ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க உங்களுக்கு உதவும்
கருவிகளும் உதவிக்குறிப்புகளும்.

தொழில்துறையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மூலம் உங்கள் தனியுரிமையை நாங்கள் பாதுகாக்கிறோம். ஆன்லைனில் உங்கள் பாதுகாப்பை நிர்வகிக்கவும் உங்களுக்கேற்ற பாதுகாப்பு அம்சங்களைத் தேர்வுசெய்யவும் கூடுதலாக நீங்கள் செய்ய வேண்டியவை சில உள்ளன.

உங்கள் Google கணக்கின்
பாதுகாப்பை வலுப்படுத்துங்கள்.

பாதுகாப்புச் சரிபார்ப்பு

பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்ளுங்கள்

Google கணக்கைப் பாதுகாப்பதற்கான எளிய வழிகளுள் ஒன்று பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்வதாகும். உங்கள் Google கணக்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உதவ, பிரத்தியேகமான மற்றும் செயல்படுத்துவதற்கு எளிதான பரிந்துரைகளை இந்தக் கருவி படிப்படியாக உங்களுக்கு வழங்கும்.

இருபடிச் சரிபார்ப்பு

இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தி ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்

நீங்கள் கணக்கில் உள்நுழைவதற்குப் பயன்படுத்தும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் சேர்த்து இரண்டாம் நிலைக் காரணியும் அவசியம் என்பதால் உங்கள் கணக்கை அணுகக்கூடாத எவரையும் கணக்கை அணுகவிடாமல் தடுக்க இருபடிச் சரிபார்ப்பு உதவும். ஆன்லைனில் இலக்கு வைத்துத் தாக்கப்படும் ஆபத்துள்ளவர்கள் மற்றும் கூடுதல் வலுவான பாதுகாப்பு அம்சங்கள் தேவைப்படுபவர்களுக்காக மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

கடவுச்சொற்களைப்
பயன்படுத்துங்கள்.

உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க, ஒவ்வொரு கணக்கிற்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொல்லை உருவாக்குவது என்பது மிகவும் முக்கியமான படிகளில் ஒன்றாகும். Google கணக்கு, சமூக வலைதளச் சுயவிவரங்கள், சில்லறை விற்பனை இணையதளங்கள் போன்ற பல கணக்குகளில் உள்நுழைவதற்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது பாதுகாப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துங்கள்

உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க, ஒவ்வொரு கணக்கிற்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொல்லை உருவாக்குவது என்பது மிகவும் முக்கியமான படிகளில் ஒன்றாகும். Google கணக்கு, சமூக வலைதளச் சுயவிவரங்கள், சில்லறை விற்பனை இணையதளங்கள் போன்ற பல கணக்குகளில் உள்நுழைவதற்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது பாதுகாப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

உங்கள் கடவுச்சொற்கள் அனைத்தையும் கண்காணியுங்கள்

கடவுச்சொல் நிர்வாகி என்பது உங்கள் Google கணக்கில் உள்ளதைப் போன்றே செயல்படும். இது ஆப்ஸிலும் இணையதளங்களிலும் நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக வைக்கவும் கண்காணிக்கவும் உதவுகிறது. Googleளின் கடவுச்சொல் நிர்வாகி நீங்கள் கடவுச்சொற்களை உருவாக்கவும் அவை அனைத்தையும் பாதுகாப்பாகச் சேமிக்கவும் நினைவில் வைத்திருக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உங்களால் பாதுகாப்பாகவும் எளிதாகவும் உங்கள் கணக்குகளில் உள்நுழைய முடியும்.

உங்கள் கடவுச்சொற்களில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளனவா எனப் பாருங்கள்

விரைவான கடவுச்சொல் சரிபார்ப்பின் மூலம், சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் அனைத்தின் வலிமையையும் பாதுகாப்பையும் சரிபார்க்கலாம். மூன்றாம் தரப்புத் தளங்கள் அல்லது கணக்குகளுக்கான உங்களின் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களில் எவையேனும் இணையத்தில் கசிந்திருந்தால் அதை அறிந்துகொள்ளலாம், அவற்றை எளிதில் மாற்றலாம்.

Googleளின் கடவுச்சொல் நிர்வாகி பற்றி மேலும் அறிக
உங்கள் சாதனங்களைப் பாதுகாத்திடுங்கள்.
இணையத்தில் பாதுகாப்பாக உலாவுங்கள்.
ஒரு மொபைலில் இணைப்பு பாதுகாப்பானது எனும் அறிவிப்பு காட்டப்படுகிறது
ஆன்லைன் மோசடிகள் மற்றும்
ஃபிஷிங் முயற்சிகளைத் தவிர்த்திடுங்கள்

மோசடி செய்பவர்கள் நம்பகமான செய்தி என்ற போர்வையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தி மோசடி செய்ய முயலலாம். மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல்கள் மட்டுமல்லாது மெசேஜ்கள், தானியங்கு அழைப்புகள், தீங்கிழைக்கும் இணையதளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியும் உங்களை ஏமாற்றக்கூடும்.

மோசடி செய்பவர்கள் உங்களை எவ்வாறு தொடர்புகொள்ளக்கூடும் என்பதை அறிந்திடுங்கள்

மோசடி செய்பவர்கள் நம்பகமான செய்தி என்ற போர்வையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தி மோசடி செய்ய முயலலாம். மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல்கள் மட்டுமல்லாது மெசேஜ்கள், தானியங்கு அழைப்புகள், தீங்கிழைக்கும் இணையதளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியும் உங்களை ஏமாற்றக்கூடும்.

சந்தேகத்திற்குரிய URLகள் அல்லது இணைப்புகளை எப்போதும் சரிபாருங்கள்

ஃபிஷிங் என்பது கடவுச்சொல், பேங்க் விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக உங்களை ஏமாற்ற முயலும் செயலாகும். இது பலவிதங்களில் நிகழலாம் (எ.கா. போலியான உள்நுழைவுப் பக்கம்). ஃபிஷிங்கில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சந்தேகத்திற்குரிய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். URL இணைப்பின் மீது கர்சரைக் கொண்டு சென்றோ மொபைலில் இணைப்பை நீண்டநேரம் அழுத்தியோ ஓர் இணையதளமோ ஆப்ஸோ நம்பகமானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் URL இணைப்பு "https" என்று தொடங்க வேண்டும்.

ஆள்மாறாட்டம் செய்பவர்கள் குறித்து கவனமாக இருங்கள்

மோசடி செய்பவர்கள் தங்களை நம்பகமான நிறுவனங்களைப் போல் காட்டிக் கொள்ளக்கூடும் (எ.கா. அரசாங்கம், லாப நோக்கமற்ற நிறுவனங்கள்). அதிகாரப்பூர்வ மூலம் எனக் குறிப்பிட்டு அனுப்பப்படும் செய்திகளைப் படிக்கும்போது எப்போதுமே கவனமாகத் தொடருங்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் செய்தி வழக்கத்திற்கு மாறாக இருந்தால் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம். மின்னஞ்சல் நம்பகமானது என்பதை உறுதிப்படுத்தும் வரை, செய்திக்குப் பதிலளிக்க வேண்டாம் அல்லது எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம். அவசரமாகப் பணம் வேண்டும் என்று தெரிவிப்பது, வேறு நாட்டில் சிக்கித் தவிப்பதாகத் தெரிவிப்பது, தனது மொபைல் தொலைந்துவிட்டதாகவும் அதற்கு அழைப்பைச் செய்ய முடியவில்லை எனவும் கூறுவது போன்றவை எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கோரும் மின்னஞ்சல் மோசடிகள் அல்லது கோரிக்கைகள் குறித்து கவனமாக இருங்கள்

தெரியாதவர்களிடமிருந்து பெறப்படும் செய்திகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம். நம்பகமானவர்களிடம் இருந்து (எ.கா. உங்கள் பேங்க்) செய்திகளைப் பெற்றிருந்தாலும் அது ஆள்மாறாட்டமாக இருக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கோரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்கள், உடனடிச் செய்திகள் அல்லது பாப்-அப் சாளரங்களுக்குப் பதிலளிக்க வேண்டாம். சந்தேகத்திற்குரிய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம், மேலும் கேள்வி பதில் வடிவிலான படிவங்கள் அல்லது கருத்துக்கணிப்புகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட வேண்டாம். லாப நோக்கமற்ற நிறுவனத்துக்கு நன்கொடை அளிக்கும்படி கேட்டால் அந்நிறுவனத்தின் இணையதளத்திற்கு நேரடியாகச் சென்று நன்கொடையளியுங்கள். உங்களுக்கு அனுப்பப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம்.

ஃபைல்களைப் பதிவிறக்குவதற்கு முன்பு நன்றாகச் சரிபாருங்கள்

பாதிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் PDF இணைப்புகள் மூலம் சில அதிநவீன ஃபிஷிங் தாக்குதல்கள் ஏற்படலாம். சந்தேகத்திற்குரிய இணைப்பைக் கண்டறிந்தால் Chrome அல்லது Google Drive பயன்படுத்தி அதைத் திறந்திடுங்கள். ஃபைலை நாங்கள் தானாகவே ஸ்கேன் செய்து, வைரஸ் இருந்தால் அதுகுறித்து உங்களுக்கு எச்சரிப்போம்.

நாங்கள் உங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கும்
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.