அடிப்படை டிஜிட்டல் விதிகளை அமைப்பதில் உங்களுக்கு உதவுதல்

உங்கள் இளைய பிள்ளைகளும் மூத்த பிள்ளைகளும் ஆன்லைனில் எப்படிச் செயல்படுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளவும், அவர்களது கணக்குகள், இணைக்கப்பட்ட சாதனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கவும் Family Link உதவுகிறது. ஆப்ஸை நிர்வகிப்பது, சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கண்காணிப்பது, உங்கள் பிள்ளையின் சாதனத்தில் உறக்க நேரத்தை அமைப்பது மட்டுமில்லாமல் பலவற்றைச் செய்வதன் மூலம், உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற வரம்புகளை அமைக்கலாம்.

Family Link மூலம் ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கான வரம்புகளை நிறுவுதல்

 • சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கண்காணித்தல்

  உங்கள் பிள்ளை எவ்வளவு நேரம் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். அவர்களது சாதனத்தைப் புத்தகம் படிக்க, வீடியோக்கள் பார்க்க அல்லது கேம்கள் விளையாடப் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பொறுத்து, சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தைத் தீர்மானிக்கலாம். எந்த ஆப்ஸை உங்கள் பிள்ளை அதிகம் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்க, Family Link ஆப்ஸின் செயல்பாட்டு அறிக்கைகளைப் பயன்படுத்தலாம்.

 • தினசரி அணுகலை வரம்பிடுதல்

  தினசரி வரம்பை அமைத்தல் – உங்கள் பிள்ளையின் Android சாதனத்தில் சாதனத்தைப் பயன்படுத்தும் தினசரி நேர வரம்பை அமைக்கவும் உறங்குவதற்கான நேரம் வரும் போது அவர்களது சாதனத்தைப் பூட்ட, உறக்கநேரத்தை அமைக்கவும் Family Link உங்களை அனுமதிக்கிறது.

 • உங்கள் பிள்ளையின் சாதனத்தைத் தொலைநிலையிலிருந்து பூட்டுதல்

  உங்கள் பிள்ளையின் சாதனங்களை நிர்வகிக்கலாம் அல்லது விளையாட, படிக்க அல்லது தூங்குவதற்கான நேரம் வரும் போது, குறிப்பிட்ட ஆப்ஸை மறைக்கலாம்.

உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் கண்டறியக்கூடியவற்றுக்கான அணுகலை நிர்வகித்தல்

 • Google அசிஸ்டண்ட்டில் உங்கள் பிள்ளையின் கணக்கு அமைப்புகளைப் பயன்படுத்துதல்

  அசிஸ்டண்ட் இயக்கப்பட்ட சாதனங்களில், பிள்ளைகள் Family Link மூலம் நிர்வகிக்கப்படும் தங்களது கணக்கில் உள்நுழையலாம். தங்களுடைய தனிப்பயனாக்கிய அசிஸ்டண்ட் அனுபவத்தை அவர்கள் பெறலாம், மேலும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட கேம்கள், ஆக்டிவிட்டிஸ் மற்றும் கதைகளை அவர்கள் அணுகலாம். பணப் பரிமாற்றங்கள் செய்வதில் இருந்து பிள்ளைகள் தடுக்கப்படுவார்கள், மேலும் அசிஸ்டண்ட்டில் மூன்றாம் தரப்பு அனுபவங்களுக்கான அணுகல் தங்கள் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டுமா என்பதைப் பெற்றோர் முடிவு செய்யலாம்.

 • Chrome மூலம் இணையதளங்களுக்கான உங்கள் பிள்ளைகளின் அணுகலை நிர்வகித்தல்

  உங்கள் பிள்ளைகள் தங்களது Android அல்லது ChromeOS சாதனத்தில் உள்ள Chrome உலாவியைப் பயன்படுத்தும் போது, இணையதளங்களுக்கான அவர்களின் அணுகலை உங்களால் நிர்வகிக்க முடியும். உங்கள் பிள்ளைகள் பார்க்கலாம் என்று நீங்கள் கருதும் இணையதளங்களை மட்டும் அவர்கள் பார்க்கும்படி கட்டுப்படுத்தலாம், அல்லது அவர்கள் பார்க்க வேண்டாம் என நீங்கள் நினைக்கும் குறிப்பிட்ட தளங்களைத் தடுக்கலாம்.

 • பாதுகாப்பான தேடல் வடிப்பான்களைப் பயன்படுத்தி, Google தேடலில் வெளிப்படையான தளங்களைத் தடுத்தல்

  Family Linkகின் ஒரு பகுதியாக 'பாதுகாப்பான தேடல்' அமைப்பை மொபைல்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்புகளில் பயன்படுத்தலாம். இது 100% துல்லியமானதல்ல என்றாலும், ஆபாசம் மற்றும் மிகையான வன்முறை போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக, Google தேடல் முடிவுகளில் இருந்து தவிர்க்கப்பட வேண்டிய படங்கள், வீடியோக்கள் மற்றும் இணையதளங்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பாகும். Family Link மூலம் நிர்வகிக்கப்படும் உள்நுழைந்துள்ள கணக்குகளைக் கொண்ட 13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட) பயனர்களுக்கு இயல்பாகவே 'பாதுகாப்பான தேடல்' அமைப்பு இயக்கத்தில் இருக்கும். ஆனால், பெற்றோர் அதை முடக்கும்படி தேர்வுசெய்யலாம்.

குடும்பங்களை மனதில் கொண்டு உருவாக்கிய ஆப்ஸைக் கண்டறிதல்

 • உங்கள் பிள்ளை பயன்படுத்தக்கூடிய ஆப்ஸை நிர்வகிக்க, Family Linkஐப் பயன்படுத்துதல்

  எல்லா ஆப்ஸும் எல்லாப் பிள்ளைகளுக்கும் ஏற்ற வகையில் இருக்காது. அதாவது, சில ஆப்ஸ் மட்டுமே எல்லாப் பிள்ளைகளும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். Family Linkஐப் பயன்படுத்தி, பிள்ளைக்கு ஏற்றதாக இருக்கும் என நீங்கள் நினைக்கக்கூடிய மதிப்பீட்டைக் கொண்ட ஆப்ஸை மட்டும் தேடுவதற்கு உங்கள் பிள்ளைகளை அனுமதிக்கும் வகையில், Google Play ஸ்டோரில் உள்ள ஆப்ஸை வடிகட்டலாம். Google Play ஸ்டோரில் இருந்து உங்கள் பிள்ளை பதிவிறக்க விரும்பும் ஆப்ஸை அனுமதிக்க அல்லது தடுக்க உதவும் அறிவிப்பையும் உங்கள் சாதனத்தில் பெறலாம்.

  உங்கள் குழந்தைக்கு ஏற்ற சரியான உள்ளடக்கம் அல்லது பொழுதுபோக்கு எது என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவும் வகையில், Google Playயில் குடும்ப நட்சத்திர பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்ப நட்சத்திரம், உள்ளடக்கம் அல்லது பொழுதுபோக்கானது மிகவும் கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, குடும்பங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதைக் குறிக்கிறது. இவற்றின் உள்ளடக்க மதிப்பீடுகள், அனுமதிகள் ஆகியவற்றையும் பார்க்கலாம், மேலும் இவற்றில் விளம்பரங்கள் அல்லது ஆப்ஸில் வாங்கக்கூடிய விஷயங்கள் உள்ளனவா என்பதையும் பார்க்கலாம்.

  சாதனம் எவ்வளவு நேரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நிர்வகிப்பது மட்டுமில்லாமல், சாதனம் சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை நிர்வகிக்கவும் பெற்றோருக்கு உதவ விரும்புகிறோம். எனவேதான், ஆசிரியர்களின் பரிந்துரைகளுடன் பயனுள்ள சிறந்த உள்ளடக்கத்தைக் கண்டறிவதற்கு உதவக்கூடிய உள்ளமைந்த அம்சங்களை Family Link இல் வழங்கியுள்ளோம். இதன் மூலம், பிள்ளைகளுக்கு ஏற்றது என நீங்கள் கருதக்கூடிய தரமான உள்ளடக்கத்தை உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தி மகிழலாம்.

கணக்கு அமைப்புகளைப் பயன்படுத்தி, உங்கள் குழந்தைக்கு எது சரியானது என்பதைத் தேர்வுசெய்தல்

 • உங்கள் பிள்ளையின் கணக்கை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல்

  Family Link-இல் உங்கள் பிள்ளையின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் மூலம், எந்தச் செயல்பாடு சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் உங்கள் பிள்ளை எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது அவரது Google கணக்கை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

  உங்கள் பிள்ளை தனது கடவுச்சொல்லை மறந்துவிட்டால், பெற்றோர் என்ற முறையில் அதை மாற்றவோ மீட்டமைக்கவோ நீங்கள் உதவலாம். உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தகவலை நீங்கள் திருத்தலாம், தேவைப்பட்டால் நீக்கவும் செய்யலாம். உங்கள் அனுமதியின்றி, அவர்களது கணக்கிலோ அல்லது சாதனத்திலோ மற்றொரு சுயவிவரத்தை அவர்களால் சேர்க்க முடியாது. இறுதியாக, அவர்களது Android சாதனத்தின் (சாதனம் இயக்கத்தில் இருந்து, இணைய இணைப்பு பெற்றிருந்து சமீபத்தில் செயலில் இருந்தால்) இருப்பிடத்தை நீங்கள் பார்க்கலாம்.

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.