தேடுவதற்கான பாதுகாப்பான வழி
கடந்த 20 ஆண்டுகளாக, பில்லியன் கணக்கான மக்கள் தங்கள் கேள்விகளுக்கு Google Search அம்சத்தை நம்பியுள்ளனர். நம்பகமான தகவல்களை வழங்குவதன் மூலமும் உள்ளமைந்த பத்திரப்படுத்தும் தொழில் நுட்பங்களுடன் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதன் மூலமும் நாங்கள் அந்த நம்பிக்கையைச் சம்பாதிப்பதற்காக ஒவ்வொரு நாளும் உழைக்கிறோம்.
நாங்கள் ஒவ்வொரு தேடலையும் என்கிரிப்ட் செய்வதன் மூலம் துறையின் முன்னணி தொழில்நுட்பங்களைக் கொண்டு உங்கள் தரவுகளைப் பாதுகாக்கிறோம். நாங்கள் கட்டுப்பாடுகளை உருவாக்குகிறோம் எனவே உங்களுக்குப் பொருத்தமான தனியுரிமை அமைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். மேலும் நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் விற்பனை செய்வதில்லை.
தரவுப் பாதுகாப்பு
உங்கள் தரவைப் பத்திரமாக வைக்க, நாங்கள் உலகின் மிகவும் மேம்பட்ட பத்திரப்படுத்தும் கட்டமைப்புகளில் சிலவற்றை உருவாக்கியுள்ளோம். இந்தக் கட்டமைப்புகள் உங்கள் சாதனத்திற்கும் எங்கள் தரவு மையங்களுக்கும் இடையேயான பரிமாற்றத்தின் போது உங்கள் தரவுகளைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைக்கிறது. நீங்கள் உங்கள் Search வரலாற்றை உங்கள் Google கணக்கில் சேமிக்கிறீர்கள் எனில், நீங்கள் உருவாக்கும் தரவுகள் உங்கள் சாதனம், Google சேவைகள், எங்கள் தரவு மையங்கள் ஆகியவற்றுக்கு இடையே பரிமாற்றப்படுகின்றன. நாங்கள் பரிமாற்றத்தின்போது HTTPS மற்றும் சேமிப்பில் இருக்கும்போது என்கிரிப்ஷன் போன்ற முன்னணித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல அடுக்குப் பாதுகாப்புகளுடன் இந்தத் தரவுகளைப் பாதுகாக்கிறோம்.
தரவுப் பொறுப்பு
நாங்கள் உங்கள் தரவுகளைப் பாதுகாத்து மதிப்பளிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளோம். எனவே தான் நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளை ஒருபோதும் விற்பனை செய்வதில்லை - அவ்வளவுதான்.
பயன்படுத்துவதற்கு எளிதான கட்டுப்பாடுகள்
Search தனியுரிமைக் கட்டுப்பாடுகளை வழங்குவதால் நீங்கள் உங்கள் Google கணக்கில் எதைச் சேமிக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியும். தொடர்ச்சியான முறையில் உங்கள் தரவுகளைத் தானாக அழிப்பதற்காக தானியங்கு-நீக்குதலையும் நீங்கள் இயக்கலாம்.
உங்கள் Search வரலாற்றிற்கான தனியுரிமைப் பாதுகாப்பு
நீங்கள் ஒரு சாதனத்தைப் பகிர்ந்துகொள்கிறீர்கள் எனில், அதைப் பயன்படுத்தும் மற்றவர்கள் எனது செயல்பாட்டிற்குச் சென்று அங்கு சேமிக்கப்பட்டுள்ள Search வரலாற்றைப் பார்க்க முடியாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இப்போது நீங்கள் எனது செயல்பாட்டிற்கு கூடுதல் சரிபார்ப்பு தேவை என்பதைத் தேர்ந்தெடுக்க முடியும். இந்த அமைப்பில், உங்கள் முழு வரலாற்றையும் பார்ப்பதற்கு முன் உங்கள் கடவுச்சொல் அல்லது இரு காரணி அங்கீகாரம் போன்ற கூடுதல் தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும்.
Google Search தேடுவதற்குப் பாதுகாப்பான வழியாகும். Search ஒவ்வொரு நாளும் 40 பில்லியன் ஸ்பேம் தளங்களைத் தேடல் முடிவுகளிலிருந்து தடுக்கிறது எனவே நீங்கள் பாதுகாப்பாகத் தேட முடியும், மேலும் உங்கள் எல்லாத் தேடல்களையும் என்கிரிப்ட் செய்வதன் மூலம் முன்முனைப்பாக உங்களைப் பாதுகாக்கிறது. உங்கள் முடிவுகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கும், உங்கள் தேடல் அனுபவத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்குமான கருவிகளையும் Search உங்களுக்கு வழங்குகிறது.
முடிவுகளிலிருந்து வெப்ஸ்பேமை Search முன்முனைப்பாகத் தடுக்கிறது.
முடிவுகளிலிருந்து வெப்ஸ்பேமை Search முன்முனைப்பாகத் தடுக்கிறது.
தனிப்பட்ட தகவல்கள் அல்லது உங்கள் அடையாளத்தைத் திருடும் தீங்கிழைக்கும் இணையத்தளங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க Search உதவுகிறது. ஒவ்வொரு நாளும் தேடல் முடிவுகளிலிருந்து 40 பில்லியன் ஸ்பேம் பக்கங்களை நாங்கள் கண்டறிந்து தடுக்கிறோம் - இதில் தீம்பொருள் உள்ள அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்ட ஏமாற்றும் தளங்களும் அடங்கும்.
பாதுகாப்பான உலாவல்
பாதுகாப்பான உலாவல்
Google பாதுகாப்பான உலாவல் நான்கு பில்லியனுக்கும் அதிகமான சாதனங்களைப் பாதுகாக்கிறது, மேலும் Chromeல் செயல்படுத்தப்படும் போது, நீங்கள் உள்நுழைய முயற்சிக்கும் தளம் பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக எச்சரிக்கைச் செய்தியைக் காட்டுகிறது. இந்த எச்சரிக்கைகள் சாத்தியமான தீம்பொருள் மற்றும் பிஷிங் மோசடிகளிலிருந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
எல்லாத் தேடல்களும் என்கிரிப்ஷனால் பாதுகாக்கப்படுகின்றன
Google.com மற்றும் Google செயலியில் எல்லாத் தேடல்களும் இயல்பாகவே என்கிரிப்ட் செய்யப்படுகின்றன, இது இத்தரவுகளை இடைமறிக்க முயற்சிக்கும் எவரிடமிருந்தும் உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைக்கும்.
பாதுகாப்பான தேடல்
பாதுகாப்பான தேடல் என்பது Google Searchல் ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சி போன்ற வெளிப்படையான உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் தேடல் முடிவுகளில் வெளிப்படையான உள்ளடக்கங்களைப் பார்க்க விரும்பவில்லையெனில், கண்டறியப்பட்ட வெளிப்படை உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு வடிகட்டுதல் என்பதை, அல்லது வெளிப்படை படங்களை மங்கலாக்குவதற்கு மங்கலாக்கு என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என Googleன் அமைப்புகள் குறிப்பிடும்போது பாதுகாப்பான தேடல் தானாகவே வடிகட்டுதலுக்கு அமைக்கப்படும்.
உங்கள் Google கணக்கில் உங்கள் Search வரலாற்றை எப்படிச் சேமிக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் எளிதில் கட்டுப்படுத்தலாம் - நீங்கள் அதனை கொஞ்சமும் சேமிக்க விரும்பவில்லை என்பது உட்பட.
எனது செயல்பாட்டில் உங்கள் Search வரலாற்றை நீக்கவும்
இணையம் & செயலி செயல்பாடு இயக்கத்தில் இருக்கும் நிலையில் நீங்கள் Googleல் தேடும்போது, Google உங்கள் Search வரலாறு போன்ற செயல்பாடுகளை உங்கள் Google கணக்கில் சேமிக்கிறது. நாங்கள் செயலி மற்றும் உள்ளடக்கப் பரிந்துரைகள் போன்ற கூடுதல் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை உங்களுக்கு வழங்குவதற்காக Google சேவைகளில் உங்கள் சேமிக்கப்பட்ட செயல்பாடுகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட Search வரலாற்றில் சிலவற்றையோ எல்லாவற்றையோ அழிப்பதற்காகவும் என்னென்ன செயல்பாடுகளை Google சேமிக்கிறது மற்றும் உங்கள் சேமிக்கப்பட்ட செயல்பாட்டை எப்போது Google தானாக நீக்குகிறது போன்ற அமைப்புகளை நிர்வகிப்பதற்காகவும் எனது செயல்பாட்டிற்குச் செல்லலாம்.
உங்கள் Search வரலாறு உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படாவிட்டால் கூட, அல்லது எனது செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டால் கூட, உங்கள் உலாவி அதனைச் சேமித்து வைத்திருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உலாவி வரலாற்றை எப்படி நீக்குவது என்ற வழிகாட்டுதல்களுக்கு உங்கள் உலாவியின் அறிவுறுத்தல்களைப் பாருங்கள்.
தானாக நீக்குதல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தவும்
தானாக நீக்குதல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தவும்
நீங்கள் மூன்று, 18 அல்லது 36 மாதங்களுக்குப் பிறகு உங்கள் கணக்கிலிருந்து, பிற இணைய & செயலி செயல்பாடுகளுடன் உங்கள் தேடல் வரலாற்றைத் தானாக மற்றும் தொடர்ச்சியாக Google நீக்குவதைத் தேர்ந்தெடுக்கலாம். புதிய கணக்குகளுக்கு, இணைய & செயலி செயல்பாட்டிற்கான இயல்புநிலை தானாக நீக்குதல் விருப்பம் 18 மாதங்கள் ஆகும், ஆனால் நீங்கள் விரும்பினால் உங்கள் அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம்.
பற்றி மேலும் அறிக