Google Assistant உங்கள் தகவல்களைத்
தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும்
வைத்திருக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Google Assistantடைப் பயன்படுத்தும்போது எங்களின் மீது நம்பிக்கை வைத்து உங்கள் தகவல்களை வழங்குகிறீர்கள். அவற்றை மதித்துப் பாதுகாப்பது எங்களின் பொறுப்பாகும். தனியுரிமை என்பது தனிப்பட்டது. அதனால்தான் உங்களுக்கேற்றதை நீங்கள் தேர்வுசெய்வதற்கு உதவ எளிதான தனியுரிமைக் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளோம். Google Assistant எவ்வாறு செயல்படுகிறது, உள்ளமைந்த தனியுரிமைக் கட்டுப்பாடுகள், பொதுவான கேள்விகளுக்கான பதில்கள், இன்னும் பலவற்றைப் பற்றி இந்தப் பக்கத்தில் மேலும் அறிந்துகொள்ளலாம்.

Assistant பிராதான வீடியோ

இயக்கும் வரை காத்திருப்புப் பயன்முறையிலேயே இருக்கும்

நீங்கள் இயக்கும் வரை (எ.கா. “Ok Google” என்று கூறுதல்) காத்திருப்புப் பயன்முறையில் இருக்குமாறு Google Assistant வடிவமைக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பயன்முறையில் இருக்கும்போது உங்கள் உரையாடல்களை Googleளுக்கோ வேறு எவருக்கோ Assistant அனுப்பாது.

இயக்கப்பட்டதை உணர்ந்ததும், Google Assistant காத்திருப்புப் பயன்முறையில் இருந்து வெளியேறி உங்கள் கோரிக்கையை Google சேவையகங்களுக்கு அனுப்பும். "Ok Google" போன்ற ஏதேனும் சத்தத்தை அது கேட்டாலோ நீங்கள் தெரியாமல் அதை இயக்கினாலோ கூட இவ்வாறு நடக்கலாம்.

ஆடியோ ரெக்கார்டிங்குகள், இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு, விளம்பரப் பிரத்தியேகமாக்கல் ஆகியவற்றை Google Assistant எவ்வாறு கையாளுகிறது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

நான் பேசும் அனைத்தையும் Google Assistant ரெக்கார்டு செய்யுமா?

இல்லை. நீங்கள் இயக்கும் வரை (எ.கா. “Ok Google” என்று கூறுதல்) காத்திருப்புப் பயன்முறையில் இருக்குமாறு Google Assistant வடிவமைக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பயன்முறையில் இருக்கும்போது உங்கள் உரையாடல்களை Googleளுக்கோ வேறு எவருக்கோ Google Assistant அனுப்பாது. இயக்கப்பட்டதை உணர்ந்ததும், Google Assistant காத்திருப்புப் பயன்முறையில் இருந்து வெளியேறி உங்கள் கோரிக்கையை Google சேவையகங்களுக்கு அனுப்பும். "Ok Google" போன்ற ஏதேனும் சத்தத்தை அது கேட்டாலோ நீங்கள் தெரியாமல் அதை இயக்கினாலோ கூட இவ்வாறு நடக்கலாம்.

எனது Google Assistantடை எப்படி இயக்குவது?

உங்கள் சாதனத்தைப் பொறுத்து Assistantடை ஒரு சில வழிகளில் இயக்கலாம். உதாரணமாக, “Ok Google” என்று கூறுவதன் மூலமோ உங்கள் மொபைலின் பவர்/ஹோம் பட்டனை அழுத்துவதன் மூலமோ Assistantடை இயக்கலாம்.

Google Assistant இயக்கத்தில் இருப்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?

உங்கள் சாதனத்தில் உள்ள ஸ்டேட்டஸ் இண்டிக்கேட்டர் (திரையிலுள்ள இண்டிக்கேட்டர், சாதனத்தின் மேற்புறம் விட்டுவிட்டு ஒளிரும் LEDகள் போன்றவை) மூலம் Google Assistant இயக்கப்பட்டுள்ளதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

சில சமயங்களில் நான் இயக்க நினைக்காதபோதும் Google Assistant இயக்கப்படுவது ஏன்?

நீங்கள் இயக்க நினைக்காதபோதும் Google Assistant இயக்கப்படக்கூடும். நீங்கள் அதனிடம் உதவி கேட்கிறீர்கள் என அது தவறாகக் கண்டறிவதே இதற்குக் காரணமாகும். “Ok Google” போன்று ஏதேனும் சத்தம் கேட்பது, நீங்கள் தவறுதலாக அதை இயக்கிவிடுவது போன்ற சூழல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுபோன்ற எதிர்பாராத சூழல்களில் இயக்கப்படுவதைக் குறைக்கும் வகையில் எங்கள் சிஸ்டங்களை மேம்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு நிகழ்ந்து 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' இயக்கப்பட்டிருந்தால், “Ok Google, உனக்குச் சொல்லல” என்று கூறுங்கள். நீங்கள் கூறியவற்றை எனது செயல்பாடுகள் பக்கத்தில் இருந்து Google Assistant நீக்கிவிடும். எப்போது வேண்டுமானாலும் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உங்கள் Google Assistant உரையாடல்களைப் பார்க்கலாம் நீக்கலாம். நீங்கள் இயக்க நினைக்காதபோது Google Assistant இயக்கப்பட்டு அதேசமயம் 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' அமைப்பு முடக்கப்பட்டிருந்தால் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் Google Assistant உரையாடல்கள் சேமிக்கப்படாது.

உங்களின் சூழலுக்கு ஏற்ப Google Assistantடை அமைக்க, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களுக்கான Google Home ஆப்ஸ் மூலம் இயக்கக் கட்டளைகளுக்கு ("Ok Google" போன்றவை) உங்கள் Assistant எவ்வளவு உணர்திறன்மிக்கதாக இருக்க வேண்டும் என்பதை மாற்றிக் கொள்ளலாம்.

Google Assistant காத்திருப்புப் பயன்முறையில் இருக்கும்போது என்ன செய்யும்?

நீங்கள் இயக்கும் வரை காத்திருப்புப் பயன்முறையில் இருக்குமாறு Google Assistant வடிவமைக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பயன்முறையில், சில வினாடிகள் கொண்ட சிறிய ஆடியோ துணுக்குகளை (எ.கா. நீங்கள் “Ok Google” என்று கூறும்போது) சாதனம் செயலாக்கிடும். சாதனம் செயலாக்கப்படவில்லை என அறிந்தால் அந்த ஆடியோ துணுக்குகளை Googleளுக்கு அனுப்பவோ சேமிக்கவோ செய்யாது.

இயக்கப்பட்டதை Google Assistant உணர்ந்தால் என்ன நிகழும்?

இயக்கப்பட்டதை உணர்ந்ததும் Assistant காத்திருப்புப் பயன்முறையில் இருந்து வெளியேறும் ("Ok Google" போன்ற ஏதேனும் சத்தத்தை அது கேட்டாலோ நீங்கள் தெரியாமல் அதை இயக்கினாலோ கூட இவ்வாறு நடக்கலாம்). உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, நீங்கள் கூறுவதை உங்கள் சாதனம் ரெக்கார்டு செய்து ஆடியோ ரெக்கார்டிங்கை Google சேவையகங்களுக்கு அனுப்பும். கோரிக்கையை முழுமையாகப் பெறும் பொருட்டு, இயக்குவதற்கு முன்பாகச் சில வினாடிகளில் இருந்து ரெக்கார்டு செய்யப்படக்கூடும்.

Google சேவையகங்களுக்கு அனுப்பப்படும் ஆடியோ ரெக்கார்டிங்குகள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். இயல்பாக உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகளை நாங்கள் சேமிக்கமாட்டோம். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அமைப்பின் கீழுள்ள “குரல் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்குகள்” செக்பாக்ஸைப் பார்த்து உங்கள் தற்போதைய அமைப்பைத் தெரிந்துகொள்ளலாம்.

தனியுரிமைக்கென்று வடிவமைக்கப்பட்டது

இயல்பாக உங்கள் Google Assistant ஆடியோ ரெக்கார்டிங்குகளை நாங்கள் சேமித்து வைக்கமாட்டோம். Google Assistant உங்களுக்காகச் செயல்படுவதற்கு உங்கள் தரவு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ள, “Google Assistantடில் உங்கள் தரவு” என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்.

எனது தரவை Google Assistant எப்படிப் பயன்படுத்துகிறது?

உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்துவது உட்பட, நீங்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு பதில் அளிப்பதற்கு இணைக்கப்பட்ட உங்கள் சாதனங்கள் மற்றும் சேவைகளில் இருந்து உங்கள் வினவல்களையும் தகவல்களையும் Assistant பயன்படுத்துகிறது. இணைக்கப்பட்ட உங்கள் சாதனங்கள் மற்றும் சேவைகளில் இருந்து பெறும் தகவல்களின் உதாரணங்கள்: இருப்பிடம், தொடர்புகள், சாதனப் பெயர்கள், பணிகள், நிகழ்வுகள், அலாரங்கள், நிறுவப்பட்ட ஆப்ஸ் மற்றும் பிளேலிஸ்ட்கள்.   

Googleளின் தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளபடி, Google தயாரிப்புகள், சேவைகள் மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்தவும் உங்கள் தரவு பயன்படுகிறது. தரத்தைச் சரிபார்த்து Assistantடை மேம்படுத்த உதவ, உங்கள் Assistantடின் வினவல்களையும் தொடர்புடைய தகவல்களையும் மதிப்பாய்வாளர்கள் படித்து, குறிப்பு எடுத்துச் செயலாக்குவார்கள். இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கிறோம். மதிப்பாய்வாளர்கள் உங்கள் வினவல்களைப் பார்க்கும் முன்போ குறிப்பு எடுக்கும் முன்போ அவற்றை Google கணக்கில் இருந்து இணைப்பு நீக்குவதும் இதில் அடங்கும்.  

உங்கள் தரவுடன் Google Assistant எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி மேலும் அறிக. Googleளின் தனியுரிமைக் கொள்கைக்குச் சென்று உங்கள் தரவை Google எப்படிப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறது என்பது பற்றி மேலும் அறியலாம்.

எனது ஆடியோ ரெக்கார்டிங்குகளை Google Assistant சேமிக்குமா?

இயல்பாக உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகள் சேமித்து வைக்கப்படாது. இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அமைப்பின் கீழ் “ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேர்” என்பதைத் தேர்வுசெய்வதன் மூலம் உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேமிக்கலாம்.

எனது ஆடியோ ரெக்கார்டிங்குகளை என்னுடைய Google கணக்கில் சேமிப்பதால் கிடைக்கும் நன்மை என்ன?

எங்களின் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் ஏற்ற வகையில் மேம்படுத்த நீங்கள் உதவ விரும்பினால் உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகளைப் பாதுகாப்பாகத் தக்கவைத்து, பேச்சை மேம்படுத்தும் எங்களின் சிஸ்டங்களுக்குக் கிடைக்கச் செய்யலாம். இது Google Assistant போன்ற தயாரிப்புகள் எதிர்காலத்தில் மொழியை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த உதவிடும். இந்தச் செயல்முறை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

சேமிக்கப்பட்ட எனது ஆடியோ ரெக்கார்டிங்குகளை என்னைத் தவிர வேறு யாராவது கேட்க முடியுமா?

ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேமிக்க நீங்கள் முடிவுசெய்தால் எங்களின் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பொருட்டு அவற்றின் சில பகுதிகள் மதிப்பாய்வு செய்யப்படலாம்.

உதாரணமாக, Googleளின் ஆடியோ மதிப்பாய்விற்கு ஆடியோ ரெக்கார்டிங்குகள் பயன்படுத்தப்படலாம். இந்தச் செயல்முறையின்போது மெஷின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியோ துணுக்கு மாதிரிகள் அவற்றின் Google கணக்குகளில் இருந்து தொடர்புநீக்கப்படும். அதன் பிறகு ரெக்கார்டிங்குகளில் இருந்து குறிப்பெடுக்கவும், கூறப்பட்ட சொற்களை Googleளின் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களால் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிகிறதா என்பதைச் சரிபார்க்கவும், பயிற்சிபெற்ற மதிப்பாய்வாளர்கள் ஆடியோவைப் பகுப்பாய்வு செய்வார்கள். இது Google Assistant போன்ற தயாரிப்பிற்கு எதிர்காலத்தில் மொழியை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த உதவுகிறது.

எனது ஆடியோ ரெக்கார்டிங்குகளை அரசாங்கத்தால் அணுக முடியுமா?

உலகம் முழுவதும் உள்ள அரசாங்க ஏஜென்சிகள் பயனர் விவரங்களை வெளியிடுமாறு Googleளிடம் கேட்கின்றன. ஒவ்வொரு கோரிக்கையும் பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்குகிறதா என்பதை நாங்கள் கவனமாக மதிப்பாய்வு செய்கிறோம். ஒரு கோரிக்கை அதிகப்படியான தகவல்களைக் கோருகிறது எனில் நாங்கள் அதைக் குறைக்க முயல்வதுடன் சில சமயங்களில் தகவல்கள் எதையேனும் வழங்குவதற்கு மறுப்பும் தெரிப்போம். நாங்கள் பெறும் கோரிக்கைகளின் எண்ணிக்கையையும் வகைகளையும் எங்களின் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் பகிர்கிறோம். மேலும் அறிக

எனது ஆடியோ ரெக்கார்டிங்குகள் அல்லது பிற தனிப்பட்ட தகவல்களை விற்பீர்களா?

உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகளையோ பிற தனிப்பட்ட தகவல்களையோ Google ஒருபோதும் விற்காது.

உங்கள் தனியுரிமையை Google Assistant எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள்

எந்தெந்த உரையாடல்கள் சேமிக்கப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த, “Ok Google, இந்த வாரம் நான் சொன்னதை எல்லாம் டெலீட் பண்ணிடு” என்பது போன்று கூறினால் போதும். “எனது செயல்பாடுகள்” பக்கத்தில் உள்ள அந்த உரையாடல்களை Google Assistant நீக்கிவிடும்.

எனது தனியுரிமைக் கட்டுப்பாடுகளை எங்கே கண்டறிவது?

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த பொதுவான கேள்விகளுக்குப் பதில்களைப் பெற, Google Assistantடிடம் “என்னோட தனியுரிமை அமைப்புகளை எங்கே மாத்தலாம்?” என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம். அல்லது எப்போது வேண்டுமானாலும் “Google Assistantடில் உங்கள் தரவு” பக்கத்திற்கு நேரடியாகச் சென்று உங்கள் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை அணுகலாம்.

'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் எனது Assistant உரையாடல்களை நான் நீக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது எப்படி?

'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உங்கள் Assistant உரையாடல்களைப் பார்க்கலாம் நீக்கலாம் அல்லது “Ok Google, இந்த வாரம் நான் சொன்னதை எல்லாம் டெலீட் பண்ணிடு” என்று கூறி உங்கள் Assistant உரையாடல்களை நீக்கலாம். கூடுதல் கட்டுப்பாடுகளை அணுக உங்கள் Assistant அமைப்புகளுக்குச் செல்லுங்கள்.

எனது தரவைத் தானாக நீக்கும்படி அமைக்க முடியுமா?

ஆம். உங்கள் செயல்பாட்டுத் தரவை எனது செயல்பாடுகள் பக்கத்திலிருந்து தானாக நீக்கும்படி அமைக்கலாம். உங்கள் செயல்பாட்டுத் தரவை எவ்வளவு காலம் (3, 18 அல்லது 36 மாதங்கள்) சேமித்து வைக்க விரும்புகிறீர்கள் என்ற கால வரம்பைத் தேர்ந்தெடுங்கள். இந்தக் கால வரம்பைக் கடந்த தரவு தானாகவே தொடர்ச்சியான முறையில் எனது செயல்பாடுகள் பக்கத்திலிருந்து நீக்கப்படும்.

எனது அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க Google Assistant எவ்வாறு தரவைப் பயன்படுத்துகிறது?

உங்கள் Google கணக்கில் உள்ள தரவு Google Assistant அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கி Assistantடை உங்களுக்கு இன்னும் பயனுள்ளதாக்குகிறது.

சில கேள்விகளுக்கு Google Assistant பதிலளிப்பதற்கு உங்கள் தரவு தேவை. உதாரணமாக, “என் அம்மாவோட பிறந்தநாள் எப்போ?” என நீங்கள் கேட்டால், “அம்மா” யார் என்பதையும் அவர்களின் பிறந்தநாள் எப்போது என்பதையும் தெரிந்துகொள்ள Assistant உங்கள் தொடர்புகளைப் பார்க்க வேண்டியிருக்கும். அல்லது “நாளைக்கு மழை வருமா?” என்று கேட்டால் உங்களின் தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்தி உங்களுக்கு மிகவும் தொடர்புடைய பதிலை Assistant வழங்கும்.

உங்களுக்கு முன்கூட்டிய பரிந்துரைகளை வழங்குவதற்காகவும் Google Assistant தரவைப் பயன்படுத்தும். உதாரணமாக, நீங்கள் வழக்கமாகச் செல்லும் வழிகளில் டிராஃபிக் இருக்கும்போது உங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்தி Assistant உங்களுக்கு அறிவிக்கும்.

Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் செயல்பாடுகளைப் பயன்படுத்தி உங்களுக்குக் காட்டப்படும் முடிவுகளை Google Assistant மேம்படுத்தும். உதாரணமாக, “இன்னைக்கு நைட் என்ன சமைக்கலாம்?” எனக் கேட்டால் உங்களுக்கென்று பிரத்தியேக உணவுப் பரிந்துரைகளை வழங்க நீங்கள் இதுவரை தேடியவற்றை Assistant பயன்படுத்தக்கூடும்.

எப்போது வேண்டுமானாலும் “Google Assistantடில் உங்கள் தரவு” எனும் பக்கத்திற்குச் சென்று உங்கள் தரவைப் பார்க்கலாம் நீக்கலாம், உங்களின் தற்போதைய அமைப்புகளைப் பார்க்கலாம், கிடைக்கக்கூடிய கட்டுப்பாடுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்.

உங்கள் தரவை Google எவ்வாறு பாதுகாக்கிறது மற்றும் பயன்படுத்துகிறது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ள Googleளின் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.

உங்கள் தரவைப் பயன்படுத்தி Google Assistant எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

Google Assistant எனக்குப் பிரத்தியேக முடிவுகளை வழங்குவதை என்னால் கட்டுப்படுத்த முடியுமா?

ஆம். பலர் பயன்படுத்தும் சாதனத்தில் உள்ள பயனர்கள் ஒவ்வொருவரும் பிரத்தியேகமான அனுபவத்தைப் பெறுவதை Google Assistant எளிமையாக்குகிறது. உங்கள் குரலை Assistant அடையாளம் கண்டுகொள்ளும்போது மட்டும் தனிப்பட்ட முடிவுகளைப் பெற (எ.கா. பணியிடத்திற்கான வழிகள், பிரத்தியேக உணவுப் பரிந்துரைகள்), இந்த வழிமுறைகளைப் பின்பற்றி Voice Matchசை அமைக்கவும். Family Link பயனர்களும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி Google Assistantடில் இருந்து தனிப்பட்ட முடிவுகளைப் பெறலாம்.

மொபைலிலும் பலர் பயன்படுத்தும் சாதனங்களிலும் (ஸ்பீக்கர்கள் போன்றவை) உங்கள் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தனிப்பட்ட முடிவுகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் மொபைலில் திரை பூட்டப்பட்டிருக்கும்போது தனிப்பட்ட முடிவுகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

குடும்பங்களுக்கென்று உருவாக்கப்பட்டது

உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்விக்கவும் திட்டமிட்டபடி எல்லாவற்றையும் செய்யவும் Google Assistant பல வழிகளை வழங்குகிறது. Family Link போன்ற கருவிகள் Assistant உடன் உங்கள் குடும்பத்தினர் எவ்வாறு ஊடாடலாம் என்பதை நிர்வகிக்க உதவுகின்றன.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற உள்ளடக்கத்தை Google Assistant எவ்வாறு வழங்குகிறது?

பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற கதைகள், கேம்கள், கற்றல் கருவிகள் எனப் பல்வேறு செயல்பாடுகளை Google Assistant வழங்குகிறது. இதில் மூன்றாம் தரப்பு டெவெலப்பர் வழங்கும் சில உள்ளடக்கமும் அடங்கும். இந்த டெவெலப்பர்கள் Assistantடில் குடும்பங்களுக்கேற்ற உள்ளடக்கத்தை வெளியிடுவதற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதற்கு அவர்களிடம் ஆசிரியர் அனுமதித்த ஆப்ஸ் இருக்க வேண்டும் அல்லது குடும்பங்களுக்கேற்ற செயல்களைச் செய்வதற்கு Googleளுடன் கூட்டாளர் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். மூன்றாம் தரப்பு டெவெலப்பர்களால் வழங்கப்படும் பிள்ளைகளுக்கான எந்தச் செயல்களும் எங்களின் 'குடும்பங்களுக்கான செயல்கள்' திட்டத்தின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். அத்துடன் எங்களின் இயல்புநிலைச் செயல்கள் கொள்கைகளுக்கும் இணங்க வேண்டும். Google Assistantடில் பொதுவாகக் கிடைக்கச் செய்வதற்கு முன்பு இந்தச் செயல்கள் எங்களின் கொள்கைகளுடனும் தேவைகளுடனும் இணங்குகிறதா என்பதை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்.

Google Assistant மூலம் எந்த உள்ளடக்கத்தை எனது குடும்ப உறுப்பினர்கள் பெறலாம் என்பதை நான் எப்படி நிர்வகிப்பது?

Google Home ஆப்ஸில் உள்ள டிஜிட்டல் வெல்பீயிங் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டிலுள்ள பலர் பயன்படுத்தும் சாதனங்களுக்கான (எ.கா. ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள்) உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை நீங்கள் அமைக்கலாம். இந்த அமைப்புகள் மூலம் செயல்படா நேரத்தைத் திட்டமிடலாம், உள்ளடக்க வடிப்பான் அமைப்புகளை நிர்வகிக்கலாம். மொபைல் அழைப்புகள் போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளை வரம்பிடலாம். அத்துடன் இந்த அமைப்புகள் கெஸ்ட்டுகள் மற்றும் Family Link உடன் நிர்வகிக்கப்படுகின்ற கண்காணிக்கப்படும் கணக்குகளுக்குப் பொருந்துமா அல்லது அந்தச் சாதனத்தில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் பொருந்துமா என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

Family Linkகில் உள்ள பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு பிள்ளைக்கும் வரம்புகளை அமைக்கலாம். பலர் பயன்படுத்தும் சாதனங்களில் Voice Match அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளையின் கணக்கைச் சாதனத்துடன் இணைக்கலாம். இதனால் Assistantடால் அவர்களை அடையாளங்காண முடியும். உங்கள் பிள்ளை பதிவுசெய்யப்பட்ட பின்பு "குடும்பங்களுக்கானவை” பேட்ஜ் மூலம் Google அல்லாத செயல்பாடுகளை மட்டுமே அவர்களால் அணுக முடியும். Assistant மூலம் பர்ச்சேஸ் செய்தல் போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளைச் செய்ய முடியாது. இந்தக் கட்டுப்பாடுகள் அவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள Google Assistant சாதனங்கள் அனைத்திலும் பொருந்தும். Google Home மற்றும் Assistant உடன் Family Link கணக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு Google for Families உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை Google Assistant எவ்வாறு பாதுகாக்கிறது?

உங்கள் பிள்ளையின் பெயர், மின்னஞ்சல் முகவரி, குரல் ரெக்கார்டிங், குறிப்பிட்ட இடம் போன்ற தனிப்பட்ட தகவல்களை 'குடும்பங்களுக்கான செயல்கள்' வழங்குநர்களுடன் Google பகிர்வதில்லை. இந்த வழங்குநர்கள் தங்களின் Google Assistant உரையாடல்களில் பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரமாட்டோம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தக் கொள்கைகளை மீறுகின்ற செயல்கள் ஏதேனும் இருப்பதைக் கண்டறிந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

பிள்ளைகளுக்கான அம்சங்களிலிருந்து ஆடியோ ரெக்கார்டிங்கை Google Assistant சேமிக்குமா?

ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேமிக்க அனுமதிக்கப்பட்டுள்ள, Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்கிற்கு, சேமிப்பதற்கான ஒப்புதல் எங்களுக்கு இல்லாத பட்சத்தில் பிள்ளைகளின் அம்சங்களுடனான செயல்பாடுகளிலிருந்து (குடும்பங்களுக்கான செயல்கள், YouTube Kids வீடியோக்கள் போன்றவை) ஆடியோ ரெக்கார்டிங்குகளை நாங்கள் சேமிக்கமாட்டோம். மேலும் விவரங்களுக்கு எங்களின் தனியுரிமை அறிக்கையைப் பாருங்கள்.

எனது பிள்ளையின் Google Assistant செயல்பாடுகளில் உள்ள தரவை என்னால் அகற்ற முடியுமா?

ஆம். Family Link மூலம் நிர்வகிக்கப்படும் உங்கள் பிள்ளையின் கணக்கில் உள்நுழைந்து அவர்களின் சேமிக்கப்பட்ட செயல்பாடுகளை நீங்கள் அணுகலாம் பதிவிறக்கலாம் நீக்கலாம். உங்கள் பிள்ளையின் செயல்பாட்டு அமைப்புகளை Family Link ஆப்ஸ் மூலமோ families.google.com எனும் தளத்திற்குச் சென்று பிள்ளையின் சுயவிவரத்தைக் கிளிக் செய்வதன் மூலமோ நிர்வகிக்கலாம் மேலும் விவரங்களுக்கு g.co/childaccounthelp எனும் தளத்திற்குச் செல்லவும்.

Google Assistant
Google Assistant
குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
எங்களின் தயாரிப்புகள் அனைத்தும்
எவ்வாறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.