Family Link மூலம் டிஜிட்டல் உபயோகத்திற்கான அடிப்படை விதிகளை
அமைக்க உதவுகிறோம்.
பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் பிள்ளைகளின் கணக்குகளையும் சாதனங்களையும் நிர்வகிக்க Family Link உதவுகிறது. ஆப்ஸை நிர்வகிக்கலாம், சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கண்காணிக்கலாம், உங்கள் குடும்பத்தின் டிஜிட்டல் உபயோகத்திற்கான அடிப்படை விதிகளை அமைக்க உதவலாம்.
-
ஆப்ஸ் உபயோக அறிக்கைகள்
பிள்ளைகள் சாதனத்தைப் பல விஷயங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். உங்கள் பிள்ளை தனது சாதனத்தைப் புத்தகம் வாசிக்க, வீடியோ பார்க்க, கேம் விளையாட எனப் பலவற்றுக்குப் பயன்படுத்தலாம். Family Linkகின் ஆப்ஸ் உபயோக அறிக்கைகள் மூலம், உங்கள் பிள்ளை அதிகமாகப் பயன்படுத்தும் ஆப்ஸைக் கண்டறிந்து எவற்றுக்கெல்லாம் அவர்களுக்கு அணுகல் வழங்குவது எனத் தீர்மானிக்கலாம்.
-
தினசரி அணுகலை வரம்பிடுதல்
உங்கள் பிள்ளை எவ்வளவு நேரம் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். Family Link மூலம் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி வரம்புகளை அமைக்கலாம், சாதனத்திற்கான உறக்க நேரத்தை அமைக்கலாம், பிள்ளையின் Android/Chrome OS சாதனத்தைத் தொலைவிலிருந்தே பூட்டலாம்.
-
உள்ளடக்கத்தையும் பர்ச்சேஸ்களையும் நிர்வகித்தல்
உங்கள் பிள்ளை Google Play ஸ்டோரிலிருந்து பதிவிறக்குபவற்றையும் ஆப்ஸில் வாங்க விரும்புபவற்றையும் அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
கணக்கு அமைப்புகளை நிர்வகித்தல்
உங்கள் பிள்ளையின் கணக்கை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல்
Family Link அமைப்புகளில் பிள்ளையின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை அணுகலாம். உங்கள் பிள்ளை கடவுச்சொல்லை மறந்துவிட்டால் ஒரு பெற்றோராக நீங்கள் அதை மாற்றவோ மீட்டமைக்கவோ உதவலாம். உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தகவலை நீங்கள் திருத்தலாம் அல்லது அவசியம் எனில் அவரது கணக்கை நீக்கவும் செய்யலாம். உங்களின் அனுமதியின்றி அவர் தனது கணக்கிலோ சாதனத்திலோ மற்றொரு சுயவிவரத்தைச் சேர்க்க முடியாது. இறுதியாக, அவர்களின் Android சாதனத்தின் இருப்பிடத்தை நீங்கள் பார்க்கலாம். இதற்குச் சாதனம் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், அத்துடன் இயக்கத்திலும் சமீபத்தில் செயலில் இருக்கவும் வேண்டும்.
உங்கள் குடும்பத்தினரின் டிஜிட்டல் உபயோகத்திற்கான அடிப்படை விதிகளைத் தீர்மானிப்பதற்கு உதவிபெற குடும்ப வழிகாட்டியைப் பயன்படுத்தலாம். அதிலுள்ள தலைப்புகளின் உதவியுடன் தொழில்நுட்பம் குறித்து உங்கள் பிள்ளைகளுடன் உரையாடலாம். நீங்களும் உங்கள் குடும்பமும் நம்பிக்கையுடன் இணைந்து டிஜிட்டல் உலகில் வலம் வரலாம்.
-
கட்டுப்படுத்தப்பட்ட கணக்கின் மூலம் உங்கள் பிள்ளைக்கு Google Assistantடுக்கான அணுகலை வழங்குதல்
Assistant வசதியுள்ள சாதனங்களில், பிள்ளைகள் Family Link மூலம் நிர்வகிக்கப்படும் தங்களின் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம். தங்களுடைய தனிப்பயனாக்கிய அசிஸ்டண்ட் அனுபவத்தை அவர்கள் பெறலாம், மேலும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட கேம்கள், ஆக்டிவிட்டிஸ் மற்றும் கதைகளை அவர்கள் அணுகலாம். பணப் பரிமாற்றங்கள் செய்வதிலிருந்து பிள்ளைகள் தடுக்கப்படுவார்கள், மேலும் Assistantடில் மூன்றாம் தரப்பு ஆப்ஸுக்கான அணுகல் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டுமா என்பதைப் பெற்றோர் தீர்மானிக்கலாம்.
-
Chrome மூலம் இணையதளங்களை உங்கள் பிள்ளைகள் அணுகுவதை நிர்வகித்தல்
உங்கள் பிள்ளைகள் Android அல்லது Chrome OS சாதனத்தில் உள்ள Chrome உலாவியைப் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட இணையதளங்களுக்கான அணுகலை உங்கள் பிள்ளைக்கு வழங்கலாம். உங்கள் பிள்ளைகள் பார்க்கலாம் என நீங்கள் கருதும் இணையதளங்களை மட்டும் அவர்கள் பார்க்க அனுமதிக்கலாம் அல்லது அவர்கள் பார்க்க வேண்டாம் என நீங்கள் நினைக்கும் குறிப்பிட்ட தளங்களைத் தடுக்கலாம்.
-
Searchசில் வெளிப்படையான முடிவுகளை வடிகட்டுதல்
கூடுதல் பாதுகாப்பு அடுக்கைப் பெற, பாதுகாப்பான தேடல் அம்சத்தை இயக்கலாம். இது வெளிப்படையான முடிவுகள் (எ.கா. ஆபாச உள்ளடக்கம்) காட்டப்படாமல் தடுக்கும். Family Link மூலம் நிர்வகிக்கப்படும் 13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதுக்குட்பட்ட) பயனர்களின் கணக்குகளில் உள்நுழைந்துள்ளவர்களுக்கு பாதுகாப்பான தேடல் அம்சம் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும். விரும்பினால் பெற்றோர் இதை முடக்கலாம் அல்லது Searchசைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்யலாம்.