உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாக வைக்கும்
மின்னஞ்சல்.
ஸ்பேம், ஃபிஷிங், மால்வேர் ஆகியவை உங்கள் இன்பாக்ஸை அடையும் முன்பே அவற்றைத் தடுக்க Gmail தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. ஸ்பேம்களை வடிகட்டுவதற்கான AI மூலம் மேம்படுத்தப்பட்ட எங்களின் அம்சங்கள், ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏறக்குறைய 1 கோடி ஸ்பேம் மின்னஞ்சல்களைத் தடுக்கின்றன.
ஃபிஷிங்கிலிருந்து பாதுகாப்பு
ஃபிஷிங்கிலிருந்து பாதுகாப்பு
மால்வேர் ஃபிஷிங் தாக்குதல்களில் பல மின்னஞ்சல் மூலமே தொடங்குகின்றன. 99.9%க்கும் மேற்பட்ட ஸ்பேம், ஃபிஷிங் முயற்சிகள், மால்வேர் ஆகியவற்றை Gmail தடுக்கிறது.
பாதுகாப்பு உலாவல்
பாதுகாப்பு உலாவல்
பாதுகாப்பு உலாவல் அம்சம் ஆபத்தான இணைப்புகளை அடையாளம் கண்டு உங்கள் மின்னஞ்சல் செய்திகளைப் பாதுகாப்பதுடன், அதிலுள்ள தளத்திற்கு நீங்கள் செல்லும் முன்பே உங்களை எச்சரிக்கவும் செய்யும்.
முன்கூட்டிய எச்சரிக்கைகள்
முன்கூட்டிய எச்சரிக்கைகள்
பாதுகாப்பு தொடர்பான ஆபத்தை விளைவிக்கக்கூடிய இணைப்பை நீங்கள் பதிவிறக்கும் முன்பு Gmail உங்களை எச்சரிக்கும்.
கணக்குப் பாதுகாப்பு
கணக்குப் பாதுகாப்பு
பல்வேறு பாதுகாப்பு அறிகுறிகளைக் கண்காணிப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய உள்நுழைவுகள், அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாக்கிறோம். இலக்கு வைத்துத் தாக்கப்படும் அதிக ஆபத்துள்ள கணக்குகளுக்கு மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தையும் வழங்குகிறோம்.
இரகசியப் பயன்முறை
இரகசியப் பயன்முறை
குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்பு உங்கள் மின்னஞ்சல் செய்திகள் காலாவதியாகும்படி அமைக்கலாம், பெறுநர்கள் Gmailலில் இருந்து உங்கள் செய்தியை முன்னனுப்புவது, நகலெடுப்பது, பதிவிறக்குவது அல்லது அச்சிடுவதற்கான விருப்பங்களை அகற்றலாம்.
மின்னஞ்சல் என்க்ரிப்ஷன்
மின்னஞ்சல் என்க்ரிப்ஷன்
Google உள்கட்டமைப்பில், மின்னஞ்சல் செய்திகள் சேமிக்கப்பட்டிருக்கும்போதும் தரவு மையங்களுக்கிடையே பரிமாற்றப்படும்போதும் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. மூன்றாம் தரப்பு வழங்குநர்களுக்குப் பரிமாற்றப்படும் மின்னஞ்சல் செய்திகள் சாத்தியமான சூழல்களிலும் உள்ளமைவுக்குத் தேவைப்படும்போதும் டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டி மூலம் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.