உங்கள் எல்லா ஆன்லைன் கணக்குகளிலும் உள்நுழைவதற்குப் பாதுகாப்பான வழி.

உங்கள் எல்லா ஆன்லைன் கணக்குகளிலும் 'உள்நுழைவு' என்பது அதிலுள்ள தனிப்பட்ட தகவல்களை அணுவதற்கான வாயில் கதவாகும். இது ஆபத்துகளுக்கான முதன்மை நுழைவிடமாகவும் இருப்பதால் இதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

Googleளிலும் உங்கள் அனைத்து ஆப்ஸ் மற்றும் சேவைகளிலும் உள்நுழைவதை இயல்பாகவே பாதுகாப்பானதாக அமைத்துள்ளோம். உள்ளமைந்த கருவிகள் மற்றும் தானியங்குப் பாதுகாப்புகள் (எ.கா. புதிய சாதனத்திலிருந்து Google கணக்கை அணுகும் போது விழிப்பூட்டல்களைப் பெறுதல்) மூலம் பாதுகாப்பாக உள்நுழைவதை விரைவானதாகவும் எளிதானதாகவும் மாற்றியுள்ளோம்.

உங்கள் Google கணக்கின் பாதுகாப்பை வலுப்படுத்துங்கள்

பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொண்டு உங்கள் Google கணக்கைப் பாதுகாத்திடுங்கள். உங்கள் Google கணக்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உதவ, பிரத்தியேகமான மற்றும் செயல்படுத்துவதற்கு எளிதான பரிந்துரைகளை இந்தப் படிப்படியான வழிமுறைகளைக் கொண்ட கருவி உங்களுக்கு வழங்கும்.

சரிபார்ப்பை நிறைவுசெய்யுங்கள்
ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கும்
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.