வாழ்நாள் நினைவுகளைச் சேமிப்பதற்கான
ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்திற்குமான இடமாக Google Photos உள்ளது. அவை இங்கே தானாக ஒழுங்கமைக்கப்படும், அவற்றை எளிதாகவும் பகிரலாம். மேம்பட்ட பாதுகாப்பு உள்கட்டமைப்பிலும் எளிதாகப் பயன்படுத்தும் தனியுரிமைக் கட்டுப்பாடுகளிலும் நாங்கள் முதலீடு செய்கிறோம். எனவே உங்கள் நினைவுகளை நீங்கள் பாதுகாப்பாகச் சேமிக்கலாம் பகிரலாம்.
பாதுகாப்பான சேமிப்பு
உலகிலேயே மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மூலம் Google சேவைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றன. இந்த உள்ளமைந்த பாதுகாப்பு, ஆன்லைன் அச்சுறுத்தல்களைத் தானாகக் கண்டறிந்து தடுக்கிறது. எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன என நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.
என்க்ரிப்ஷன்
பரிமாற்றத்தின்போது தரவைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க என்க்ரிப்ஷன் உதவுகிறது. நீங்கள் படங்களைச் சேமிக்கும்போது, உருவாக்கப்படும் தரவானது உங்கள் சாதனம், Google சேவைகள், எங்களின் தரவு மையங்கள் ஆகியவற்றுக்கு இடையே நகர்த்தப்படும். பரிமாற்றப்படாதபோது தரவை என்க்ரிப்ஷன் செய்தல், HTTPS போன்ற சிறந்த என்க்ரிப்ஷன் தொழில்நுட்பங்கள் உட்பட பல அடுக்குப் பாதுகாப்புடன் இந்தத் தரவைப் பாதுகாக்கிறோம். மேலும் அறிக.
முகத்தின்படி குழுவாக்குதல்
முகத்தின்படி குழுவாக்குதல் அம்சம் ஒரே முகங்களுள்ள படங்களைக் குழுவாக்கி, நீங்கள் படங்களை எளிதாகத் தேடவும் நிர்வகிக்கவும் உதவ அவற்றை வகைப்படுத்திடும். முகத்தின்படி குழுவாக்கப்பட்ட படங்களும் லேபிள்களும் உங்களுக்கு மட்டுமே காட்டப்படும். முகத்தின்படி குழுவாக்குதல் அம்சத்தை நீங்கள் இயக்கிக் கொள்ளலாம் அல்லது முடக்கிக் கொள்ளலாம். இந்த அம்சத்தை முடக்கினால் முகத்தின்படி குழுவாக்குதலுக்கான லேபிள்கள் உங்கள் கணக்கிலிருந்து நீக்கப்படும். பொது நோக்கத்திற்கான முகமறிதல் தொழில்நுட்பத்தை நாங்கள் தொழில்ரீதியாக வழங்குவதில்லை. மேலும் அறிக.
கூட்டாளர் திட்டம்
Google Photos APIயைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுடனும் டெவெலப்பர்களுடனும் நாங்கள் பணியாற்றுகிறோம். இதன் மூலம் உங்களின் Google Photos உபயோகத்தை மேம்படுத்தும் நியாயமான ஒருங்கிணைப்புகளை உருவாக்குவதை உறுதிப்படுத்துகிறோம். எங்களுடன் பணியாற்றும் கூட்டாளர்கள் எங்களின் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும். உங்கள் அனுமதியின்றி அவர்களால் உங்களின் தரவை அணுக முடியாது.
விளம்பர நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாது
உங்கள் படங்கள், வீடியோக்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை Google Photos யாரிடமும் விற்பதில்லை. மேலும் உங்கள் படங்களையோ வீடியோக்களையோ விளம்பரத்துக்காகப் பயன்படுத்துவதில்லை.
குறிப்பிட்டவற்றை மட்டும் காப்புப் பிரதி எடுத்தல்
உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் Google Photosஸில் காப்புப் பிரதி எடுக்கத் தேர்வுசெய்யலாம் அல்லது குறிப்பிட்டவற்றை மட்டும் உங்கள் Google கணக்கில் சேமித்துக் கொள்ளலாம். மேலும் அறிக.
நினைவுகள்
உங்களுக்கு மட்டுமே காட்டப்படும் உங்களின் சிறந்த தருணங்களைப் பார்த்து நினைவுகளை அசைபோடலாம். குறிப்பிட்ட நபர்கள் உள்ள படங்களையோ குறிப்பிட்ட காலகட்டத்திற்கான படங்களையோ 'நினைவுகளில்' காட்டாத வகையில் அமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த அம்சத்தை மொத்தமாக முடக்கிக்கொள்ளவும் முடியும். மேலும் அறிக.
வரைபடக் காட்சி
படங்களையும் அவை எடுக்கப்பட்ட இடத்தையும் ஊடாடத்தக்க வரைபடத்தில் பார்க்கலாம், இதை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட இருப்பிடத் தரவைப் பயன்படுத்தி இந்த வரைபடக் காட்சி காட்டப்படும். வரைபடத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட இருப்பிடத் தகவலை photos.google.com எனும் இணைப்பில் மாற்றலாம் அகற்றலாம். இனி உங்கள் படங்களை வரைபடக் காட்சியில் பார்க்க விரும்பவில்லை எனில் உங்கள் கேமரா ஆப்ஸில் 'இதுவரை சென்ற இடங்கள்' அம்சத்தையும் இருப்பிடத் தரவையும் நீங்கள் முடக்கிக் கொள்ளலாம். மேலும் அறிக.
Google Assistant
Google Assistantடைப் பயன்படுத்தி உங்கள் படங்களைக் கண்டறியலாம் பார்க்கலாம் பகிரலாம். உங்கள் Assistant சாதனங்களில் (எ.கா. Google Nest Hub, Android மொபைல்) என்ன காட்டப்பட வேண்டும் மற்றும் பகிரப்பட வேண்டும் என்பதை Assistant அமைப்புகளில் தேர்வுசெய்யலாம். Home ஆப்ஸில் ஒவ்வொரு சாதனத்திற்கும் தனித்தனியே உள்ள அமைப்புகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களிலோ Chromecastடுடன் இணைக்கப்பட்ட சாதனங்களிலோ காட்டப்படும் படங்களைத் தேர்வுசெய்யலாம் கட்டுப்படுத்தலாம்
Google Lens
Google Lens பயன்படுத்தித் தேடுவதன் மூலம் உங்கள் படங்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ளவை குறித்த தகவல்களைப் பெறலாம். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே தேடல் செயல்பாடுகள் உங்கள் கணக்கில் சேமிக்கப்படும். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் அசல் படங்கள் எதுவும் சேமிக்கப்படாது. உங்கள் Google கணக்குக்குச் சென்று உங்களுக்கேற்ற அமைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் அறிக.
ஆல்பத்தைப் பகிர்தல்
நீங்கள் ஓர் ஆல்பத்தைப் பகிரும்போது அதை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் அவர்களின் Google கணக்கின் மூலம் பகிர்வதே இயல்புநிலை விருப்பத்தேர்வாக இருக்கும். இதனால் ஆல்பத்தில் யாரைச் சேர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உங்களிடமே இருக்கும். இணைப்பின் மூலம் பகிரும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது. இதன் மூலம் Google Photosஸைப் பயன்படுத்தாதவர்கள் அல்லது Google கணக்கு இல்லாதவர்களுடன் படங்களை எளிதாகப் பகிரலாம். எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஆல்பங்களின் பகிர்தல் அமைப்புகளை மாற்றலாம் மற்றும் ஒவ்வொரு ஆல்பத்தையும் யாரெல்லாம் அணுக முடியும் என்பதைக் கட்டுப்படுத்தலாம். மேலும் அறிக.
நேரடியாகப் பகிர்தல்
படங்களையும் வீடியோக்களையும் ஒருமுறை மட்டுமே பகிர விரும்பினால் ஆப்ஸில் உள்ள தனிப்பட்ட உரையாடலில் பகிர்வதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது. மேலும் அறிக.
பகிர்தல் செயல்பாடு
Google Photos மூலம் நீங்கள் பகிர்ந்த அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும். இதன் மூலம் உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் இருந்த இனிய தருணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டறியலாம்.
குறித்து அறிந்துகொள்ளுங்கள்.