முன்னணிப் பாதுகாப்பு அம்சங்களின் மூலம் உங்களைப் பாதுகாக்கிறோம்.

நாங்கள் உருவாக்கும் அனைத்திலும் ஸ்பேம், தீம்பொருள், வைரஸ்கள் போன்ற ஆபத்துகளைக் கண்டறிந்து தடுக்கக்கூடிய சக்திவாய்ந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளமைந்துள்ளன. மேலும், அனைவரையும் ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவும் மொத்தத் தொழிற்துறையின் தரத்தையும் உயர்த்துவதற்காகவும் இந்தத் தொழில்நுட்பங்களைக் கூட்டாளர்களுடனும் போட்டியாளர்களுடனும் கூட பகிர்கிறோம்.

உள்ளமைந்த பாதுகாப்பு

நாங்கள் உருவாக்கும் அனைத்திலும் பாதுகாப்பைக் கட்டமைத்தல்

Google சேவைகள் உலகின் மிகச் சிறந்தவற்றில் ஒன்றான பாதுகாப்புக் கட்டமைப்பின் மூலம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றன. இந்த உள்ளமைந்த பாதுகாப்பு, ஆன்லைன் ஆபத்துகளைக் கண்டறிந்து தடுக்கிறது. எனவே, உங்கள் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பாக உள்ளதென்று நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

மேலும் அறிக

பாதுகாப்பு: தலைமைப் பண்பு

இணையம் முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்து செயல்படுதல்

உலகம் முழுவதும் உள்ள கூட்டாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் Google நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான புரிதலையும், அனுபவங்களையும், தொழில்நுட்பங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டு வருகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெருகிவரும் இந்தச் சமயத்தில், பயனர்களைப் பாதுகாக்கவும் மிகவும் பாதுகாப்பான இணையத்தை ஒன்றிணைந்து உருவாக்கவும் இந்தக் கூட்டு முயற்சி மிக முக்கியமானதாகும்.

மேலும் அறிக

பாதுகாப்பு: தலைமைப் பண்பு

ஆன்லைனில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவக்கூடிய உதவிக்குறிப்புகள்

வலிமையான கடவுச்சொற்களை உருவாக்குவது, சாதனங்களைப் பாதுகாப்பது, ஃபிஷிங் தாக்குதல்களைத் தவிர்ப்பது, இணையத்தில் பாதுகாப்பாக உலாவுவது ஆகியவற்றுக்கான சில விரைவு உதவிக்குறிப்புகளையும் சிறந்த நடைமுறைகளையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மேலும் அறிக

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.