இணையத்தை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற Google ஒவ்வொரு நாளும் செயல்படுகிறது

எங்கள் பங்களிப்புகளைப் பாருங்கள்
எங்கள் அணுகுமுறை

பொதுமக்கள், பிசினஸ்கள் மற்றும் அரசாங்கங்களைப் பாதுகாத்தல்

பாதுகாப்பே எங்கள் தயாரிப்பு உத்தியின் அடிப்படையாகும். எனவேதான் எங்கள் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புகள் உள்ளன. அவை இயல்பாகவே அவற்றைப் பாதுகாக்கின்றன.

மேலும் அறிக

இணையப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்ய சமூகத்திற்கு அதிகாரமளித்தல்

ஓப்பன் சோர்ஸின் திறனை அன்லாக் செய்ய சமூகங்களுக்கு நாங்கள் அதிகாரம் வழங்குகிறோம். மேலும் சூழ்மண்டலங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எங்கள் யோசனையையும் நிபுணத்துவத்தையும் தொழில்துறையிடம் வெளிப்படையாகப் பகிர்கிறோம்.

மேலும் அறிக

மேம்பட்ட எதிர்காலத் தொழில்நுட்பங்கள்

அடுத்த தலைமுறையின் இணைய அச்சுறுத்தல்களில் இருந்து சமூகங்களைப் பாதுகாக்க விரும்புகிறோம். எங்கள் AI நிபுணத்துவத்தை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்புக் கண்டுபிடிப்பை அதிகரிக்க அடுத்த நிலை கட்டமைப்புகளை வடிவமைத்து வருகிறோம்.

மேலும் அறிக
பொதுமக்கள், பிசினஸ்கள் மாறும் அரசாங்கங்களைப் பாதுகாத்தல்

எங்கள் தயாரிப்பு மேம்பாடு மற்றும் கிளவுடு கட்டமைப்பின் ஒவ்வொரு நிலையிலும் மேம்பட்ட பாதுகாப்பை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் நிறுவனங்கள் தங்கள் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாதுகாப்பை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் இணையத்தைப் பாதுகாப்பாக அணுகவும் உதவுகிறது.

இணையப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்ய சமூகத்திற்கு அதிகாரமளித்தல்

பயனர்களின் பாதுகாப்பை முதலில் கருதும் உலகளாவிய தரநிலைகளை மேம்படுத்த நாங்கள் இணையப் பாதுகாப்பு தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சமூகங்களுடன் இணைந்து பணிபுரிகிறோம். இணையத்தை வெளிப்படையாகவும் அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும் வைத்திருக்க தவறான தகவல்கள் மற்றும் அச்சுறுத்தல் நுண்ணறிவை எதிர்த்துப் போராடுகிறோம்.

மேம்பட்ட எதிர்காலத் தொழில்நுட்பங்கள்

பாதிக்கப்படக்கூடிய பயனர்களை ஆன்லைன் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பணியாற்றி வரும் அதேவேளையில் AI, வன்பொருள், கிளவுடு கம்ப்யூட்டிங் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கான சர்வதேசத் தரநிலைகளை இயக்குவதன் மூலம் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாத்து வருகிறோம்.

இணையத்தை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற ஒன்றிணைந்து பணியாற்றுங்கள்

இணையப் பாதுகாப்பு என்பது ஒன்றிணைந்து பணிபுரிவதாகும். நாம் ஒன்றாக வேலை செய்யும்போது, இந்தச் சிக்கலான, வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்பை உருவாக்கலாம் மற்றும் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்தலாம்.

வானளாவிய கட்டடத்திற்கு வெளியே உள்ள Google பாதுகாப்புப் பொறியியல் மையத்தின் பில்போர்டு.
Google பாதுகாப்பு மற்றும் பொறியியல் மையங்கள்

தனியுரிமை, பாதுகாப்பு, உள்ளடக்கப் பொறுப்பு, குடும்பப் பாதுகாப்பு ஆகியவற்றில் உலகெங்கிலும் எங்கள் குழுக்கள் பணிபுரிந்து வருகின்றன. அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள், கொள்கை நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் தலைமையில் செயல்படும் இந்த வேலைக்கு எங்கள் GSECகள் வழிகாட்ட உதவுகின்றன.

டெவெலப்பர் குறியீடுகளின் தொகுப்பைக் காட்டும் Google Bug Hunters முகப்புப்பக்கத்தின் மாதிரிக்காட்சி.
Google Bug Hunters

எங்கள் உலகளாவிய Bug Hunters சமூகம் எங்கள் தயாரிப்புகளை அவை எண்ணிய வழியில் செயல்படுவதற்கும் இணையத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும் கவனம் செலுத்துகிறது.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கும் மூன்று வல்லுநர்களில் ஒருவர் இணையப் பாதுகாப்பைப் பற்றி மற்ற இரண்டு சக ஊழியர்களுக்கும் விளக்குகிறார்.
Google இணையப் பாதுகாப்பு செயல்பாட்டுக் குழு

அரசாங்கங்கள், முக்கியமான உள்கட்டமைப்பு, நிறுவனங்கள், சிறிய பிசினஸ்கள் ஆகியவற்றின் பாதுகாப்பையும் டிஜிட்டல் மாற்றத்தையும் ஆதரிக்க உலகின் முதன்மையான பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

நாங்கள் உங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கும்
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.