பின்புலச் சோதனை

இணையத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க பின்னணியில் Google என்னென்ன செய்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்

உள்கட்டமைப்பு

உலகின் மிகப்பெரிய, பாதுகாப்பான கிளவுட் உள்கட்டமைப்புகளில் ஒன்றை Google இயக்குகிறது. உலகம் முழுவதும் அதன் தரவு மையங்கள் அமைந்துள்ளன. மேலும் அவை கடலுக்கடியில் இயங்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்த சிஸ்டமும் நாள் முழுவதும் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது.

Google Play Protect

மால்வேர் மற்றும் வைரஸ்கள் உள்ளனவா என தினமும் சுமார் 5000 கோடி Android ஆப்ஸை Play Protect சேவைகள் சரிபார்க்கின்றன. ஒரு வழங்குநர் Google Play Storeரில் ஓர் ஆப்ஸைப் பதிவேற்ற முயலும்போது முதல் பரிசோதனை நிகழ்கிறது. பயனர்கள் ஓர் ஆப்ஸைப் பதிவிறக்கினாலும் அதைச் சாதனத்தில் பயன்படுத்த விரும்பினாலும் Google Play Protect சேவை அந்த ஆப்ஸைப் பரிசோதித்திடும். தீங்கிழைக்கக்கூடிய ஆப்ஸைச் சேவை கண்டறியும்போது Google பயனரை எச்சரிக்கும் அல்லது தானாகவே ஆப்ஸை அகற்றும். கூடுதல் தகவலுக்கு android.com தளத்தைப் பாருங்கள்.

என்க்ரிப்ஷன்

Gmail வழியாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களையும் கிளவுடில் பயனர்கள் சேமிக்கும் படங்களையும் பாதுகாப்பதற்காகப் பல்வேறு என்க்ரிப்ஷன் தொழில்நுட்பங்களை Google பயன்படுத்துகிறது (எ.கா. HTTPS, டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டி). Googleளின் தேடல் இன்ஜினின் தரநிலைகளிலும் HTTPS நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.

தரவுக் கோரிக்கைகளைச் சரிபார்த்தல்

உளவுத்துறையோ பிற அரசாங்க நிறுவனங்களோ பயனரின் தரவை நேரடியாக அணுகுவதற்கான அனுமதியை Google வழங்காது. அமெரிக்கா, ஜெர்மனி உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும். பயனரின் தரவை அணுகுவதற்கான அனுமதியை ஓர் ஆணையம் கோரினால், Google அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்து நியாயமான காரணம் இருந்தால் தவிர அணுகலை வழங்காது. Google பல ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது, அதில் தரவை அணுகுவதற்கான கோரிக்கைகளும் அடங்கும். அறிக்கைகளைப் படிக்க transparencyreport.google.com என்ற தளத்தைப் பாருங்கள்.

பாதுகாப்பாக உலாவுதல்

ஆபத்தான தளங்களில் இருந்தும் தீங்கிழைப்பவர்களிடம் இருந்தும் Google பாதுகாப்பு உலாவல் தொழில்நுட்பம் பயனர்களைப் பாதுகாக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கிய அங்கமாகத் தரவுத்தளம் உள்ளது, சந்தேகத்திற்குரிய இணையதளங்களின் முகவரிகள் அதில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த இணையதளங்களைப் பயனர் பார்க்க முயலும்போது எச்சரிக்கையைப் பெறுவார். புதிதாக உருவெடுக்கும் ஃபிஷிங் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களையும் Google பயன்படுத்துகிறது. இது குறித்து மேலும் அறிய safebrowsing.google.com தளத்தைப் பாருங்கள்.

பிழைகளைச் சரிசெய்தல்

ஒவ்வொரு ஆண்டும், ஆய்வு தொடர்பான திட்டப்பணிகளுக்காகவும் “பிழை கண்டுபிடிப்பாளர்” நிதிக்காகவும் லட்சக்கணக்கான டாலர்களை Google முதலீடு செய்கிறது. பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் IT நிபுணர்களுக்கு இவற்றை ரிவார்டுகளாக வழங்குகிறது. இதுபோன்ற பல குறைபாடுகளை Google கண்டுபிடிக்க உதவிய நிபுணர்களில் ஒருவர்தான் உருகுவே நாட்டைச் சேர்ந்த 18 வயதான எஸிகுயல் பெரேரியா என்பவர். கடந்த ஆண்டு, ஒரு முக்கியமான கண்டுபிடிப்புக்காக அவர் $36,337 ரிவார்டாகப் பெற்றார்.

Project Zero

ஹேக்கர்களும் தரவுத் திருடர்களும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியும் முன்பே அவற்றைச் சரிசெய்ய Googleளின் உயரடுக்குப் பாதுகாப்புக் குழு கடுமையாகப் பணியாற்றி வருகிறது. இந்தப் "பாதுகாப்புக் குறைபாடுகளை "ஜீரோ டே வல்னரபிலிட்டீஸ் (zero-day vulnerabilities)" என்று குறிப்பிடுகிறார்கள், அதனாலேயே இந்தக் குழுவிற்கு Project Zero என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் குழு முழுமையாக Google சேவைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல் போட்டியாளர்களின் சேவைகளில் உள்ள பலவீனங்களிலும் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் அந்தக் குறைபாடுகளை அவர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்களின் பயனர்களையும் பாதுகாக்க முடியும். Project Zeroவின் பணி தொடர்பான கூடுதல் தகவலுக்கு googleprojectzero.blogspot.com தளத்தைப் பாருங்கள்.

பிற IT வழங்குநர்களுக்கான உதவி

இணையத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சியில், Google தனது பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை Google நிறுவனத்திற்குள் மட்டுமின்றி பிற நிறுவனங்களுக்கும் கட்டணமின்றி தொடர்ந்து கிடைக்கச் செய்கிறது. உதாரணத்திற்கு, குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா எனக் கண்டறிய வேறு நிறுவனங்களில் உள்ள டெவெலப்பர்களும் கிளவுட் பாதுகாப்பு ஸ்கேனரைப் பயன்படுத்தலாம். மேலும் Apple Safari மற்றும் Mozilla Firefox உலாவிகளில் Googleளின் பாதுகாப்பு உலாவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

AI மூலமான ஸ்பேம் பாதுகாப்பு

Gmail பயனர்களை ஸ்பேமிலிருந்து பாதுகாக்க Google மெஷின் லேர்னிங்கைப் பயன்படுத்துகிறது. அனுமதி பெறாத/தேவையற்ற கோடிக்கணக்கான மின்னஞ்சல்களை நியூரல் நெட்வொர்க்குகள் பகுப்பாய்வு செய்து, ஸ்பேமைக் கண்டறிய உதவும் பேட்டர்ன்களை அடையாளம் காண்கின்றன. இந்த அணுகுமுறை வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆயிரம் ஸ்பேம் மின்னஞ்சல்களில் அநேகமாக ஒரு மின்னஞ்சல் மட்டுமே பயனரின் இன்பாக்ஸுக்குச் செல்கிறது, மேலும் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தும் வருகிறது!

safety.google தளத்தில் மேலும் அறிந்துகொள்ளுங்கள்

விளக்கப்படங்கள்: ராபர்ட் சாமுவேல் ஹான்சன்

இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்

உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் அறிக