பாதுகாப்பான,
மிக நம்பகமான இணையத்தை
உருவாக்குதல்.

தனியுரிமை, பாதுகாப்பு, உள்ளடக்கப் பொறுப்பு, குடும்பப் பாதுகாப்பு ஆகியவற்றில் இன்று உலகெங்கிலும் Google குழுவினர் பணிபுரிகின்றனர். பொறியாளர்கள், கொள்கை நிபுணர்கள், ஆய்வுப்பொருள் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய அனுபவமிக்க குழுக்களின் தலைமையில் மியூனிக் & டப்ளினில் உள்ள எங்களின் Google பாதுகாப்புப் பொறியியல் மையங்கள் இந்த இணையப் பாதுகாப்புப் பணிக்கு வழிகாட்டுகின்றன.

மியூனிக் மையம்
GSEC மியூனிக்

தனியுரிமை & பாதுகாப்பு தொடர்பான பொறியியலில் எங்களின் மியூனிக் மையம் நிபுணத்துவம் வாய்ந்தது.

எவ்வாறு என அறிக
டப்ளின் மையம்
GSEC டப்ளின்

உள்ளடக்கங்களுக்கான பொறுப்பில் எங்களின் டப்ளின் மையம் நிபுணத்துவம் வாய்ந்தது.

எவ்வாறு எனக் கண்டறிக
பாதுகாப்புப் பொறியியல் தொடர்பான
எங்களின் அணுகுமுறை.

உலகெங்கிலும் உள்ள மக்களுடன் பேசி இணையப் பாதுகாப்பு குறித்த அவர்களின் குறைகளைப் புரிந்துகொள்கிறோம். ஆன்லைனில் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் வகையில் அடுத்த தலைமுறைத் தீர்வுகளை உருவாக்க, எங்கள் நிபுணர்கள் குழுவுக்கு வசதியையும், ஊக்கத்தையும், ஆதரவையும் வழங்குகிறோம்.

புரிந்துகொள்ளுதல்

இணையப் பாதுகாப்பிற்கான தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைப் புரிந்துகொள்ள அவர்களின் கருத்துகளைக் கேட்டு அறிந்துகொள்கிறோம்

உருவாக்குதல்

பெறப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, புதிய மற்றும் தொடர்புடைய பொறியியல் தீர்வுகளை உருவாக்குகிறோம்

அதிகாரமளித்தல்

கருவிகள், நிகழ்வுகள், ஆவணங்கள் மற்றும் முன்னெடுப்புகளின் மூலம் பயனர்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அதிகாரம் வழங்குகிறோம்

கூட்டிணைதல்

அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவும் கடினமான சிக்கல்களைத் தீர்க்கவும் கொள்கை உருவாக்குநர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்

இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்

உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.