ஒவ்வொருவருக்கும் இணையம்
பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய
தொழில்துறைத் தரநிலைகளை உயர்த்துகிறோம்.

எங்களின் ஒவ்வொரு செயலிலும் நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு தயாரிப்பிலும் எங்கள் பயனர்களின் பாதுகாப்பும் தனியுரிமையுமே முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அனைவருக்குமான தொழில்துறைத் தரநிலைகளை உயர்த்தும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் பகிர்வதிலும் நாங்கள் தொழில்துறையில் முன்னணி வகிக்கிறோம்.

இணையத்தில் எங்கள் பயனர்கள் பாதுகாப்பாக
இருப்பதற்குப்
புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கிறோம்.

புதிய அச்சுறுத்தல்கள் தோன்றி வருவதாலும் பயனர்களின் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதாலும் எங்கள் தயாரிப்புகள் முழுவதிலும் ஒவ்வொரு பயனரின் தனிப்பட்ட தகவல்களையும் ஒவ்வொரு அபாய நிலையிலும் தானாகவே பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியாகப் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வருகிறோம்.

மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம்

அதிகத் தேவையுள்ளவர்களுக்கு
Googleளின் மிக வலுவான பாதுகாப்பு கிடைக்கிறது

மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் என்பது Googleளின் வலிமையான கணக்குப் பாதுகாப்பு அம்சமாகும். இது ஆன்லைனில் இலக்கு வைத்துத் தாக்கப்படும் ஆபத்து அதிகமுள்ள தனிப்பட்ட மற்றும் நிறுவன Google கணக்குகளைப் பாதுகாப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட தொழில்துறையின் முதல் இலவசத் திட்டமாக உள்ளது. உதாரணமாக, ஆட்சியில் இருப்பவர்கள், பிரச்சாரக் குழுக்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பிசினஸ் தலைவர்கள் ஆகியோர். இந்தத் திட்டம் பரந்த அளவிலான அச்சுறுத்தல்களுக்கு எதிராக முழு அளவிலான பாதுகாப்பை வழங்குவதோடு, தொடர்ந்து புதிய பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்துக்கொண்டு வருகிறது.

மேம்பட்ட பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ளுங்கள்

தரவுச் சேகரிப்பைக் குறைத்தல்

பயன்படுத்தப்படுகின்ற மற்றும் சேமிக்கப்படுகின்ற தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்துதல்

Mapsஸில் உங்களுக்குப் பிடித்த இடங்களைக் கண்டுபிடிப்பது அல்லது YouTubeல் எதைப் பார்ப்பது என்பதற்கான பரிந்துரைகளைப் பெறுவது என எதுவாக இருந்தாலும் உங்களுக்குப் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருக்கும் வரை மட்டுமே உங்கள் தகவல்களைத் தயாரிப்புகள் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

இதுவரை சென்ற இடங்கள் அம்சத்தை நீங்கள் முதல் முறையாக இயக்கும்போது (இயல்பாக முடக்கத்தில் இருக்கும்) தானாக நீக்கும் விருப்பம் இயல்பாக 18 மாதங்கள் என அமைக்கப்படும். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டின் தானாக நீக்கும் விருப்பமும் புதிய கணக்குகளுக்கு இயல்பாக 18 மாதங்கள் என அமைக்கப்பட்டிருக்கும். அதாவது செயல்பாட்டுத் தரவு நீங்கள் நீக்கும் வரை வைக்கப்படாமல், 18 மாதங்களுக்குப் பிறகு தானாகவும் தொடர்ச்சியாகவும் நீக்கப்படும். இந்த அமைப்புகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம், தானாக நீக்குதல் அமைப்பை மாற்றலாம்.

ஒரு மொபைலில் "he" என ஒருவர் டைப் செய்வதும் அதை "Hey" என Google தானாகக் கணிப்பதும் காட்டப்பட்டுள்ளது

ஃபெடரேட்டட் லேர்னிங்

குறைந்த தரவைப் பயன்படுத்தி உதவிகரமான தயாரிப்புகளை உருவாக்குகிறோம்

ஃபெடரேட்டட் லேர்னிங் என்பது தரவுச் சேகரிப்பைக் குறைக்கும் Googleளின் முன்னோடித் தொழில்நுட்பமாகும். இது மெஷின் லேர்னிங் (ML) திறனை உங்கள் சாதனத்திற்கே கொண்டுவருகிறது. இந்தப் புதிய அணுகுமுறை ML மாடல்களுக்கு பயிற்சியளிக்க வெவ்வேறு சாதனங்களிலிருந்து அடையாளம் நீக்கிய தகவல்களை ஒருங்கிணைக்கிறது. தனிப்பட்ட தகவல்களை முடிந்தவரை உங்கள் சாதனத்திலேயே வைத்திருப்பதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க ஃபெடரேட்டட் லேர்னிங் உதவுகிறது.

அடையாளம் நீக்கிச் செயலாக்குதல்

அடையாளம் நீக்கிச் செயலாக்குவதன் மூலம் தனியுரிமைப் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துகிறோம்

அடையாளம் நீக்கிச் செயலாக்கும் முன்னணித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் தரவைப் பாதுகாக்கிறோம். அத்துடன் உங்களுக்குப் பயன்படும் வகையில் சிறப்பான சேவைகளை வழங்குகிறோம். உதாரணமாக, லட்சக்கணக்கான பயனர்களிடமிருந்து தரவை ஒருங்கிணைத்து அடையாளம் நீக்கிச் செயலாக்குகிறோம். இதன் மூலம் ஓரிடத்திற்குச் செல்லும் முன்பு அந்த இடம் எவ்வளவு பிஸியாக இருக்கும் என்பதை நீங்கள் பார்க்கலாம்.

மேம்பட்ட பாதுகாப்பு உலாவல்

நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது பாதுகாக்கிறோம்

பாதுகாப்பான உலாவல் தொடர்பான தற்போதைய அம்சங்களைவிட மேம்பட்ட பாதுகாப்பான உலாவல் அதிகச் செயல்மிக்கது. இது உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது. Chromeமில் மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தைச் செயல்படுத்தினால், இணையத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், உங்கள் Google கணக்கிற்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றின் முழுமையான பார்வையை Google தானாகவே மதிப்பீடு செய்யும். அத்துடன் ஃபிஷிங், மால்வேர் மற்றும் பிற இணையம் சார்ந்த அச்சுறுத்தல்களிலிருந்து அதிகச் செயல்திறன்மிக்க, தக்க பாதுகாப்புகளையும் வழங்கும். மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

கூட்டுப்பணியின் மூலம் ஆன்லைனில் அனைவரையும்
பாதுகாப்பாக வைக்கிறோம்.

இணையத்தை அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக உருவாக்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதைச் செய்வதற்கு உதவ, எங்களின் தொழில்நுட்பங்களில் பலவற்றை ஓப்பன் சோர்ஸ் செய்கிறோம். அத்துடன் டெவெலப்பர்களும் நிறுவனங்களும் எங்கள் வளங்களை அணுக முடியும் வகையில் செய்கிறோம்.

பாதுகாப்பற்ற இணைப்பு குறித்த அறிவிப்பு ஒரு மொபைலில் காட்டப்படுகிறது

HTTPS என்க்ரிப்ஷன்

என்க்ரிப்ஷன் மூலம் இணையம் முழுவதுமுள்ள தளங்களைப் பாதுகாக்க உதவுகிறோம்

எங்கள் சேவைகளுக்கு HTTPS என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாப்பு வழங்குவதால் உங்கள் தகவல்களை யாரும் திருடமுடியாது. மேலும் உங்களால் தளங்களுடன் பாதுகாப்பாக இணைக்க முடிவதையும் கிரெடிட் கார்டு எண்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட முடிவதையும் இது உறுதிசெய்கிறது. எங்கள் தளங்களும் சேவைகளும் இயல்பாகவே நவீன HTTPSஸை வழங்குவதை உறுதிசெய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம். அனைத்து டெவெலப்பர்களுக்கும் கருவிகளையும் வளங்களையும் வழங்கி இணையம் முழுவதும் HTTPSஸுக்கு மாற உதவுவோம்.

ஏமாற்றும் இணையதளம் குறித்து Google Chrome வழங்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒரு மொபைலில் காட்டப்படுகிறது

பாதுகாப்பு உலாவல்

இணையத்தில் உள்ள அபாயகரமான தளங்கள், ஆப்ஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறோம்

பயனர்கள் அபாயகரமான தளங்களுக்குச் செல்லும்போது எச்சரிப்பதன் மூலம் மால்வேர் மற்றும் ஃபிஷிங் தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க, பாதுகாப்பு உலாவல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். பாதுகாப்பு உலாவல் அம்சமானது Chrome பயனர்களை மட்டுமின்றி மேலும் பலரையும் பாதுகாக்கிறது. ஒவ்வொருவருக்கும் இணையம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, Apple Safari, Mozilla Firefox உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தங்களின் உலாவிகளில் பயன்படுத்துவதற்காக இந்தத் தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்கியுள்ளோம். இன்று 400 கோடிக்கும் அதிகமான சாதனங்கள் பாதுகாப்பு உலாவல் அம்சம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. தளங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தால் தள உரிமையாளர்களை நாங்கள் எச்சரிக்கிறோம். அந்தச் சிக்கல்களை உடனடியாகத் தீர்ப்பதில் அவர்களுக்கு உதவ இலவசக் கருவிகளையும் வழங்குகிறோம்.

ஒரு மொபைலில் கோவிட்-19 தொடர்பான புள்ளிவிவரங்கள் பல்வேறு விதங்களில் காட்டப்பட்டுள்ளன

பயனரின் தரவைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைக்க, உலகத்தரம் வாய்ந்த அடையாளம் நீக்கிச் செயலாக்குதல் தொழில்நுட்பத்தை (நுண் பாதுகாப்பு உட்பட) Googleளின் கோவிட்-19 மக்கள் நடமாட்ட அறிக்கைகள் பயன்படுத்துகின்றன.

ஓப்பன் சோர்ஸ் தனியுரிமைத் தொழில்நுட்பங்கள்

எங்கள் தனியுரிமைப் பாதுகாப்பு அம்சங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் பகிர்கிறோம்

நாங்கள் வழங்கும் தனியுரிமைப் பாதுகாப்பு அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்தவும் இந்த மேம்பாடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதனால்தான் அடையாளம் நீக்கிச் செயலாக்குதல், தரவுச் சேகரிப்பைக் குறைத்தல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஓப்பன் சோர்ஸில் வழங்கியுள்ளோம். உதாரணம்: நுண் பாதுகாப்பு, ஃபெடரேட்டட் லேர்னிங், பிரைவேட் ஜாயின் அண்ட் கம்ப்யூட். ஒவ்வொருவரின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதேவேளையில் அனைவருக்கும் பயனளிக்கும் விவரங்களை வழங்க இந்த ஓப்பன் சோர்ஸ் கருவிகள் உதவுகின்றன என்று நம்புகிறோம்.

ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பு
உங்கள் Google கணக்கிற்கு அப்பாற்பட்டும் பாதுகாப்புகளை நீட்டிக்கிறோம்

ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பு என்பது உங்கள் Google கணக்கில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை Google உள்நுழைவு மூலம் நீங்கள் உள்நுழைந்திருக்கும் ஆப்ஸ், தளங்கள் ஆகியவற்றுக்கு நீட்டிக்கிறது. ஆப்ஸ் மற்றும் தளங்களில் ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகள் (எ.கா. கணக்கு அபகரிப்பு) குறித்த தகவல்களை எங்களால் அவற்றுக்கு அனுப்ப முடியும். இதன் மூலம் அவற்றால் உங்களையும் பாதுகாக்க முடியும். இந்த முன்னணித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த, பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் தரநிலைகள் சமூகத்துடனும் பணியாற்றி வருகிறோம். இதன் மூலம் இதை எல்லா ஆப்ஸிலும் எளிதாகச் செயல்படுத்தலாம்.

பாதுகாப்பின்மையைக் கண்டறிவதற்கு வெகுமதிகள்
பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய தொழில்துறைக் கூட்டாளர்களை ஊக்கப்படுத்துகிறோம்

Googleளில், எங்கள் சேவைகளில் பாதுகாப்பின்மையைக் கண்டறியும் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்காக, பாதுகாப்பின்மையைக் கண்டறிவதற்கான வெகுமதித் திட்டங்களை உருவாக்கி அவற்றில் முன்னோடியாகத் திகழ்கிறோம். எங்கள் பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் அனைத்து மேம்பட்ட வெளிப்புறப் பங்களிப்புகளுக்கும் வெகுமதி வழங்குவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான டாலர்களை ஆராய்ச்சி உதவித்தொகையாகவும் பிழை கண்டுபிடிப்பாளர் நிதியாகவும் வழங்குகிறோம். தற்போது Chrome, Android உட்பட எங்களின் பெரும்பாலான தயாரிப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிவதற்கென வெகுமதிகளை வழங்குகிறோம்.

பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிவதில் ஈடுபடும் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லாமல், ப்ராஜெக்ட் ஜீரோ எனப்படும் பொறியாளர்களின் அகக் குழுவும் எங்களிடம் உள்ளது. இந்தக் குழு, இணையம் முழுவதும் பயன்படுத்தப்படும் மென்பொருளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்காணித்துத் தெரிவிக்கும்.

அங்கீகரிப்புத் தரநிலைகள்
உங்களைப் பாதுகாப்பாக வைக்க அங்கீகரிப்புத் தரநிலைகளை உயர்த்துகிறோம்

இணையத்தில் வலுவான உள்நுழைவு மற்றும் அங்கீகரிப்புத் தரநிலைகளை இணைந்து உருவாக்குவதில் அல்லது ஏற்றுக்கொள்வதில் எப்போதும் முன்னோடியாகத் திகழ்கிறோம். தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, இணையத்திற்கென மையத் தரநிலைகளை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்பத்தைப் பகிர்கிறோம். உதாரணமாக, லாப நோக்கமற்ற நிறுவனமான FIDO Allianceஸுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம், பயனர்கள், நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கான புதிய தொழில் தரநிலைகளை அமைக்கவும் செயலாக்கவும் முடிந்தது. மேலும் அந்த நிறுவனங்களில் உள்ள அனைவரும் கணக்கைப் பாதுகாப்பாக அணுகுவதையும் உறுதிசெய்ய முடிந்தது.

ஓப்பன் சோர்ஸ் பாதுகாப்பு
டெவெலப்பர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகளைக் கிடைக்கச்செய்து அதன் மூலம் பாதுகாப்பு அபாயங்களைத் தடுக்க உதவுகிறோம்

எங்கள் பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றவர்களுக்கு உதவும் என நம்பும்போதெல்லாம் அதை மற்றவர்களுடன் பகிர்கிறோம். உதாரணமாக, எங்களின் Google கிளவுட் இணையப் பாதுகாப்பு ஸ்கேனரை டெவெலப்பர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். இதன் மூலம் அவர்கள் தங்களின் வெப் ஆப்ஸில் பாதுகாப்பு தொடர்பான பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதை ஸ்கேன் செய்து பகுப்பாய்வு செய்துகொள்ளலாம். நாங்களே உருவாக்கிய பல பாதுகாப்புக் கருவிகளை மற்றவர்கள் பயன்படுத்துவதற்காக ஓப்பன் சோர்ஸ் திட்டப்பணிகளாக வழங்கியுள்ளோம்.

வாஷிங்டன், DCயில் உள்ள ஃபெடரல் ட்ரையாங்கிள் அருங்காட்சியகத்தில் வைத்து தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான உதவிக்குறிப்புகளை Google நம்பிக்கை & பாதுகாப்புக் குழு நிபுணர்கள் பகிர்கின்றனர்.

ஆன்லைன் பாதுகாப்புப் பயிற்சி
அனைவருக்கும் சிறப்பான பாதுகாப்பை அளிப்பதற்காக அவுட்ரீச் மற்றும் ஆன்லைன் பாதுகாப்புப் பயிற்சியை வழங்குகிறோம்

ஆன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பதை உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிவதற்கு உதவ, கல்வி சார்ந்த உள்ளடக்கம், பயிற்சி, கருவிகள் ஆகியவற்றை வழங்குகிறோம். ஆன்லைன் பாதுகாப்பு வளங்கள் மற்றும் பயிற்சியின் மூலம் ஆண்டுதோறும் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 10 கோடிக்கும் மேற்பட்டவர்களை எங்கள் அவுட்ரீச் குழு தொடர்புகொள்கிறது.

ப்ராஜெக்ட் ஷீல்ட்
செய்தி இணையதளங்கள் மூடப்படுவதிலிருந்து பாதுகாக்கிறோம்

ப்ராஜெக்ட் ஷீல்ட் என்பது எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செய்திகள், மனித உரிமை அமைப்புகள், தேர்தல் தளங்கள், அரசியல் அமைப்புகள், பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்களை டிஸ்ட்ரிபியூட்டட் டினையல் ஆஃப் சர்வீஸ் (DDoS) தாக்குதல்களில் இருந்து தடுப்பதற்கு உதவும் சேவையாகும். இந்தத் தாக்குதல்கள், இணையதளங்களை முடக்குவதற்கும் போலியான டிராஃபிக் மூலம் முக்கியமான தகவலை அணுகுவதில் இருந்து பயனர்களைத் தடுப்பதற்குமான முயற்சிகளாகும். இணையதளம் அல்லது தாக்குதலின் அளவு எப்படி இருந்தாலும் ப்ராஜெக்ட் ஷீல்ட் எப்போதுமே இலவசமாகக் கிடைக்கும்.

தரவுப் பெயர்வுத்திறன்
தரவுப் பெயர்வுத்திறனில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான புதுமைகளைக் கண்டறிவதில் முன்னோடியாக உள்ளோம்

ஓப்பன் சோர்ஸ் தரவுப் பெயர்வுத்திறன் பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தி, மக்கள் தங்கள் தரவை இணையம் முழுவதும் நகர்த்திக் கொள்ளவும் புதிய ஆன்லைன் சேவை வழங்குநர்களை எளிதாகப் பயன்படுத்திப் பார்க்கவும் உதவ, Apple, Microsoft, Facebook, Twitter போன்ற நிறுவனங்களுடன் கூட்டுப்பணியாற்றி வருகிறோம்.

தனியுரிமைக்காகக் கூட்டுப்பணியாற்றுதல்
எல்லோருக்குமான மிகவும் தனிப்பட்ட இணையத்தை உருவாக்குகிறோம்

தனியுரிமை சாண்ட்பாக்ஸ் போன்ற கூட்டுப்பணியாற்றுவதற்கான இடங்களை உருவாக்கவும், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் வெளிப்படையான தரநிலைகளின் தொகுப்பை உருவாக்க இணையச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றவும் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் இணையம் முழுவதும் இலவச மற்றும் அணுகக்கூடிய உள்ளடக்கத்தையும் வழங்குகிறோம். எங்கள் வளங்களையும் பிளாட்ஃபார்ம்களையும் பகிர்வதன் மூலம் அதிகமான தனியுரிமை அம்சங்களைக் கொண்ட இணையத்தை உருவாக்க ஊக்கப்படுத்துகிறோம் என நம்புகிறோம்.

தொடர்புத் தடமறிதல்

பயனர்களின் தனியுரிமையைப் பாதுக்காக்கிறோம்,
அதேசமயம் கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட பொதுச் சுகாதாரத் துறைகளுக்கு உதவுகிறோம்

கோவிட்-19 பெருந்தொற்றை அரசாங்கங்கள் எதிர்த்துப் போராடுவதற்கு உதவ, Google மற்றும் Apple நிறுவனங்கள் இணைந்து தொடர்புத் தடமறிதல் தொழில்நுட்பங்களை (எ.கா. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட கோவிட்-19 தொற்று சாத்திய எச்சரிக்கை அமைப்பு) உருவாக்கியுள்ளன. டெவெலப்பர்கள், அரசாங்கங்கள் மற்றும் பொதுச் சுகாதார வழங்குநர்களுக்கு நெருங்கிய ஒத்துழைப்பு வழங்கி கூட்டுப்பணியாற்றுவதன் மூலம் உலகளாவிய சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம். அதேசமயம் பயனர் தனியுரிமையின் உயர் தரநிலைகளையும் பாதுகாப்போம்.

பொறியியல் மையம்

Google பாதுகாப்புப் பொறியியல் மையம் ஆன்லைன் பாதுகாப்பின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைத்து வருகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.