தனியுரிமையைப் பாதுகாக்கும் வீடே உதவிகரமானது.

உங்கள் வீடு ஒரு சிறப்பான இடமாகும். இந்த வீட்டிற்குள் நீங்கள் கொண்டுவருபவை நம்பகமானதாக இருக்க வேண்டும் என்றே விரும்புவீர்கள். உள்ளே இருப்பவர்களுக்கும் அருகில் வசிப்பவர்களுக்குமான ஒரு பாதுகாப்பான வீட்டை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனங்கள் & சேவைகளின் மூலம் அந்த நம்பிக்கையைப் பெறுவதில் உறுதியாக உள்ளோம்.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான எங்களின் உறுதிப்பாடுகள்

எங்களின் Google பணிகள் அனைத்திற்கும் வழிகாட்டும் அதே முக்கியமான தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளையே நாங்கள் பின்பற்றுகிறோம். உங்கள் தனியுரிமையை நாங்கள் எவ்வாறு மதித்து கனெக்டட் ஹோம் சாதனங்களையும் சேவைகளையும் பாதுகாப்பாக வைக்கிறோம் என்பதை இந்த வழிகாட்டியில் அறிந்துகொள்ளலாம்.

இந்த உறுதிப்பாடுகள் எந்தெந்தச் சாதனங்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும்?

வீட்டின் தனியுரிமை குறித்து இந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எங்களின் உறுதிப்பாடானது Google கணக்குகளைப் பயன்படுத்துகின்ற மற்றும் Google Nest, Google Home, Nest, Google Wifi மற்றும் Chromecast பிராண்டுகளைக் கொண்ட எங்களின் கனெக்டட் ஹோம் சாதனங்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும். Nest கணக்குகளிலிருந்து Google கணக்குகளுக்கு மாறியவர்களுக்கும் இது பொருந்தும் என்பதே இதன் பொருளாகும். அத்துடன், மேலே பட்டியலிடப்பட்ட சாதனங்களுக்கும் சேவைகளுக்கும் Googleளின் தனியுரிமைக் கொள்கையும் பொருந்தும். உதாரணமாக, சேவை வழங்குநர்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம், தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காண முடியாத தகவலை நாங்கள் எவ்வாறு பகிர்வோம், சட்டரீதியான காரணங்களுக்காக உங்கள் தரவை எப்படி, எப்போது சேமிப்போம், பகிர்வோம் என்பது பற்றியெல்லாம் இது விவரிக்கிறது. இவற்றில் எதுவுமே பின்வரும் உறுதிப்பாடுகளால் பாதிக்கப்படாது. மேலும் உங்கள் கனெக்டட் ஹோம் சாதனங்களில் YouTube, Google Maps, Google Duo போன்ற வேறு பல Google சேவைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்தப் பிற Google சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது அவை எந்தத் தரவைச் சேகரிக்கின்றன என்பதும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதும் அந்தத் தனிப்பட்ட சேவைகளின் விதிமுறைகளின்படியும் Googleளின் தனியுரிமைக் கொள்கையின்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த உறுதிப்பாடுகளை நாங்கள் ஏன் உங்களுக்கு அளிக்கிறோம்?

இந்தச் சாதனங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போது நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் விருந்தினர்களும் வசதியாக உணர வேண்டுமென விரும்புகிறோம். உங்களுக்கு உதவியையும் மன நிம்மதியையும் வழங்குவதே இவற்றின் நோக்கமாகும். உங்கள் வீட்டில் நாங்களும் ஒரு விருந்தினர்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும். அந்த அழைப்பை மதித்து, அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வீட்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கிறது, வளர்ந்துகொண்டே வருகிறது. எனவே நாங்கள் தன்னடக்கத்துடனும் பல்வேறு கண்ணோட்டங்களைப் பெறுவதற்கான உறுதிப்பாட்டுடனும் கற்கவும் தகுந்தபடி மாற்றிக்கொள்ளவும் ஆர்வம் கொண்டவர்களாகவும் எங்கள் பணிகளை அணுகுகிறோம்.

உறுதிப்பாடு

தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் வெளிப்படைத்தன்மை

கனெக்டட் ஹோம் சாதனங்களில் வீட்டின் சுற்றுச்சூழல் குறித்துத் தகவல்களைக் கண்டறியும் கேமராக்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் சுற்றுச்சூழல்/ஆக்டிவிட்டி சென்சார்கள் இருந்தால் இந்த வன்பொருள் அம்சங்களைச் சாதனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் (அவை இயக்கப்பட்டிருந்தாலும் இயக்கப்படாவிட்டாலும்) பட்டியலிடுவோம்.

உறுதிப்பாடு

சென்சார்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி

இந்த சென்சார்கள் Googleளுக்கு எந்த வகையான தகவல்களை அனுப்புகின்றன என்பதை எங்களின் சென்சார்கள் குறித்த வழிகாட்டியில் தெளிவாக விளக்குவோம். நீங்கள் அவற்றின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவ, அந்தத் தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதற்கான உதாரணங்களையும் அதில் வழங்குவோம்.

எல்லா அமைப்புகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக மொபைலில் உள்ள Google கணக்கு மெனு காட்டுகிறது.

உறுதிப்பாடு

பொறுப்பான விளம்பர நடைமுறைகள்

எனவே எங்களின் கனெக்டட் ஹோம் சாதனங்கள் மற்றும் சேவைகள் அனைத்திலும் உங்கள் வீடியோ காட்சி, ஆடியோ ரெக்கார்டிங், வீட்டுச் சூழல் சென்சாரின் அளவீடுகள் ஆகியவற்றை விளம்பரங்களிலிருந்து தனிப்படுத்தி வைக்கிறோம். மேலும் இந்தத் தரவை விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கப் பயன்படுத்த மாட்டோம். Assistant உடன் நீங்கள் பேசும்போது, விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக உங்கள் ஆர்வங்கள் பற்றித் தெரிந்துகொள்ள உங்கள் உரையாடல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். உதாரணமாக, “Ok Google, ஜூலை மாசம் ஹவாய்ல வானிலை எப்படி இருக்கும்?” என்று நீங்கள் கேட்டால், பிரத்தியேக விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட அந்தக் குரல் உரையாடலின் வாக்கியங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். ஆனால் ஆடியோ ரெக்கார்டிங்கைப் பயன்படுத்தமாட்டோம். உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, உங்கள் Google அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் மதிப்பாய்வு செய்யலாம், விளம்பரப் பிரத்தியேகமாக்கலுக்கான ஒப்புதலை முழுமையாக நீக்கலாம். Google Assistant குறித்தும் உங்களுக்குக் கிடைக்கும் விருப்பத்தேர்வுகள் குறித்தும் இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உறுதிப்பாடு

தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் வெளிப்படைத்தன்மை

கனெக்டட் ஹோம் சாதனங்களில் வீட்டின் சுற்றுச்சூழல் குறித்துத் தகவல்களைக் கண்டறியும் கேமராக்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் சுற்றுச்சூழல்/ஆக்டிவிட்டி சென்சார்கள் இருந்தால் இந்த வன்பொருள் அம்சங்களைச் சாதனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் (அவை இயக்கப்பட்டிருந்தாலும் இயக்கப்படாவிட்டாலும்) பட்டியலிடுவோம்.

உறுதிப்பாடு

தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் வெளிப்படைத்தன்மை

கனெக்டட் ஹோம் சாதனங்களில் வீட்டின் சுற்றுச்சூழல் குறித்துத் தகவல்களைக் கண்டறியும் கேமராக்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் சுற்றுச்சூழல்/ஆக்டிவிட்டி சென்சார்கள் இருந்தால் இந்த வன்பொருள் அம்சங்களைச் சாதனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் (அவை இயக்கப்பட்டிருந்தாலும் இயக்கப்படாவிட்டாலும்) பட்டியலிடுவோம்.

இது Nest சாதனங்களுக்கு எவ்வாறு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது?

Googleளுக்குத் தொடர்பில்லாத ஒருவர் எங்கள் சாதனங்கள் எதிலாவது பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்தால் நாங்கள் அதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். நிதி வெகுமதிக்குத் தகுதிபெற, Google பொதுவில் வெளியிடுவதற்கு முன்பு பாதுகாப்புக் குறைபாட்டைச் சரிசெய்ய வேண்டும். அதுவரை ஆராய்ச்சியாளர்கள் காத்திருக்க வேண்டும். எங்கள் சாதனங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு உலகம் முழுவதிலிருந்து உதவும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தத் திட்டம் ஊக்கத்தொகை வழங்குகிறது.

பாதுகாப்புக் குறைபாடுகளை வேறு எவ்வாறெல்லாம் Google கண்டறிகிறது?

பொதுப் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் முன்பு ஒவ்வொரு சாதனத்தையும் அதன் மென்பொருளையும் பிரத்தியேகப் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் சரிபார்க்கிறோம். மேலும் எங்கள் சாதனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எங்களால் முடிந்தவரை சிறப்பாகப் பணியாற்றுகிறோம். முதல்நிலைச் சரிபார்ப்பு முடிந்து சாதனங்களைப் பொதுப் பயன்பாட்டிற்கு வெளியிட்ட பிறகும் ஆபத்துகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் தொடர்ந்து ஆய்வுசெய்யப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் தானாகவே வழங்கப்படுகின்றன.

சந்தேகத்திற்குரிய செயல்பாடு என்றால் என்ன?

நீங்கள் செய்யவில்லை போலத் தோன்றும் செயல்பாடுகளை Google கண்டறியும். உதாரணம், அறியப்படாத சாதனத்திலிருந்து உங்கள் கணக்கில் உள்நுழைய முயல்வது.

இருபடிச் சரிபார்ப்பு எனது கணக்கை எவ்வாறு பாதுகாக்கிறது?

உங்கள் கடவுச்சொல்லை ஒருவர் அறிந்திருந்தாலும்கூட உங்கள் கணக்கில் அவர் உள்நுழைவதை இருபடிச் சரிபார்ப்பு தடுக்கும். இருபடிச் சரிபார்ப்பு இயக்கப்பட்டிருந்தால் உங்கள் கணக்கில் உள்நுழைபவர் எவரும் “அங்கீகரிப்பு” அல்லது இரண்டாவது படியை நிறைவுசெய்ய வேண்டியிருக்கும். மெசேஜ், Google அங்கீகரிப்பு ஆப்ஸிலிருந்து குறியீட்டைப் பெறுதல், நிறுவப்பட்டுள்ள Google ஆப்ஸ் ஒன்றிலிருந்து அறிவிப்பைப் பெறுதல் போன்ற பல முறைகளிலிருந்து இரண்டாவது படியை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.

என்னிடம் Nest கணக்கு உள்ளது, மேலும் அதைப் பயன்படுத்திதான் Nest ஆப்ஸில் உள்நுழைகிறேன். நான் எதற்காக Google கணக்கிற்கு மாற வேண்டும்?

Google கணக்கிற்கு மாறுவதால் கிடைக்கும் புதிய பலன்கள்:

  • சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டறிதல், இருபடிச் சரிபார்ப்பு, பாதுகாப்புச் சரிபார்ப்பு போன்ற தானியங்குப் பாதுகாப்பு அம்சங்களைப் பெறுவீர்கள்.
  • உங்களின் Google Nest சாதனங்களும் சேவைகளும் இணைந்து செயலாற்றும். உதாரணமாக, உங்களிடம் Nest Cam, Chromecast இரண்டும் இருந்தால் அமைப்புகளை மாற்றாமலேயே “Ok Google, வீட்டின் பின்புறக் கேமராவைக் காட்டு” என்று சொல்லி உங்கள் கேமரா ஸ்ட்ரீமை டிவியில் அலைபரப்பலாம்.
  • Nest மற்றும் Google Home ஆப்ஸ் இரண்டிலும் ஒரே கணக்கின் மூலம் உள்நுழையலாம்.
  • Nest மற்றும் Google Home ஆப்ஸ் இரண்டிலும் உங்கள் வீடுகளையும் வீட்டு உறுப்பினர்களையும் ஒருங்கிணைக்கலாம்.


ஏற்கனவே Nest கணக்கு வைத்துள்ள எவரும் Google கணக்கிற்கு மாறலாம். உங்கள் கணக்கை மாற்றுவதற்கு, Nest ஆப்ஸில் கணக்கு அமைப்புகளுக்குச் சென்று Google கணக்கிற்கு மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உறுதிப்பாடு

தானாகவே புதுப்பிக்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள்

Google Nest சாதனங்களை விற்கத் தொடங்கும் தேதியிலிருந்து குறைந்தது 5 ஆண்டுகளுக்கு அவற்றின் முக்கியப் பாதுகாப்பு அம்சங்களுக்கான புதுப்பிப்புகள் தானாகவே வழங்கப்படும்.

இது எதற்காகச் செய்யப்படுகிறது?
பயனர்களின் பாதுகாப்புக்கென நாங்கள் பல அடுக்குப் பாதுகாப்புகளை வழங்குகிறோம். எனினும் தொழில்நுட்ப மாற்றங்களும் புதிய அச்சுறுத்தல்களும் தொடர்ந்து தோன்றிவருகின்றன. Google Nestடில் உள்ளதாக அறியப்பட்ட முக்கியமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மென்பொருள் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைத் தானாகவே வழங்க உறுதியளிக்கிறோம். சாதனங்களின் பட்டியலையும் அவற்றுக்கு எவ்வளவு காலம் வரை புதுப்பிப்புகளை வழங்குவோம் என்ற தகவலையும் நாங்கள் வெளியிடுகிறோம்.

சாதனத்திற்குப் புதுப்பிப்புகள் கிடைக்கின்றனவா என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?

Google சாதனங்களின் பட்டியலையும் அவற்றுக்கு குறைந்தது எவ்வளவு காலத்திற்கு முக்கியமான பாதுகாப்புப் புதுப்பிப்புகளை வழங்குவோம் என்பதையும் வெளியிடுவோம்.

பாதுகாப்புப் புதுப்பிப்புகளின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவை எவை?

சாதனத்தை அதற்குரிய முறைகளிலிருந்து மாறுபட்டோ அதன் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய வகையிலோ பயன்படுத்தியதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகளைப் பாதுகாப்புப் புதுப்பிப்புகள் சரிசெய்யாது. உதாரணங்கள்:

  • வேறு ஒருவருக்கு வழங்குவதற்கும் முன்பு முறையாக ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்படாத சாதனங்கள்
  • இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தாத கணக்குகள்
  • பிற உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட, Googleளால் மதிப்பாய்வு செய்யப்படாத சாதனங்கள். இவை உங்கள் நெட்வொர்க்கையும் Google Nest சாதனங்களையும் அணுக முடிபவையாகவும் இருக்கலாம்

உறுதிப்பாடு

சரிபார்க்கப்பட்ட மென்பொருள்

Google Nest சாதனங்களுக்கு ஏற்ற மென்பொருளுடன் மட்டுமே அவை இயங்க வேண்டுமென்பதால் நிறுவப்படுவதற்கு முன்பே மென்பொருளைச் சரிபார்க்கிறோம். 2019 அல்லது அதன் பிறகு வெளியிடப்பட்ட எங்களின் சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட தொடக்கம் அம்சத்தைப் பயன்படுத்துகின்றன.

இது எதற்காகச் செய்யப்படுகிறது?
Google Nest சாதனங்களில் தீங்கிழைக்கும் மென்பொருள் நிறுவப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கிறோம். இது அனுமதியின்றி மற்றவர்கள் உங்கள் கணக்கை அணுகுவதையும் சாதனங்களைக் கட்டுப்படுத்துவதையும் தடுக்க உதவுகிறது.

சாதனத்தில் தீங்கிழைக்கக்கூடிய மென்பொருள் இயங்குவதை எவ்வாறு தடை செய்யலாம்?

முதலாவதாக, மென்பொருளை நிறுவும் முன்பு அதில் Googleளின் கையொப்பம் உள்ளதை கிரிப்டோகிராஃபிக் முறையில் சரிபார்த்து உறுதிசெய்வோம். இரண்டாவதாக, 2019ம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட எங்களின் சாதனங்கள் சரிபார்க்கப்பட்ட தொடக்கம் அம்சத்தைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் சாதனங்கள் ஒவ்வொரு முறை தொடங்கும்போதும் அவற்றில் சரியான மென்பொருள் இயங்குவதைச் சரிபார்க்கிறோம்.

உறுதிப்பாடு

சாதனம் குறித்த வெளிப்படைத்தன்மை

Google Home ஆப்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள Google Nest சாதனங்களை உங்கள் Google கணக்கு சாதனச் செயல்பாட்டுப் பக்கத்தில் பட்டியலிடுகிறோம்.

இது எதற்காகச் செய்யப்படுகிறது?
நீங்கள் உள்நுழைந்துள்ள சாதனங்கள் அனைத்தையும் உங்களின் Google கணக்குச் சாதனச் செயல்பாட்டுப் பக்கத்தில் பார்க்கலாம். இதன் மூலம் தேவைப்படும் சாதனங்களுடன் மட்டும் உங்கள் கணக்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

எனது Google கணக்குடன் சாதனம் எவ்வாறு இணைக்கப்படுகிறது?

மொபைல், கம்ப்யூட்டர், ஆப்ஸ், கனெக்டட் ஹோம் சாதனம் போன்றவற்றில் உள்நுழைய உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தும்போது அவை இணைக்கப்படுகின்றன. உங்களுக்குச் சொந்தமில்லாத அல்லது நீங்கள் கட்டுப்படுத்தாத சாதனங்களிலிருந்து வெளியேறியுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், தெரியாத சாதனங்கள் உங்கள் Google கணக்கில் உள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

எனது கணக்கில் நான் அறியாத சாதனங்களைப் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வது?

அணுகலை ரத்துசெய்யவும் கடவுச்சொல்லை மாற்றவும் சாதனத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து வெளியேறுங்கள்.

கேமராக்கள்

நினைவுகளைச் சேமித்தல், அன்பானவர்களைத் தொடர்புகொள்ளுதல், பாதுகாப்பாக உணர்வதற்கு உதவுதல் போன்ற பல நோக்கங்களுக்காக நாம் வீட்டில் கேமராக்களைப் பயன்படுத்துகிறோம். Nest Cam போன்ற சாதனங்கள் உங்கள் வீட்டைக் கண்காணிக்கவும் நீங்கள் வீட்டில் இல்லாதபோதும் வீட்டில் நடப்பவை குறித்து உங்களுக்கு அறிவிக்கவும் வீடியோவைப் பயன்படுத்துகின்றன.

கேமராக்களைக் கொண்ட கனெக்டட் ஹோம் சாதனங்கள் அனைத்திற்கும் இவற்றை உறுதியளிக்கிறோம்:

நீங்களோ வீட்டிலுள்ள ஒருவரோ வெளிப்படையாகக் கேமராவையோ கேமரா தேவைப்படும் ஓர் அம்சத்தையோ (எ.கா. Nest Cam கண்காணிப்பு) இயக்கினால் மட்டுமே வீடியோ காட்சியை உங்கள் கேமரா Googleளுக்கு அனுப்பும். கேமராவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கிக்கொள்ளலாம்.

உங்கள் கேமரா இயக்கப்பட்டு வீடியோ காட்சி Googleளுக்கு அனுப்பப்படும்போது அதைக் குறிக்கும் வகையில் ஓர் இண்டிகேட்டரைக் (எ.கா. சாதனத்தில் பச்சை லைட் ஒளிர்தல்) காண்பீர்கள்.

உங்கள் Google கணக்கு மூலம் (உதாரணமாக, Nest Aware சந்தா மூலம்) சேமிக்கப்படும் வீடியோ காட்சியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் நீக்கலாம்.

நீங்களோ உங்கள் வீட்டில் உள்ளவர்களோ வெளிப்படையாக அனுமதியளித்தால் மட்டுமே மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் வீடியோ காட்சியைப் பகிர்வோம்.

Nest Hub Max சாதனத்தில் 'கேமரா மூலம் உணர்தல்' அம்சங்கள் உள்ளன. கேமராவில் தெரியும் காட்சிகளின் அடிப்படையில் உங்கள் உபயோகத்தைப் பிரத்தியேகமாக்கவும் கட்டுப்படுத்தவும் இவை உதவுகின்றன (எ.கா. சாதனம் உங்களை அடையாளம் காண உதவும் Face Match, சாதனத்தை நீங்களே கட்டுப்படுத்த உதவும் விரைவுச் சைகைகள்). இயக்கப்பட்டவுடன், சாதனத்திலுள்ள 'கேமரா மூலம் உணர்தல்' அம்சங்கள் உங்கள் Nest Hub Maxஸில் இருந்து வீடியோவையோ படங்களையோ Googleளுக்கு அனுப்பாது.

சேமிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எப்படிப் பார்ப்பது, நீக்குவது?

சேமிக்கப்பட்ட ஆடியோ ரெக்கார்டிங்கை நீக்க: Nest Cam ரெக்கார்டிங்கை Nest ஆப்ஸில் பார்க்கலாம் நீக்கலாம். Google Assistant உடன் பேசியதன் ரெக்கார்டிங்கை எனது செயல்பாடு இணைப்பிற்குச் சென்று பார்க்கலாம் நீக்கலாம்.

Nest Hub Maxஸின் கேமரா மூலம் உணர்தல் அம்சங்கள் எப்போதாவது எனது வீட்டிலிருந்து வீடியோக்களையும் படங்களையும் Googleளுக்கு அனுப்புமா?

ஆமாம். ஆனால் Face Match அமைவுச் செயல்முறையின்போது மட்டுமே அனுப்பும், நீங்கள் அமைவை முடித்தபின் அனுப்பாது. உங்கள் Nest Hub Maxஸில் Face Match அம்சத்தை அமைக்கும்போது உங்கள் முகத்தின் தனிப்பட்ட மாதிரியை உருவாக்க, மொபைலில் உங்கள் முகத்தைப் பல்வேறு கோணங்களில் படமெடுப்பீர்கள். இந்தப் படங்கள் Googleளுக்கு அனுப்பப்படும், எனது செயல்பாடு என்ற பக்கத்திற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்கலாம் நீக்கலாம். அமைவுச் செயல்முறையை முடித்தபிறகு Googleளுக்கு எந்த வீடியோக்களையும் படங்களையும் Face Match அனுப்பாது. விரைவுச் சைகைகள் அம்சத்திற்காக எந்தவொரு வீடியோவையோ படத்தையோ Googleளுக்கு அனுப்பத் தேவையில்லை. அத்துடன் இந்த அம்சங்கள் செயல்படப் பயன்படும் வீடியோவையும் படங்களையும் விளம்பரங்களிலிருந்து தனிப்படுத்தி வைக்கிறோம், விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க அவற்றைப் பயன்படுத்துவதில்லை.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் எனது வீடியோ காட்சிகள் எப்போது பகிரப்படும் என்பதற்கான உதாரணத்தை வழங்க முடியுமா?

இதற்கான ஓர் உதாரணம்: வீட்டுப் பாதுகாப்புச் சேவை வழங்குநர் உங்கள் வீட்டைப் பாதுகாக்க உதவியாக, Nest Cam வீடியோ கிளிப்புகளை அவர்களுடன் பகிரும் வசதியை உங்களுக்கு நாங்கள் வழங்கலாம். மேலும் உங்கள் சாதனத்தின் கேமராவைப் பிற Google சேவைகளுடனும் (எ.கா. YouTubeல் வீடியோவைப் பதிவேற்றுவது, Google Duo மூலம் வீடியோ அழைப்பைச் செய்வது) பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது Googleளின் தனியுரிமைக் கொள்கை பொருந்தும்.

இண்டிகேட்டர் ஒளிராமலேயே வீடியோ ரெக்கார்டிங் Googleளுக்கு எப்போதாவது அனுப்பப்படுமா?

எங்களின் கேமராக்களில் சில மாடல்கள் ஆஃப்லைனில் வீடியோ காட்சிகளை ரெக்கார்டு செய்யும் வசதி உள்ளது. இந்தக் கேமராக்களில், வீடியோ காட்சி ரெக்கார்டு செய்யப்பட்ட பின்பு கேமரா மீண்டும் ஆன்லைனுக்கு வரும்போது வீடியோ காட்சி பதிவேற்றப்படும். அதாவது எங்களின் சேவையகங்களுக்கு வீடியோ காட்சி அனுப்பப்படும்போது இண்டிகேட்டர் ஒளிராது, ஆனால் கேமரா வீடியோ காட்சியை ரெக்கார்டு செய்யும்போது விஷுவல் இண்டிகேட்டர் ஒளிரும்.

மைக்ரோஃபோன்கள்

குரலைப் பயன்படுத்தி வீடு முழுவதும் உள்ள சாதனங்களை நீங்கள் கட்டுப்படுத்துவது, நீங்கள் வீட்டில் இல்லாதபோது எதிர்பாராத நிகழ்வுகளைக் கண்டறிவது, ஸ்மார்ட் ஸ்பீக்கர் அல்லது டிஸ்ப்ளேயைப் பயன்படுத்தி குரல் அழைப்பு செய்வது போன்ற பல்வேறு நோக்கங்களுக்கு வீட்டில் மைக்ரோஃபோன்கள் பயன்படுகின்றன.

மைக்ரோஃபோன்களைக் கொண்ட கனெக்டட் ஹோம் சாதனங்கள் அனைத்திற்கும் இவற்றை உறுதியளிக்கிறோம்:

நீங்களோ உங்கள் வீட்டிலிருக்கும் ஒருவரோ Assistant உடன் பேசுவதைக் கண்டறிந்தால் (உதாரணமாக, “Ok Google” என்று சொல்வது) அல்லது ஆடியோ தேவைப்படும் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால் (உதாரணமாக, Nest Camமில் ஒலி விழிப்பூட்டல்கள், Nest Cam வீடியோ ரெக்கார்டிங்கின்போது ஆடியோ இயக்கப்பட்டிருப்பது) மட்டுமே உங்கள் சாதனம் ஆடியோவை Googleளுக்கு அனுப்பும். மைக்ரோஃபோனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கிக்கொள்ளலாம்.

உங்கள் மைக்ரோஃபோன் இயக்கப்பட்டு ஆடியோ Googleளுக்கு அனுப்பப்படும்போது அதைக் குறிக்கும் வகையில் ஓர் இண்டிகேட்டரைக் (எ.கா. உங்கள் சாதனத்தின் மேல் பகுதியில் லைட்டுகள் விட்டுவிட்டு ஒளிர்தல், திரையில் லைட் ஒளிர்தல்) காண்பீர்கள்.

உங்கள் Google கணக்கு மூலம் (உதாரணமாக, நீங்கள் Nest Aware சந்தாதாரராக இருந்தால் Nest Cam வீடியோ காட்சியிலிருந்து பெறப்படும் ஆடியோ) சேமிக்கப்படும் ஆடியோ ரெக்கார்டிங்கை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் பார்க்கலாம் நீக்கலாம்.

நீங்களோ உங்கள் வீட்டில் உள்ளவர்களோ வெளிப்படையாக அனுமதியளித்தால் மட்டுமே எங்கள் சாதனங்களுடன் செயல்படும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் உங்கள் சாதனத்தின் ஆடியோ ரெக்கார்டிங்கைப் பகிர்வோம்.

சேமிக்கப்பட்ட ஆடியோ ரெக்கார்டிங்கை நான் எப்படிப் பார்ப்பது, நீக்குவது?

சேமிக்கப்பட்ட ஆடியோ ரெக்கார்டிங்கை நீக்க: Nest Cam ரெக்கார்டிங்கை Nest ஆப்ஸில் பார்க்கலாம் நீக்கலாம். Google Assistant உடன் பேசியதன் ரெக்கார்டிங்கை எனது செயல்பாடு பக்கத்திற்குச் சென்று பார்க்கலாம் நீக்கலாம். அத்துடன், குரல் கட்டளைகள் மூலமாகவும் Google Assistant செயல்பாடுகளை நீக்கலாம்.

Assistantடிடம் நான் பேசுவது கேட்பது எல்லாம் எனக்காக விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கப் பயன்படுத்தப்படுகிறதா?

உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்கை விளம்பரங்களிலிருந்து தனிப்படுத்தி வைக்கிறோம், விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க அவற்றைப் பயன்படுத்துவதில்லை. எனினும் Assistant உடன் நீங்கள் பேசும்போது, விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக, உங்கள் ஆர்வங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்தச் சொற்களை (உரையாக) நாங்கள் பயன்படுத்தக்கூடும். உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, உங்கள் Google அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் மதிப்பாய்வு செய்யலாம், விளம்பரப் பிரத்தியேகமாக்கலுக்கான ஒப்புதலை முழுமையாக நீக்கலாம். Google Assistant குறித்தும் உங்களுக்குக் கிடைக்கும் விருப்பத்தேர்வுகள் குறித்தும் இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் எனது ஆடியோ ரெக்கார்டிங் எப்போது பகிரப்படும் என்பதற்கான உதாரணத்தை வழங்க முடியுமா?

இதற்கான ஓர் உதாரணம்: வீட்டுப் பாதுகாப்புச் சேவை வழங்குநர் உங்கள் வீட்டைப் பாதுகாக்க உதவியாக, Nest Cam ஆடியோ கிளிப்புகளை அவர்களுடன் பகிரும் வசதியை உங்களுக்கு நாங்கள் வழங்கலாம்.

இண்டிகேட்டர் ஒளிராமலேயே ஆடியோ ரெக்கார்டிங் Googleளுக்கு எப்போதாவது அனுப்பப்படுமா?

சில சமயங்களில் நீங்கள் Google Assistantடிடம் கேட்பது சாதனத்திலேயே விரைவாக நிறைவேற்றப்பட்டுவிடும். இது போன்ற சமயங்களில் இண்டிகேட்டர் ஒளிர்வதை நிறுத்தி, நீங்கள் கேட்டது நிறைவேற்றப்பட்ட பிறகே ஆடியோ ரெக்கார்டிங் Google சேவையகங்களுக்கு அனுப்பப்படும். பொதுவாக ஆடியோ தரவு Google சேவையகங்களுக்கு அனுப்பப்படும்போதுதான் இண்டிகேட்டர் ஒளிரும். ஆனால் இதற்கு மாறாக மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளில் மைக்ரோஃபோன் இயங்கும்போது இண்டிகேட்டர் ஒளிரும்.

வீட்டு சென்சார்கள்

வீட்டின் சுற்றுச்சூழல், அங்கு என்ன நடக்கிறது (அசைவுகள், வீட்டில் யாராவது இருக்கிறார்களா இல்லையா, சுற்றுப்புற வெளிச்சம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவை) ஆகிய தகவல்களைக் கண்டறியும் சென்சார்கள் எங்கள் சாதனங்கள் சிலவற்றில் உள்ளன. இந்த சென்சார்கள் பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுகின்றன. நீங்கள் சிறந்த சேவைகளைப் பெற உங்கள் வீட்டிற்கு உதவுகின்றன (எ.கா. நீங்கள் வெளியே செல்லும்போது Nest Learning Thermostat தானாகவே ஆஃப் ஆவது), அத்துடன் உங்கள் சாதனங்களையும் உங்களுக்கு வழங்கப்படும் சேவைகளையும் மேம்படுத்தவும் எங்களுக்கு உதவுகின்றன.

இந்தச் சுற்றுச்சூழல் மற்றும் ஆக்டிவிட்டி சென்சார்களைக் கொண்ட கனெக்டட் ஹோம் சாதனங்கள் அனைத்திற்கும் இவற்றை உறுதியளிக்கிறோம்:

உங்கள் வீட்டின் சூழலிலிருந்து சேகரிக்கப்படும் சென்சார் அளவீடுகள் எங்கள் சாதனங்களிலும் சேவைகளிலும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள உதவுவோம். இதற்காகவே எங்கள் சாதனங்களில் உள்ள சென்சார்களுக்கான இந்த வழிகாட்டியை வெளியிட்டுள்ளோம்.

நீங்களோ உங்கள் வீட்டில் உள்ளவர்களோ வெளிப்படையாக அனுமதியளித்தால் மட்டுமே எங்கள் சாதனங்களுடன் செயல்படும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் உங்கள் சாதனத்தின் சென்சார் தரவைப் பகிர்வோம்.

எனது வீட்டிலிருந்து சுற்றுச்சூழல் மற்றும் ஆக்டிவிட்டி சென்சார் தரவை Google எதற்காகச் சேகரிக்கிறது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

வீட்டின் சுற்றுச்சூழல், அங்கு என்ன நடக்கிறது (அசைவுகள், வீட்டில் யாராவது இருக்கிறார்களா இல்லையா, சுற்றுப்புற வெளிச்சம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவை) ஆகிய தகவல்களைக் கண்டறியும் சுற்றுச்சூழல் மற்றும் ஆக்டிவிட்டி சென்சார்கள் எங்கள் சாதனங்களில் உள்ளன. இந்த சென்சார்களில் இருந்து வழக்கமாக Googleளுக்கு அனுப்பப்படும் தரவு பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுகிறது. இந்த நோக்கங்களில் நீங்கள் சிறந்த சேவைகளைப் பெற உங்கள் வீட்டிற்கு உதவுவது, உங்கள் சாதனங்களையும் சேவைகளையும் மேம்படுத்த எங்களுக்கு உதவுவது, உங்களுக்குத் தகவலளிப்பது போன்றவை அடங்கும். எடுத்துக்காட்டாக:

  • உங்களின் Nest Learning Thermostatடில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பத சென்சார்கள் மின்சாரத்தைச் சேமிக்கும் அதேவேளையில் வீட்டில் இதமான சூழலைப் பராமரிக்கவும் உதவுகின்றன.
  • நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போதும் திரும்பி வரும்போதும் Nest சாதனங்களின் அமைப்பை அதற்கேற்றபடி மாற்ற, உங்கள் வீட்டிலுள்ள பல்வேறு Nest சாதனங்களிலுள்ள ஆக்டிவிட்டி சென்சார்களை 'வீட்டில்/வெளியே' உதவி அம்சம் பயன்படுத்துகிறது.
  • சூரிய ஒளி நேரடியாகப் படும்போது அது தெர்மோஸ்டாட்டுகளை அசல் வெப்பநிலையைவிட அதிகமான வெப்பநிலை இருப்பதுபோல அளவிடச் செய்கிறதா என்பதைத் தீர்மானிக்க, எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரின் தெர்மோஸ்டாட்டுகளில் இருந்தும் ஒருங்கிணைந்த வடிவத்தில் சேகரிக்கப்பட்ட, சுற்றுச்சூழல் வெளிச்சம் மற்றும் வெப்பநிலை சென்சார் தரவை நாங்கள் பயன்படுத்தினோம். தெர்மோஸ்டாட்டுகள் இதைச் சரிசெய்துகொண்டு சரியான வெப்பநிலையைக் காட்ட உதவுவதற்கு, Sunblock எனும் புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்தோம்.
  • எங்களின் சாதனங்கள் மற்றும் சேவைகளின் செயல்திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தவும் பிழையறிந்து திருத்தவும் உதவ சென்சார் தரவைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, எங்களின் சாதனங்களிலிருந்து பெறும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத் தரவைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் எவ்வாறு பேட்டரி நிலையைப் பாதிக்கிறது என்பதை அளவிடுகிறோம்.
  • Google சேவைகள் (கனெக்டட் ஹோம் சேவைகள் உட்பட) தொடர்பாக நீங்கள் விரும்பக்கூடியவை என நாங்கள் கருதும் புதிய அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்பவும் சென்சார் தரவை நாங்கள் பயன்படுத்தக்கூடும். ஆனால் Googleளிடம் இருந்து விளம்பர மின்னஞ்சல்களைப் பெற விரும்புகிறீர்களா இல்லையா என்பது குறித்த உங்களின் விருப்பத்தேர்வையும் எப்போதும் மதிக்கிறோம்.
  • விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, சுற்றுச்சூழல் மற்றும் ஆக்டிவிட்டி சென்சார் தரவை நாங்கள் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக, Nest Hubல் (2வது தலைமுறை) இருந்து கிடைக்கும் உறக்கத் தரவை விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க நாங்கள் பயன்படுத்துவதில்லை. (கனெக்டட் ஹோம் சாதனங்கள் தொடர்பான சில கோரிக்கைகளை நிறைவுசெய்ய, சென்சார் அளவீட்டை உங்கள் Assistant மீட்டெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, “Ok Google, வீட்டுக்குள்ள டெம்பரேச்சர் என்ன?” Google Assistant குறித்தும் உங்களுக்குக் கிடைக்கும் விருப்பத்தேர்வுகள் குறித்தும் தக்கவைத்தல் கொள்கையில் விளக்கியுள்ளபடி சென்சார் தரவும் நீக்கப்படும்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் எனது சென்சார் தரவு எப்போது பகிரப்படும் என்பதற்கான உதாரணத்தை வழங்க முடியுமா?

உபயோகத்தைக் குறைத்ததற்கான ரிவார்டுகள் போன்ற மின்சாரத்தைச் சேமிக்கும் திட்டங்கள் மற்றும் சேவைகளில் இருந்து பலனடைய, மின்சார வழங்குநர்களுடன் தரவைப் பகிர நீங்கள் தேர்ந்தெடுக்க முடிவது இதற்கு ஓர் உதாரணமாகும்.

வைஃபை தரவு

Google Wi-Fi சாதனங்கள் என்பவை உங்களின் மோடம் மற்றும் இணையச் சேவை வழங்குநருடன் செயல்படக்கூடிய ரூட்டர் சிஸ்டங்களாகும். இதன் மூலம் முழு வீட்டிற்கான வைஃபை மெஷ் நெட்வொர்க்கை உருவாக்கலாம். மேம்பட்ட வைஃபை கவரேஜையும் பயன்பாட்டையும் வழங்க, உங்களின் நெட்வொர்க் செயல்திறன் குறித்த தரவை (எ.கா. நெட்வொர்க் வேகம், இணைய வேகப் பயன்பாடு) இந்தச் சாதனங்கள் பயன்படுத்துகின்றன. அத்துடன் எந்தெந்தச் சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன, அவை எவ்வளவு இணைய வேகத்தைப் பயன்படுத்துகின்றன என்பதையும் நீங்கள் இதில் காணலாம்.

Google Wifi சாதனங்களுக்கு இவற்றை உறுதியளிக்கிறோம்:

நீங்கள் பார்வையிடும் இணையதளங்களையோ உங்கள் வைஃபை நெட்வொர்க் டிராஃபிக்கின் உள்ளடக்கத்தையோ Google Wi-Fi சாதனங்கள் கண்காணிப்பதில்லை.

உங்கள் வைஃபை நெட்வொர்க் செயல்திறன் தரவை விளம்பரங்களிலிருந்து தனிப்படுத்தி வைக்கிறோம், விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க அதைப் பயன்படுத்துவதில்லை.

நீங்களோ உங்கள் வைஃபை நெட்வொர்க் நிர்வாகியோ அனுமதியளித்தால் மட்டுமே எங்கள் கனெக்டட் ஹோம் சாதனங்களுடன் செயல்படும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் உங்கள் Google வைஃபை சாதனங்களிலிருந்து பெறும் வைஃபை நெட்வொர்க் செயல்திறன் தரவைப் பகிர்வோம்.

எனது Google Wifi ரூட்டர் தரவு எதற்காக Googleளுக்கு அனுப்பப்படுகிறது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

Google Wifi இங்கே விளக்கப்பட்டுள்ளபடி தரவைச் சேகரித்துப் பயன்படுத்துகிறது. இதில் உங்களிடமுள்ள இணைக்கப்பட்ட சாதனங்களின் வகைகள், அவற்றின் நெட்வொர்க் உபயோகம் ஆகியவை குறித்த தகவல்களும் அடங்கும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள கிளவுட் சேவைகள், வைஃபை பாயிண்ட் புள்ளிவிவரங்கள், ஆப்ஸ் புள்ளிவிவரங்கள் (இவற்றை “வைஃபை நெட்வொர்க் செயல்திறன் தரவு” என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்) ஆகியவை விளம்பரப் பிரத்தியேகமாக்கலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. Google சேவைகள் குறித்த (கனெக்டட் ஹோம் சாதனங்களும் சேவைகளும் உட்பட), உங்களுக்கு உதவக்கூடும் என்று நாங்கள் கருதும் அறிவிப்புகளை அனுப்ப இந்தத் தரவை நாங்கள் பயன்படுத்தலாம். உதாரணமாக, உங்கள் இணைய இணைப்பை மேம்படுத்த கூடுதல் வைஃபை பாயிண்ட்டைச் சேர்க்கும்படி பரிந்துரைத்தல். இங்கே விளக்கப்பட்டுள்ளபடி இந்தத் தரவுத் தொகுப்பின் சில பகுதிகளுக்கான ஒப்புதலை நீங்கள் நீக்கிக்கொள்ளலாம்.

நீங்கள் பார்வையிடும் இணையதளங்களையோ உங்கள் வைஃபை நெட்வொர்க் டிராஃபிக்கின் உள்ளடக்கத்தையோ Google Wifi கண்காணிக்காது. Google Wifi உங்கள் இயல்புநிலை DNS வழங்குநரை “தானியங்கு” என்று அமைக்கும். சில குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால் Google பப்ளிக் DNS அல்லது உங்கள் இணைய சேவை வழங்குநரின் (ISP) DNSஸை இது பயன்படுத்தும். Google பப்ளிக் DNS சேகரிப்பவை குறித்த மேலும் விவரங்களை இங்கே அறிந்துகொள்ளலாம். Google Home ஆப்ஸின் மேம்பட்ட நெட்வொர்க்கிங் அமைப்புகளில் உங்கள் DNS வழங்குநரை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் எனது வைஃபை நெட்வொர்க்கின் செயல்திறன் தரவு எப்போது பகிரப்படும் என்பதற்கான உதாரணத்தை வழங்க முடியுமா?

இணையச் சேவை வழங்குநர் உங்கள் வைஃபை/இணைய இணைப்புச் சிக்கல்களைப் பிழையறிந்து திருத்த உங்களுக்கு உதவ, உங்கள் வைஃபை நெட்வொர்க் செயல்திறன் தரவை உங்களால் அவர்களுடன் பகிர முடிவது இதற்கு ஓர் உதாரணமாகும்.

Nest
Google Storeரில்
Nest சாதனத்தை வாங்குங்கள்.
எங்களின் தயாரிப்புகள் அனைத்தும்
எவ்வாறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.