உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் யாருக்கும் விற்க மாட்டோம்

Google தயாரிப்புகள், கூட்டாளர் இணையதளங்கள், மொபைல் ஆப்ஸ் ஆகியவற்றில் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட, தரவைப் பயன்படுத்துகிறோம். இந்த விளம்பரங்கள் எங்கள் சேவைகள் இயங்குவதற்கான நிதியை ஈட்டித் தருவதுடன், அவற்றை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன. ஆனால், தனிப்பட்ட தகவல் ஒருபோதும் விற்பனைக்கானது அல்ல. எந்த விளம்பரங்களைப் பார்க்கலாம் என்பதை இன்னும் நீங்கள் சிறப்பாகக் கட்டுப்படுத்தும் வகையில், வலிமையான விளம்பர அமைப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

Google Ads செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்ளுதல்

 • மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள விளம்பரங்களை உங்களுக்கு வழங்க, தரவைப் பயன்படுத்துகிறோம்

  எங்கள் சேவைகளை இன்னும் பயனுள்ளதாக மாற்றவும் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் எங்கள் சேவைகளை உருவாக்குவதற்கு உதவும் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டவும் தரவைப் பயன்படுத்துகிறோம். விளம்பரதாரர்களுக்கோ அல்லது பிற மூன்றாம் தரப்பினருக்கோ உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாமல், உங்கள் தேடல்கள் மற்றும் இருப்பிடம், நீங்கள் பயன்படுத்திய இணையதளங்கள் மற்றும் ஆப்ஸ், நீங்கள் பார்த்த வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள், உங்கள் வயது, பாலினம் போன்று நீங்கள் எங்களிடம் வழங்கிய அடிப்படைத் தகவல் உள்ளிட்ட தரவை நாங்கள் பயன்படுத்தக்கூடும்.

  உங்கள் விளம்பர அமைப்புகளின் அடிப்படையிலும், நீங்கள் உள்நுழைந்துள்ளீர்களா இல்லையா என்பதைப் பொறுத்தும், உங்களின் எல்லாச் சாதனங்களிலும், விளம்பரங்களைக் காட்டுவதற்காக எங்களுடன் கூட்டாளராக உள்ள தளங்கள் அனைத்திலும் விளம்பரங்களைக் காட்ட, இந்தத் தரவு பயன்படுத்தப்படும். எனவே, பணியிடத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி பயணத்தைத் திட்டமிடுவதற்கான இணையதளத்தைப் பார்த்திருந்தால், அன்றிரவே உங்கள் மொபைலில் சென்னைக்கான பேருந்துக் கட்டணங்களைப் பற்றி Google வழங்கும் பிற விளம்பரங்களை நீங்கள் பார்க்கலாம்.

 • விளம்பரங்களைக் காட்டுவதற்காக, விளம்பரதாரர்களிடமிருந்து பணம் பெறுகிறோம்

  எங்கள் சேவைகளிலும் எங்களுடன் கூட்டாளராக உள்ள தளங்களிலும் ஆப்ஸிலும் விளம்பரப்படுத்துவதன் மூலம் நாங்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறோம் என்பதைப் பற்றி வெளிப்படையான தகவலை வழங்க விரும்புகிறோம். சில வகையான விளம்பரங்களுக்கு, விளம்பரதாரர்கள் அந்த விளம்பரங்களின் பிளேஸ்மென்ட்டுக்கு மட்டுமே எங்களுக்குப் பணம் செலுத்துகின்றனர். மற்ற வகையான விளம்பரங்களுக்கு, அவர்கள் அந்த விளம்பரங்கள் எப்படிச் செயல்படுகிறதோ அதற்கான பணத்தைச் செலுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் யாராவது விளம்பரத்தைப் பார்ப்பது அல்லது தட்டுவது அல்லது ஆப்ஸைப் பதிவிறக்குவது அல்லது கோரிக்கைப் படிவத்தைப் பூர்த்திசெய்வது போன்ற செயலை மேற்கொள்வது ஆகியவை அதில் அடங்கலாம்.

 • விளம்பரதாரர்களின் விளம்பரங்களின் செயல்திறனைப் பற்றிய விவரங்களை அவர்களுக்கு வழங்குகிறோம்

  விளம்பரதாரர்களின் விளம்பரங்களின் செயல்திறனைப் பற்றிய விவரங்களை அவர்களுக்கு வழங்கினாலும் கூட, அவற்றில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எவற்றையும் சேர்க்க மாட்டோம். உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டும் செயல்முறையின் ஒவ்வொரு படியிலும், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வைத்திருப்போம்.

Google விளம்பரத்தில் பெறும் அனுபவம் தொடர்பான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்குதல்

 • தனிப்பயனாக்கிய விளம்பரங்களைக் காட்ட Google எந்தெந்தத் தகவலைப் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம்

  உங்களுக்குக் காட்டும் விளம்பரங்களைத் தனிப்பயனாக்க நாங்கள் எந்தத் தரவைப் பயன்படுத்தலாம் என்பதை விளம்பர அமைப்புகளில் எளிதில் கட்டுப்படுத்தலாம். நீங்கள் Google கணக்கில் சேர்த்துள்ள தகவல், உங்கள் ஆர்வங்களைப் (உங்கள் செயல்பாடு மூலம் பெற்றது) பற்றிய எங்களின் கணிப்பு, விளம்பரங்களைக் காட்டுவதற்காக எங்களுடன் கூட்டாளராக உள்ள பிற விளம்பரதாரர்களுடனான ஊடாடல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

  உங்கள் செயல்பாட்டை அடிப்படையாக வைத்தே உள்ளடக்கத்தைக் காட்டுகிறோம். ஆனால், இதை எப்போதும் நீங்களே கட்டுப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சமீபத்திய கால்பந்து போட்டியின் ஹைலைட்ஸை YouTubeல் பார்த்ததாலோ “எனக்கு அருகிலுள்ள கால்பந்து மைதானங்கள்” என Google தேடலில் தேடியதாலோ நீங்கள் ஒரு கால்பந்து ரசிகர் என நாங்கள் நினைக்கக்கூடும். மேலும், எங்கள் கூட்டாளராக உள்ள விளம்பரதாரர்களின் தளத்தை நீங்கள் பார்த்தால், அதன் அடிப்படையில் விளம்பரங்களை நாங்கள் பரிந்துரைக்கலாம்.

  விளம்பரத் தனிப்பயனாக்கம் இயக்கத்தில் இருக்கும் போது, வயது, பாலினம், ஊகித்த ஆர்வம் அல்லது விளம்பரதாரருடனான முந்தைய தொடர்பு போன்ற எந்தத் தகவலையும் தேர்வுசெய்யலாம், அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம், விளம்பரத் தனிப்பயனாக்கத்தை முடக்கலாம் அல்லது தனிப்பயனாக்கிய விளம்பரங்களையே முழுவதுமாக முடக்கலாம். அதன்பிறகும் விளம்பரங்கள் காட்டப்படும். ஆனால் அவை உங்களுக்கு அதிகம் தொடர்புடையதாக இல்லாமல் போகலாம்.

 • உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதற்கு என்ன வகையான தரவைப் பயன்படுத்துகிறோம் என்பதை அறிதல்

  உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதற்கு நாங்கள் என்ன வகையான தரவைப் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்கு, நாங்கள் உதவ விரும்புகிறோம். ஒரு விளம்பரம் ஏன் தோன்றுகிறது என்பதைப் பற்றி அறிய, “இந்த விளம்பரம் ஏன் காட்டப்படுகிறது” என்ற அம்சம் உங்களுக்கு உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் கேமராவைத் தேடியதால், புகைப்படக்கலை தொடர்பான இணையதளங்களைப் பார்வையிட்டதால் அல்லது கேமராக்களுக்கான விளம்பரங்களைக் கிளிக் செய்துள்ளதால், கேமராக்களுக்கான அந்த விளம்பரத்தை நீங்கள் பார்க்கலாம். அல்லது உணவகத்திற்கான விளம்பரத்தை நீங்கள் பார்த்தால், உங்கள் இருப்பிடம் அல்லது மொபைல் ஆப்ஸ் செயல்பாட்டின் காரணமாக இருக்கலாம். இந்த வகையான தரவு, பயனர்களுக்குப் பயனளிக்கும் விஷயங்களைப் பற்றிய விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட உதவுகிறது. ஆனால் இந்தத் தனிப்பட்ட தகவலை விளம்பரதாரர்களுடன் பகிர மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

  தேடல், YouTube, Gmail, Play மற்றும் ஷாப்பிங் போன்ற எங்கள் சேவைகளில் உள்ள தகவல் ஐகான் மூலமாக, இந்த அம்சத்தை நீங்கள் அணுகலாம். கூட்டாளர் தளங்களில் அல்லது ஆப்ஸில் நீங்கள் பார்க்கும் பெரும்பான்மையான விளம்பரங்களுக்கு, அதே ஐகான் மூலமாக "இந்த விளம்பரம் ஏன் காட்டப்படுகிறது" அம்சத்தை அணுகலாம்.

 • நீங்கள் பார்க்க விரும்பாத விளம்பரங்களை அகற்றலாம்

  எங்களுடன் கூட்டாளராக உள்ள இணையதளங்கள் மற்றும் ஆப்ஸ் மூலமாக நாங்கள் காட்டும் பல விளம்பரங்களை, பார்க்கும் போதே நீங்கள் அகற்றிவிடலாம். விளம்பரத்தின் மூலையில் உள்ள X என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடர்புடையதாக இல்லாத விளம்பரங்களை அகற்றலாம். எடுத்துக்காட்டாக, புதிய காரை வாங்க நீங்கள் ஆர்வமாக இருக்கும் போது, கார் விளம்பரங்கள் உதவியாக இருக்கலாம், ஆனால் புதிய காரை வாங்கிய பிறகு, அநேகமாக வாங்கிய கார் தொடர்பாக Google வழங்கும் விளம்பரங்களை அதிகமாகப் பார்க்க விரும்பமாட்டீர்கள்.

  நீங்கள் உள்நுழைந்திருந்தால், உங்கள் விளம்பர அமைப்புகளின் அடிப்படையில், இந்தக் கட்டுப்பாடானது நீங்கள் உள்நுழைந்துள்ள சாதனங்கள், எங்களுடன் கூட்டாளராக உள்ள இணையதளங்கள் மற்றும் ஆப்ஸ் என அனைத்திலும் பயன்படுத்தப்படும். Chrome மற்றும் பெரும்பாலான பிற உலாவிகளில் பாப் அப் செய்யப்படும் விளம்பரங்களையும் நீங்கள் முடக்கலாம்.

 • குறிப்பிட்ட விளம்பரதாரர்களின் விளம்பரங்களை முடக்குதல்

  Google தயாரிப்புகளிலும் இணையத்திலும் காட்டப்படும் விளம்பரங்களை நீங்களே கட்டுப்படுத்தலாம். சில சமயங்களில், விளம்பரதாரர்களின் தளங்களை நீங்கள் பார்வையிடும் போது, அவர்கள் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டி, மீண்டும் வந்து பார்வையிடுமாறு உங்களை ஊக்குவிக்கலாம். எடுத்துக்காட்டாக, முன்பு நீங்கள் ஷாப்பிங் செய்த ஷூக்களுக்கான விளம்பரத்தைப் பார்க்கும் போது, மீண்டும் வந்து ஷூக்களை வாங்க ஊக்குவிக்கலாம். ஏதேனும் காரணத்திற்காக இவற்றை நீங்கள் பார்க்க விரும்பவில்லை எனில், தேடல், YouTube, Gmail மூலம் எங்கள் Google தயாரிப்புகள் முழுவதும் உங்களைப் பின்தொடரும் குறிப்பிட்ட விளம்பரதாரர்களின் அந்த விளம்பரங்களை முடக்கிக் கொள்ளலாம். மேலும் இணையம் முழுவதிலும், விளம்பரங்களைக் காட்டுவதற்காக எங்களுடன் கூட்டாளராக உள்ள தளங்களிலும் ஆப்ஸிலும் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கும் இந்த அமைப்பு பொருந்தும்.

  உள்நுழைந்திருக்கும் போதும் விளம்பர அமைப்புகளுக்குச் சென்றும், விளம்பரங்களைக் காட்டும் Google சேவைகளில் குறிப்பிட்ட விளம்பரதாரர்களின் விளம்பரங்களை முடக்கலாம்.

விளம்பரங்களை மேலும் பயனுள்ளதாக்குவதற்குத் தரவைப் பயன்படுத்துதல்

 • தனிப்பட்ட முறையில் மிகவும் பொருத்தமான விளம்பரங்களைக் காட்டுவதற்காக, உங்கள் செயல்பாட்டை தேடல் பயன்படுத்தும்

  நீங்கள் Google தேடலைப் பயன்படுத்தும் போது, தொடர்புடைய தேடல் முடிவுகளுடன் சேர்ந்து விளம்பரங்கள் காட்டப்படலாம். பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் நீங்கள் தேடிய சொல் மற்றும் உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, “சைக்கிளிங்” என தேடுகிறீர்கள் எனில், உங்களுக்கு அருகில் விற்பனைக்கு உள்ள பைசைக்கிள்களைப் பற்றிய விளம்பரங்களைக் காணலாம்.

  சில நேரங்களில், இன்னும் பயனுள்ள விளம்பரங்களைக் காட்டுவதற்காக, உங்களின் முந்தைய தேடல்கள் அல்லது நீங்கள் பார்த்த தளங்கள் போன்ற கூடுதல் தரவைப் பயன்படுத்துவோம். ஏற்கனவே “சைக்கிளிங்” என்பதைத் தேடிவிட்டு, இப்போது “விடுமுறை” என்பதைத் தேடுகிறீர்கள் எனில், விடுமுறையில் சைக்கிளிங் செல்வதற்கான இடங்களைப் பற்றிய தேடல் விளம்பரங்களைக் காணலாம்.

 • உங்கள் செயல்பாட்டின் அடிப்படையிலே Gmailலில் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன

  உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய தரவின் அடிப்படையிலேயே, Gmailலில் விளம்பரங்களைப் பார்க்கிறீர்கள். எடுத்துக்காட்டாக, YouTube அல்லது தேடல் போன்ற பிற Google சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டிற்கு ஏற்ப Gmailலில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களின் வகைகள் மாறலாம். விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதற்காக, உங்கள் இன்பாக்ஸில் உள்ள குறிச் சொற்களையோ மெசேஜ்களையோ Google பயன்படுத்துவதில்லை. விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதற்காக, யாரும் உங்கள் மின்னஞ்சல்களைப் படிப்பதில்லை.

 • Google Play விளம்பரங்கள், நீங்கள் விரும்பக்கூடிய ஆப்ஸைக் கண்டறிய உதவும்

  Google மற்றும் பிற டெவெலப்பர்களின் மில்லியன் கணக்கான ஆப்ஸை எங்கள் Google Play ஸ்டோரில் கண்டறியலாம். Android சாதனத்தில் உலாவும் போது, நீங்கள் தேடிய வார்த்தைகள், நீங்கள் நிறுவியுள்ள அல்லது பயன்படுத்தியுள்ள ஆப்ஸ் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் போன்றே உள்ள பிற ஆப்ஸ் ஆகியவற்றின் அடிப்படையில் விளம்பரங்கள் காட்டப்படலாம். எடுத்துக்காட்டாக, “பயணத்துக்கான ஆப்ஸ்” எனத் தேடினால், பயணத்தைத் திட்டமிடுவதற்கான ஆப்ஸைப் பற்றிய விளம்பரத்தை நீங்கள் பார்க்கக்கூடும்.

 • மிகவும் பொருத்தமான விளம்பரங்களைக் காட்டுவதற்காக, நீங்கள் இதுவரை தேடிய மற்றும் பார்த்த விஷயங்களை YouTube பயன்படுத்தும்

  YouTubeல் வீடியோக்களைப் பார்க்கும் போது, வீடியோ பக்கத்தில் வீடியோ இயங்குவதற்கு முன்பாக விளம்பரங்களைப் பார்க்கலாம் அல்லது முகப்புப்பக்கத்தில் தொடர்புடைய வீடியோக்களைப் பார்க்கலாம். நீங்கள் பார்த்த வீடியோக்கள், நீங்கள் தேடிய விஷயங்கள் அல்லது இடங்கள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸின் அடிப்படையில் விளம்பரங்கள் காட்டப்படலாம்.

  எடுத்துக்காட்டாக, “வீட்டு அலங்காரம்” எனத் தேடினாலோ அல்லது "நீங்களே செய்து பாருங்கள்" போன்ற வீடியோக்களைப் பார்த்தாலோ, வீட்டை மேம்படுத்துவது தொடர்பான விளம்பரத்தை நீங்கள் பார்க்கக்கூடும். இந்த விளம்பரங்கள், நீங்கள் பார்க்கும் வீடியோக்களின் தயாரிப்பாளர்களை ஆதரிக்க உதவலாம்.

  பார்க்க விருப்பமில்லை எனில் பெரும்பாலான YouTube விளம்பரங்களைத் தவிர்க்கலாம் அல்லது விளம்பரமின்றி YouTube வீடியோக்களைப் பார்த்து மகிழ, YouTube Premiumமில் குழுசேரலாம்.

 • ஷாப்பிங் விளம்பரங்கள் நீங்கள் தேடுவதைக் கண்டறிய உதவும்

  Google தேடலில் நீங்கள் ஒரு தயாரிப்பைத் தேடும் போது, சில சமயங்களில் தொடர்புடைய தேடல் முடிவுகளுடன் ஷாப்பிங் விளம்பரங்கள் காட்டப்படும். தயாரிப்புகளை விற்பனை செய்யும் வணிகங்கள், தேடுவதை நீங்கள் விரைவாகக் கண்டறிந்து, அதை ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள ஸ்டோரில் வாங்குவதை எளிதாக்க, ஷாப்பிங் விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றன. சற்றுமுன் நீங்கள் தேடிய தயாரிப்பு, உங்கள் இருப்பிடம், நீங்கள் முன்பு தேடிய ஆன்லைன் ஸ்டோர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விளம்பரங்கள் காட்டப்படும்.

  எடுத்துக்காட்டாக, நீங்கள் “லெதர் சோஃபா” எனத் தேடினால், உங்களுக்கு அருகில் லெதர் சோஃபாக்களை விற்பனை செய்யும் ஃபர்னிச்சர் ஸ்டோர்களின் இருப்பிடங்கள், சோஃபாவின் விலை, படங்கள் ஆகியவை அடங்கிய விளம்பரங்களைப் பார்க்கலாம்.

 • உங்களுக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள விளம்பரங்களை உருவாக்க, கூட்டாளர் இணையதளங்களும் ஆப்ஸும் ஆன்லைனில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டைப் பயன்படுத்தும்

  விளம்பரங்களைக் காட்டுவதற்காக பல இணையதளங்களும் மொபைல் ஆப்ஸும் எங்களுடன் கூட்டாளராக இணைந்துள்ளன. இந்தக் கூட்டாளர்களின் தளங்களிலும் ஆப்ஸிலும் காட்டப்படும் விளம்பரங்கள், நீங்கள் படிக்கின்ற அல்லது பார்க்கின்ற உள்ளடக்கம், எங்கள் பயனர்கள் எங்களுடன் பகிர்ந்துள்ள தனிப்பட்ட தகவலின் அடிப்படையிலான பார்வையாளர்கள் “வகைகள்”, ஆன்லைனில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் குறித்து நாங்கள் சேகரிக்கும் தரவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். எடுத்துக்காட்டாக, ”பயணத்தில் ஆர்வங்காட்டும் 35லிருந்து 44 வயதிற்குட்பட்ட பெண்கள்”.

  Google கணக்கில் உள்நுழைந்திருக்கும் போது, நீங்கள் பார்த்த தளங்கள் அல்லது Chromeமில் மேற்கொண்ட உலாவல் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும் விளம்பரங்கள் உங்களுக்குக் காட்டப்படலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் ஆன்லைன் ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்துவிட்டு, வாங்காமல் விட்ட ஹைக்கிங் ஷூ பற்றிய விளம்பரங்களை நீங்கள் பார்க்கக்கூடும். இருந்தாலும் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது பில்லிங் தகவல் போன்ற தனிப்பட்ட தகவலை வெளியிடாமேலேயே இதனைச் செய்கின்றோம்.

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.