அனைவருக்கும் ஏற்ற தனியுரிமை அம்சங்களை உருவாக்குகிறோம்.

Google சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த உங்கள் தரவுகள் உதவுகின்றன. ஆனால் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பமாகும். நாங்கள் எந்தத் தரவைச் சேகரிக்கிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கிறோம். மேலும், உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்ய உங்கள் Google கணக்கில் சக்திவாய்ந்த தரவுக் கட்டுப்பாடுகளையும் உருவாக்குகிறோம்.

தரவு வெளிப்படைத்தன்மை

நாங்கள் பயன்படுத்தும் தரவையும் அதற்கான காரணத்தையும் புரிந்து கொள்வது எளிது

Google சேவைகளைப் பயன்படுத்தும் போது, எங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் தரவை வழங்குகிறீர்கள். எனவே, உங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சிறப்பாகச் செயல்படும் வகையில் எங்கள் சேவைகளை உருவாக்க, நாங்கள் எந்த வகையான தரவைச் சேகரிக்கிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றிய விவரத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது எங்கள் கடமையாகும்.

மேலும் அறிக

தனியுரிமைக் கட்டுப்பாடுகள்

முழுமையான கட்டுப்பாடு உங்களுடையது

ஒரே தனியுரிமை அமைப்பு அனைவருக்கும் பொருந்தாது என்பதை நாங்கள் அறிவோம். எனவேதான் வலிமையான, எளிமையான தனியுரிமைக் கருவிகளை உங்கள் Google கணக்கில் கட்டமைத்துள்ளோம். இவற்றின் மூலம் உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளையும், எங்கள் சேவைகள் முழுவதிலும் எந்த வகையான தரவு சேகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நீங்களே தேர்வுசெய்து கொள்ளலாம்.

மேலும் அறிக

விளம்பரங்களும் தரவும்

உங்கள் தனிப்பட்ட தகவல் யாருக்கும் விற்கப்படவில்லை

Google தயாரிப்புகள், கூட்டாளர் இணையதளங்கள், மொபைல் ஆப்ஸ் ஆகியவற்றில் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட நாங்கள் பயனர் தரவைப் பயன்படுத்துகிறோம். இந்த விளம்பரங்கள் எங்கள் சேவைகள் இயங்குவதற்கான நிதியை ஈட்டித் தருவதுடன், அவற்றை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன. ஆனால், உங்கள் தனிப்பட்ட தகவல் விற்பனைக்கானது அல்ல. எந்த விளம்பரங்களைப் பார்க்கலாம் என்பதை நீங்கள் இன்னும் சிறப்பாகக் கட்டுப்படுத்தும் வகையில், வலிமையான விளம்பர அமைப்புகளை வழங்குகிறோம்.

மேலும் அறிக

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.