையும் என்க்ரிப்ஷன் அளிக்கிறது. நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பும் போதோ, வீடியோவைப் பகிரும் போதோ, இணையதளத்திற்குச் செல்லும் போதோ, அல்லது படங்களைச் சேமிக்கும் போதோ உருவாக்கப்படும் தரவானது உங்கள் சாதனம், Google சேவைகள், எங்களின் தரவு மையங்கள் ஆகியவற்றுக்கு இடையே பரிமாறப்படுகிறது. HTTPS மற்றும் டிரான்ஸ்போர்ட் லேயர் பாதுகாப்பு போன்ற முன்னணி என்க்ரிப்ஷன் தொழில்நுட்பங்கள் உட்பட பல அடுக்குப் பாதுகாப்புடன் இந்தத் தரவைப் பாதுகாக்கிறோம்.

 • எங்கள் கிளவுட் கட்டமைப்பானது தரவை எந்நேரமும் பாதுகாக்கும்

  தனிப்பயனாக்கிய தரவு மையங்கள் முதல் கண்டங்களுக்கு இடையே தரவைப் பரிமாறும் ஆழ்கடல் ஃபைபர் கேபிள்கள் வரை வழங்கி, உலகின் மிகவும் பாதுகாப்பான, நம்பகமான கிளவுட் கட்டமைப்புகளில் ஒன்றை நாங்கள் இயக்குகிறோம். மேலும் உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கும் உங்களுக்குத் தேவைப்படும் போது அது கிடைப்பதற்கும் இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தீவிபத்து அல்லது இயற்கைப் பேரழிவு போன்ற நெருக்கடிகளிலும் உங்கள் தரவைப் பாதுகாப்பான தளங்களுக்குத் தடையின்றி, தானாக நகர்த்துவதற்கு ஏற்ப அதைப் பல தரவு மையங்களில் சேமித்துள்ளோம்.

 • Gmail சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைப் பயன்படுத்தவிடாமல் தடுத்து உங்களைப் பாதுகாப்பதுடன், ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன் அதுகுறித்த எச்சரிக்கைகளையும் உங்களுக்கு வழங்குகிறது

  பல தீம்பொருள் மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் மின்னஞ்சல் மூலமாகவே தொடங்குகின்றன. Gmail ஆனது வேறெந்த மின்னஞ்சல் சேவையைக் காட்டிலும் ஸ்பேம், ஃபிஷிங், தீம்பொருள் ஆகியவற்றுக்கு எதிரான சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது. மெஷின் லேர்னிங், ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பயனர்கள் எந்த வகையான செய்திகளை ஸ்பேம் எனக் குறிக்கின்றனர் என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்காக, கோடிக்கணக்கான மின்னஞ்சல்களில் உள்ள பேட்டர்ன்களை Gmail பகுப்பாய்வு செய்கிறது. மேலும் இந்த அடையாளங்களைப் பயன்படுத்தி, சந்தேகத்திற்குரிய அல்லது அபாயகரமான மின்னஞ்சல்களில் 99.9 சதவீத மின்னஞ்சல்களை உங்களை வந்தடைவதற்கு முன்பே தடுத்துவிடுகிறது.

  இதுமட்டுமின்றி, ஆபத்திற்குரிய மின்னஞ்சல் வரும் போது, அதுகுறித்த விழிப்பூட்டல்களை அனுப்புவது, சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை நீங்களே “ஸ்பேம் எனப் புகாரளிப்பதற்கான” அம்சத்தை வழங்குவது மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் உங்கள் செய்திகளைக் காலாவதியாக்குவதுடன், பெறுநர்களுக்கு உங்கள் செய்தியை முன்னனுப்புவது, நகலெடுப்பது, பதிவிறக்குவது அல்லது அச்சிடுவதற்கான விருப்பங்களை அகற்றும் இரகசியப் பயன்முறை போன்ற இன்னும் பிற பாதுகாப்பு அம்சங்களையும் Gmail வழங்குகிறது

 • தானியங்கு Chrome புதுப்பிப்புகள், தீம்பொருள் மற்றும் ஏமாற்றக்கூடிய தளங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கின்றன

  பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் எப்போதும் மாறக்கூடியவை என்பதால், நீங்கள் பயன்படுத்தும் உலாவியின் பதிப்பு சமீபத்தியதா இல்லையா என்பதை Chrome அடிக்கடிச் சரிபார்க்கும். இதில் பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய பிழைத் திருத்தங்கள், தீம்பொருளுக்கும் ஏமாற்றக்கூடிய தளங்களுக்கும் எதிரான பாதுகாப்புகள், மற்றும் பலவும் உள்ளடங்கும். மேலும் இது தானாகவே புதுப்பிக்கப்படும் என்பதால் சமீபத்திய Chrome பாதுகாப்புத் தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பைப் பெறுவது மிக எளிதானது.

 • தீங்கிழைக்கக்கூடிய, தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பரங்கள் உங்களைப் பாதிக்கும் முன் அவற்றைத் தடுத்தல்

  தீம்பொருளைக் கொண்டவை, நீங்கள் பார்க்க முயலும் உள்ளடக்கத்தை மறைப்பவை, போலியான பொருட்களை விளம்பரப்படுத்துபவை, அல்லது எங்கள் விளம்பரக் கொள்கைகளை மீறுபவையான விளம்பரங்கள் உங்கள் பாதுகாப்பையும் ஆன்லைன் அனுபவத்தையும் பாதிக்கலாம். இந்தப் பிரச்சனையை மிகத் தீவிரமாகக் கவனித்துவருகிறோம். நேரடி மதிப்பாய்வாளர்கள் மற்றும் அதிநவீன மென்பொருள் தடுப்புகள் மூலம், சராசரியாக நொடிக்கு 100 விளம்பரங்கள் என்ற கணக்கில், ஒவ்வோர் ஆண்டும் பல பில்லியன் கணக்கான மோசமான விளம்பரங்களைத் தடுக்கிறோம். மனதைப் புண்படுத்தும் விளம்பரங்களைப் பற்றிப் புகாரளிப்பதற்கும் நீங்கள் பார்க்க விரும்பும் விளம்பரங்களின் வகைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உங்களுக்குக் கருவிகளையும் வழங்குகிறோம். அனைவரும் இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வசதியாக, எங்களின் ஆய்வறிக்கைகளையும் சிறந்த நடைமுறைகளையும் தொடர்ந்து வெளியிடுகிறோம்.

 • தரவை நேரடியாக அணுக, அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை

  பயனர் தரவையோ அதைச் சேமித்து வைத்திருக்கும் எங்கள் சேவையகங்களையோ “பின்வாசல் வழியாக” அணுகுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி வழங்குவதில்லை. அதாவது, எங்கள் பயனர்களின் தகவலை அணுக அமெரிக்கா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்த எந்த அரசாங்க நிறுவனத்துக்கும் அனுமதி இல்லை. பயனர் தரவு தொடர்பாகப் பெறும் எல்லாக் கோரிக்கைகளையும் மதிப்பாய்வு செய்வோம், மிகவும் பொதுப்படையாக இருக்கும் கோரிக்கைகளைத் தள்ளுபடி செய்வோம். மேலும் தரவுக் கோரிக்கைகளைப் பற்றி எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெளிவான தகவல்களையும் வழங்கி வருகிறோம்.

 • Google Play Protect மூலம் உங்கள் Android சாதனம், ஆப்ஸ், தரவு ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

  Google Play Protect ஆனது உங்கள் Android சாதனத்தில் உள்ளமைக்கப்பட்டிருக்கும். மேலும் உங்கள் சாதனம், தரவு, ஆப்ஸ் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தொடர்ந்து பின்னணியில் செயல்படும். ஆப்ஸை நீங்கள் எந்த மூலத்திலிருந்து பதிவிறக்கினாலும், பதிவிறக்குவதற்கு முன்பும் பதிவிறக்கும் போதும் பதிவிறக்கிய பிறகும் அது ஸ்கேன் செய்யப்படும்.

 • தனிப்பயனாக்கிய பாதுகாப்பு அறிவிப்புகள் சாத்தியமான சிக்கல்கள் பற்றி உங்களுக்கு விழிப்பூட்டலை அனுப்பி, நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும்

  சந்தேகத்திற்குரிய உள்நுழைவு தீங்கிழைக்கும் இணையதளம், கோப்பு அல்லது ஆப்ஸ் போன்று, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் நினைக்கும் எதையாவது கண்டறிந்தால், முன்னெச்சரிக்கையாக உங்களுக்குத் தெரிவித்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவ வழிகாட்டுதலை வழங்குவோம். எடுத்துக்காட்டாக, Gmailலில் உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஓர் இணைப்பை நீங்கள் பதிவிறக்குவதற்கு முன்போ அல்லது நீங்கள் இணைந்திருக்காத சாதனத்தில் இருந்து உங்கள் கணக்கில் யாரேனும் உள்நுழைந்தாலோ உங்களை எச்சரிப்போம். உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரியதாக எதையேனும் நாங்கள் கண்டறியும் போது, ஒரே கிளிக்கில் உங்கள் கணக்கை நீங்கள் பாதுகாத்துக் கொள்வதற்காக, உங்கள் இன்பாக்ஸிற்கோ அல்லது மொபைலுக்கோ ஓர் அறிவிப்பையும் அனுப்புவோம்.

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.