ஆன்லைன் உலகில் பாதுகாப்பாக உலாவுதல்

ஜெர்மனியில் Google Digital Garage திட்டத்திற்கு Googleளைச் சேர்ந்த லேனா ரோஹோ பொறுப்பாவார், தரவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பலவற்றையும் அவருடைய பயிற்சித் திட்டம் உள்ளடக்கியுள்ளது.

மிஸ். ரோஹோ, தரவுத் தனியுரிமையையும் தரவுப் பாதுகாப்பையும் பற்றி அறிவது நிறுவனங்களுக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு தனிப்பட்ட நபர்களுக்கும் முக்கியமானது. இந்தப் பகுதியில் என்னென்ன பயிற்சி வகுப்புகளை வழங்குகிறீர்கள்?

Google Digital Garage திட்டத்தில், தங்கள் சொந்தத் தொழிலை முன்னேற்ற விரும்பும் அல்லது நிறுவன வளர்ச்சிக்கு உதவ விரும்பும் நபர்களுக்கு டிஜிட்டல் திறன்கள் சார்ந்த பயிற்சியை வழங்குகிறோம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றிய அடிப்படைகளிலிருந்து வேலையில் பணிச் செயல்திறனை அதிகரிப்பது வரையிலான தலைப்புகளில் பாடங்கள் உள்ளன. தரவுத் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு பற்றிய எங்கள் வகுப்புகளில் இருபடி அங்கீகாரத்தை விளக்குகிறோம் – அதாவது இருபடிக் கணக்கு உள்நுழைவுச் செயல்முறை. மேலும் ஃபிஷிங் பற்றியும் அதிலிருந்து எவ்வாறு உங்களைத் தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் விளக்குகிறோம். இணையதளங்களில் எவ்வாறு HTTPSஸை ஒருங்கிணைப்பது என்பதை அறிய, பிசினஸ் உரிமையாளர்கள் Digital Garage வகுப்புகளில் கலந்துகொள்ளலாம்.

வகுப்புகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன?

எங்கள் வகுப்புகள் அனைத்தும் இலவசம் – மியூனிக், ஹாம்பர்க், பெர்லின் ஆகிய இடங்களிலுள்ள எங்கள் பயிற்சி மையங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் சேர்ந்தாலோ Digital Garage ஆன்லைன் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தினாலோ எங்கள் வகுப்புகள் அனைத்தும் இலவசம். ஆன்சைட் வகுப்புகள் சுமார் இரண்டு மணிநேரம் வரையில் நீடிக்கும். இவற்றிலுள்ள சிறந்த விஷயம் என்னவெனில் பிற பங்கேற்பாளர்களுடன் பேசுவதற்கும் சுவாரஸ்யமான புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் இவை வாய்ப்பு வழங்குகின்றன.

இந்த வகுப்புகளில் பங்கேற்பவர்கள் என்னென்ன புதிய திறன்களைக் கற்றுக்கொள்கின்றனர்?

நிச்சயமாக, இரண்டு மணிநேரப் பயிற்சியில் பங்கேற்பதன் மூலமாக ஒருவரால் நிபுணராகிவிட முடியாது. இருப்பினும், அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு மணிநேரம் போதுமானது. மேலும் டிஜிட்டல் உலகில் எவ்வாறு பாதுகாப்பாக உலாவலாம் (தனிப்பட்ட வகையிலும் தொழில்முறையாகவும்) என்பது பற்றிய நல்லதொரு உணர்வை வளர்த்துக்கொள்ள இது போதுமான நேரமாகும்.

பதிவுசெய்து இப்போதே சேருங்கள்

டிஜிட்டல் யுகத்திற்கு உங்களைத் தயார்படுத்த, Google Digital Garage இலவச வகுப்புகளை வழங்குகிறது. வகுப்பு நடத்தப்படும் இடங்களில் ஏதேனும் ஒன்றிற்குச் சென்றோ வீட்டில் இருந்தபடியோ உங்கள் தனிப்பட்ட அல்லது தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்தலாம்.

ஜெர்மனியில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர, zukunftswerkstatt.de எனும் பக்கத்திற்குச் செல்லுங்கள்

யுனைடெட் கிங்டமில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர, learndigital.withgoogle.com/digitalgarage எனும் பக்கத்திற்குச் செல்லுங்கள்

இத்தாலியில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர, learndigital.withgoogle.com/digitaltraining எனும் பக்கத்திற்குச் செல்லுங்கள்

ஃபிரான்ஸில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர, learndigital.withgoogle.com/ateliersnumeriques எனும் பக்கத்திற்குச் செல்லுங்கள்

ஸ்பெயினில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர, learndigital.withgoogle.com/activatunegocio எனும் பக்கத்திற்குச் செல்லுங்கள்

நெதர்லாந்தில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர, learndigital.withgoogle.com/digitalewerkplaats எனும் பக்கத்திற்குச் செல்லுங்கள்

புகைப்படங்கள்: ஈவா ஹெபர்லி

இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்

உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் அறிக