நாங்கள் பயன்படுத்தும் தரவையும் அதற்கான காரணத்தையும் புரிந்து கொள்வது எளிது

Google சேவைகளைப் பயன்படுத்தும் போது, எங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் தரவை வழங்குகிறீர்கள். நாங்கள் சேகரிக்கும் தரவைப் பற்றியும் எங்கள் சேவைகள் உங்களுக்குச் சிறப்பாக வேலை செய்வதில் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும் வெளிப்படையாக இருப்பது எங்கள் கடமையாகும்.

நாங்கள் பயன்படுத்தும் தரவைப் பற்றி வெளிப்படையாக இருத்தல்

  • நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது, நாங்கள் சேகரிக்கும் தகவல்

    எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது (எடுத்துக்காட்டாக, Googleளில் தேடுதல், Google வரைபடத்தில் வழிகளைப் பெறுதல் அல்லது YouTubeல் வீடியோவைப் பார்த்தல்), அவற்றின் மூலம் சிறப்பான அனுபவத்தை நீங்கள் பெறுவதற்குத் தரவைச் சேகரிக்கிறோம். இதில் அடங்குபவை:

    • நீங்கள் தேடும் விஷயங்கள்
    • நீங்கள் பார்க்கும் வீடியோக்கள்
    • நீங்கள் பார்க்கும் அல்லது கிளிக் செய்யும் விளம்பரங்கள்
    • உங்கள் இருப்பிடம்
    • நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள்
    • Google சேவைகளை அணுக நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ், உலாவிகள் மற்றும் சாதனங்கள்
  • நீங்கள் உருவாக்கும் அல்லது எங்களுக்கு வழங்கும் தகவல்

    Google கணக்கிற்குப் பதிவு செய்யும் போது, தனிப்பட்ட தகவலை எங்களிடம் வழங்குகிறீர்கள். நீங்கள் உள்நுழைந்திருந்தால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது நீங்கள் உருவாக்கும் தகவலைச் சேகரித்து, பாதுகாப்பாக வைத்திருப்போம். இதில் அடங்குபவை:

    • உங்கள் பெயர், பிறந்தநாள் மற்றும் பாலினம்
    • உங்கள் கடவுச்சொல் மற்றும் ஃபோன் எண்
    • Gmailலில் நீங்கள் எழுதும் மற்றும் பெறும் மின்னஞ்சல்கள்
    • நீங்கள் சேமிக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள்
    • இயக்ககத்தில் நீங்கள் உருவாக்கும் ஆவணம், விரிதாள் மற்றும் ஸ்லைடு
    • YouTubeல் நீங்கள் இடும் கருத்துகள்
    • நீங்கள் சேர்க்கும் தொடர்புகள்
    • கேலெண்டர் நிகழ்வுகள்

Google சேவைகளை உங்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்ற, தரவைப் பயன்படுத்துதல்

  • தேடும் இடங்களை விரைவாகக் கண்டறிந்து Google வரைபடம் வழங்கும் விதம்

    Google வரைபட ஆப்ஸைப் பயன்படுத்தும் போது, உங்கள் இருப்பிடத்தைப் பற்றிய தரவை உங்கள் மொபைல் அடையாளமற்ற பிட்களாக Googleளுக்கு அனுப்பும். ட்ராஃபிக் நிலவரங்களை அறிந்துகொள்ள, இந்தத் தரவு உங்கள் இருப்பிடத்தைச் சுற்றியுள்ளவர்களின் தரவுடன் இணைத்துப் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஒரே தெருவில் அதிகமான வாகனங்கள் மெதுவாக நகர்வதைக் கண்டறிந்து, அங்கு அதிக ட்ராஃபிக் இருப்பதை வரைபடம் உங்களுக்குத் தெரியப்படுத்தும். எனவே, அடுத்த முறை விபத்து தொடர்பான எச்சரிக்கையை வழங்கி, வேறொரு விரைவான வழியில் செல்வதற்கு 'வரைபடம்' வழிகாட்டும் போது, இதற்குக் காரணமாக இருந்த பிற பயணிகளுக்கு நன்றி நினைத்துக் கொள்ளுங்கள்.

  • Google உங்கள் தேடல்களைத் தானாக நிரப்பும் விதம்

    எதையாவது தேடும் போது, தேடல் சொல்லில் எழுத்துப்பிழை இருந்தாலும் Google அதன் அர்த்தத்தை எப்படியோ தெரிந்துகொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்கள் எழுத்துப் பிழை திருத்தி அமைப்பானது, முன்பு அதே பிழையைச் செய்துள்ளவர்களின் தரவைப் பயன்படுத்தி உங்களுக்காக அதைச் சரிசெய்கிறது. அதாவது நீங்கள் “தமில்” என உள்ளிட்டாலும், நாங்கள் “தமிழ்” எனத் தேடித் தருகின்றோம்.

    Google உங்கள் தேடல்களைத் தானே நிரப்ப, உங்கள் தேடல் வரலாறும் உதவலாம். எடுத்துக்காட்டாக, “பார்சிலோனா விமானங்கள்" என்பதை முன்பே தேடியிருந்தால், தட்டச்சு முடிவதற்கு முன்பே தேடல் பெட்டியில் அதைப் பரிந்துரைப்போம். அல்லது நீங்கள் ஒரு கால்பந்து அணியின் ரசிகராக இருந்து, அடிக்கடி "பார்சிலோனா கோல்கள்" எனத் தேடுகிறீர்கள் எனில், அதை உடனே பரிந்துரைப்போம்.

  • நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோக்களை YouTube கண்டறியும் விதம்

    நீங்கள் முன்பு பார்த்த வீடியோக்களின் அடிப்படையிலும் இதைப் போன்ற பார்வை வரலாறு உள்ளவர்கள் முன்பு பார்த்த வீடியோக்களின் அடிப்படையிலும், நீங்கள் விரும்பக்கூடிய வீடியோக்களை YouTube பரிந்துரைக்கும். எல்லோரும் பார்ப்பதன் அடிப்படையில் எவை பிரபலமானவை மற்றும் பிரபலமடைபவை என்பதைப் பற்றியும் குறிப்புகளைப் பெறுகிறோம். சிறந்த மியூசிக் ட்ராக்குகள், செயல்விளக்கப் பயிற்சிகள், செய்திகள் போன்ற பல்வேறு வகைகளிலிருந்து நீங்கள் தேர்வுசெய்வதற்கான வீடியோக்களைப் பரிந்துரைக்க இது எங்களுக்கு உதவும்.

  • Chrome தன்னிரப்பி உங்களுக்காகப் படிவங்களைப் பூர்த்திசெய்யும் விதம்

    ஆன்லைனில் எதையாவது வாங்கும் போதோ அல்லது கணக்கில் பதிவு செய்யும் போதோ, தனிப்பட்ட தகவல்களைப் பூர்த்திசெய்வதில் நேரம் செலவழிக்கிறீர்கள். நீங்கள் Chromeமைப் பயன்படுத்தும் போது உங்கள் பெயர், முகவரி, ஃபோன் எண், மின்னஞ்சல் முகவரி, கட்டணத் தகவல் போன்ற தகவலை நாங்கள் சேமிக்கலாம். எனவே, உங்களுக்காக இந்தப் படிவங்கள் தானாகவே நிரப்பப்படும். நீங்கள் குறிப்பிட்ட தன்னிரப்பிப் புலங்களைத் திருத்தலாம் அல்லது இந்த அமைப்பை முழுவதுமாக முடக்கலாம்.

  • உங்கள் சொந்தத் தகவலைக் கண்டறிவதற்கு Google தேடல் உதவும் விதம்

    Gmail, Google புகைப்படங்கள், கேலெண்டர் மற்றும் பலவற்றில் இருந்து பயனுள்ள தகவல்களை Google தேடல் எடுப்பதுடன், அவற்றை உங்கள் தனிப்பட்ட தேடல் முடிவுகளில் காட்டும். இதனால், நீங்கள் அதிகமாகத் தேட வேண்டிய அவசியமில்லை. “என் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட்”, “நான் கடற்கரையில் எடுத்த படங்கள்,” அல்லது “எனது ஹோட்டல் முன்பதிவு” போன்ற தகவலைத் தேடினால் போதும். நீங்கள் உள்நுழைந்திருந்தால், இந்தத் தகவலைப் பிற Google சேவைகளிடமிருந்து பெற்று, அவற்றை எளிதில் உங்களுக்கு வழங்குவோம்.

  • பணிகளைச் செய்து முடிக்க Google அசிஸ்டண்ட் உங்களுக்கு உதவும் விதம்

    நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது பயணத்தில் இருந்தாலும் சரி, உங்கள் அசிஸ்டண்ட் எப்போதும் உதவுவதற்குத் தயாராக இருக்கும். அசிஸ்டண்ட்டிடம் கேள்வி கேட்டாலோ அல்லது அது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறினாலோ, உங்களுக்கு வேண்டியதை வழங்குவதற்காக அது பிற Google சேவைகளிலிருந்து தரவைப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, நீங்கள் “அருகில் எந்தெந்த காஃபி கடைகள் உள்ளன?” அல்லது “நாளை மழை வருமா?” எனக் கேட்டால், உங்களுக்கு மிகவும் தொடர்புடைய தகவலை வழங்குவதற்காக இருப்பிடம், ஆர்வங்கள், விருப்பத்தேர்வுகள் உட்பட வரைபடம், தேடல் ஆகியவற்றிலிருந்து தகவலை உங்கள் அசிஸ்டண்ட் பயன்படுத்தும். எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google கணக்கில் "எனது செயல்பாடு" எனும் கருவிக்குச் சென்று, உங்கள் அசிஸ்டண்டுடன் மேற்கொள்ளும் உரையாடல்கள் மூலம் சேகரிக்கப்படும் தரவைப் பார்க்கலாம் அல்லது நீக்கலாம்.

உங்கள் தனியுரிமையை மனதில் கொண்டு தயாரிப்புகளை உருவாக்குதல்

  • எங்கள் தயாரிப்பு வடிவமைப்பில் தனியுரிமை மதிப்பாய்வு ஒரு முக்கியப் படியாக உள்ளது

    எந்தவொரு புதிய தயாரிப்பை வெளியிடும்போதும், எங்கள் தனியுரிமைக் குழுவையும் விரிவான மதிப்பாய்வுச் செயல்பாட்டையுமே நாங்கள் சார்ந்திருக்கிறோம். தயாரிப்பு வடிவமைப்பின் ஒவ்வொரு படியிலும் - பொறியியலில் இருந்து தயாரிப்பு மேலாண்மை வரை - தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பணியாற்றுகிறோம். பயனர்கள் தினமும் பயன்படுத்தும் Google தயாரிப்புகளை அவர்கள் நம்புவதை உறுதிசெய்ய இது உதவுகிறது.

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.