அனைவருக்குமான தொழில்நுட்பம் என்றால் அதனைப் பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும்.

பயனர்களை முதன்மைப்படுத்தியே அனைத்து செயல்களும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் Google நிறுவப்பட்டது. அதற்கேற்ப, இணையம் வளர்ந்துவரும் இந்தச் சூழலில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவ, எங்கள் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களையும் தனியுரிமைக் கருவிகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறோம்.

உங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் என்னென்ன செய்கிறோம் என்று பாருங்கள்

உங்கள் பாதுகாப்பு

முன்னணிப் பாதுகாப்பு அம்சங்களின் மூலம் உங்களைப் பாதுகாக்கிறோம்

நாங்கள் உருவாக்கும் அனைத்திலும் ஸ்பேம், தீம்பொருள், வைரஸ்கள் போன்ற ஆபத்துகளைக் கண்டறிந்து தடுக்கக்கூடிய சக்திவாய்ந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளமைந்துள்ளன. மேலும், அனைவரையும் ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவும் மொத்தத் தொழிற்துறையின் தரத்தையும் உயர்த்துவதற்காகவும் இந்தத் தொழில்நுட்பங்களைக் கூட்டாளர்களுடனும் போட்டியாளர்களுடனும் கூட பகிர்கிறோம்.

மேலும் அறிக

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமை அம்சங்களை உருவாக்குகிறோம்.

Google சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த உங்கள் தரவுகள் உதவுகின்றன. ஆனால் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பமாகும். நாங்கள் எந்தத் தரவைச் சேகரிக்கிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கிறோம். மேலும், உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்ய உங்கள் Google கணக்கில் சக்திவாய்ந்த தரவுக் கட்டுப்பாடுகளையும் உருவாக்குகிறோம்.

மேலும் அறிக

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறோம்.

முந்தைய தலைமுறைகளைப் போலல்லாமல் இன்றைய இளம் தலைமுறையினர் பிறந்தது முதலே தொழில்நுட்பம் சூழ்ந்த முறையில் வளர்கின்றனர். எனவே, உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற சரியான வழியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வரம்புகளை அமைக்கவும் உதவுவதற்காக நிபுணர்களுடனும் கல்வியாளர்களுடனும் நேரடியாகப் பணியாற்றுகிறோம்.

மேலும் அறிக