தினமும்
பணம் செலுத்துவதற்கான மிகவும் பாதுகாப்பான வழி.

Google Payயில் உள்ள உள்ளமைந்த பாதுகாப்பு அம்சங்கள் பேமெண்ட்டுக்கு முன்பும் பின்பும் பேமெண்ட்டின்போதும் பாதுகாப்பளிக்கின்றன. எனவே இதைப் பயன்படுத்துவது கார்டை ஸ்வைப் செய்வது அல்லது ரொக்கமாகச் செலுத்துவதைவிடப் பாதுகாப்பானது.

உங்கள் பேமெண்ட் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்

உங்கள் பேமெண்ட் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்

Google Payயில் நீங்கள் தட்டிப் பணம் செலுத்தும்போது உங்களின் உண்மையான கார்டு எண்ணுக்குப் பதிலாக விர்ச்சுவல் கணக்கு எண் அனுப்பப்படும். இதனால் உங்கள் பேமெண்ட் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

நீங்கள் பணம் செலுத்தும் முன்பே செயல்படும் உள்ளமைந்த பாதுகாப்பு வசதி

நீங்கள் பணம் செலுத்தும் முன்பே செயல்படும் உள்ளமைந்த பாதுகாப்பு வசதி

மற்றொரு அடுக்குப் பாதுகாப்பைச் சேர்க்க Google Payக்குத் திரைப்பூட்டையும் அமைக்கலாம். நீங்கள் தட்டிப் பணம் அனுப்பும் முன்பு தனிப்பட்ட பின்,* பேட்டர்ன் அல்லது கைரேகையைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்தை அன்லாக் செய்ய வேண்டியிருக்கும். இதனால் இன்னும் பாதுகாப்பாகப் பர்ச்சேஸ் செய்யலாம்.

*அன்லாக் செய்வதற்கான தேவைகள் நாட்டைப் பொறுத்து மாறுபடும்.

எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் மொபைலைப் பூட்டலாம்

எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் மொபைலைப் பூட்டலாம்

உங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ Googleளின் Find My Deviceஸைப் பயன்படுத்தி நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அதைப் பூட்டலாம், உங்கள் Google கணக்கிலிருந்து வெளியேறலாம், தரவையும் அழிக்கலாம். இதனால் உங்கள் பேமெண்ட் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

தொழில்துறையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள்

தொழில்துறையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள்

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள பேமெண்ட் முறைகள் Googleளின் தனிப்பட்ட சேவையகங்களில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. நீங்கள் ஆன்லைனில் பணம்செலுத்தும்போது பேமெண்ட்டைப் பாதுகாக்க, பரிமாற்றத்தின்போது Google Pay உங்கள் தரவை என்க்ரிப்ட் செய்கிறது.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் விற்பதில்லை

உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்கமாட்டோம். Google Payயைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பினரிடம் விற்கப்படாது.

Google Pay
Google Pay மூலம் விரைவாகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்தலாம்.
எங்களின் ஒவ்வொரு தயாரிப்பும்
எவ்வாறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.