இணையத்தை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற Google ஒவ்வொரு நாளும் செயல்படுகிறது
பொதுமக்கள், பிசினஸ்கள் மற்றும் அரசாங்கங்களைப் பாதுகாத்தல்
பாதுகாப்பே எங்கள் தயாரிப்பு உத்தியின் அடிப்படையாகும். எனவேதான் எங்கள் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புகள் உள்ளன. அவை இயல்பாகவே அவற்றைப் பாதுகாக்கின்றன.
மேலும் அறிகஇணையப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்ய சமூகத்திற்கு அதிகாரமளித்தல்
ஓப்பன் சோர்ஸின் திறனை அன்லாக் செய்ய சமூகங்களுக்கு நாங்கள் அதிகாரம் வழங்குகிறோம். மேலும் சூழ்மண்டலங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எங்கள் யோசனையையும் நிபுணத்துவத்தையும் தொழில்துறையிடம் வெளிப்படையாகப் பகிர்கிறோம்.
மேலும் அறிகமேம்பட்ட எதிர்காலத் தொழில்நுட்பங்கள்
அடுத்த தலைமுறையின் இணைய அச்சுறுத்தல்களில் இருந்து சமூகங்களைப் பாதுகாக்க விரும்புகிறோம். எங்கள் AI நிபுணத்துவத்தை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்புக் கண்டுபிடிப்பை அதிகரிக்க அடுத்த நிலை கட்டமைப்புகளை வடிவமைத்து வருகிறோம்.
மேலும் அறிகஎங்கள் தயாரிப்பு மேம்பாடு மற்றும் கிளவுடு கட்டமைப்பின் ஒவ்வொரு நிலையிலும் மேம்பட்ட பாதுகாப்பை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் நிறுவனங்கள் தங்கள் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாதுகாப்பை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் இணையத்தைப் பாதுகாப்பாக அணுகவும் உதவுகிறது.
-
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்த்துப் போராடுதல்
எங்கள் கொள்கைகளை மீறும் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறிந்து அகற்றுவதன் மூலம் தவறான பயன்பாட்டைத் தடுத்து பயனர்களை, குறிப்பாகச் சிறுவர்களைப் பாதுகாக்கிறோம். ஏமாற்றக்கூடிய விளம்பரங்கள், தவறான தகவல்கள், வெறுப்பு, மோசடிகள், சிறுவர் பாதுகாப்பு உட்பட தீங்கின் வகைகள் முழுவதிலும் நாங்கள் இதைச் செய்கிறோம்.
பயனர்களின் பாதுகாப்பை முதலில் கருதும் உலகளாவிய தரநிலைகளை மேம்படுத்த நாங்கள் இணையப் பாதுகாப்பு தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சமூகங்களுடன் இணைந்து பணிபுரிகிறோம். இணையத்தை வெளிப்படையாகவும் அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும் வைத்திருக்க தவறான தகவல்கள் மற்றும் அச்சுறுத்தல் நுண்ணறிவை எதிர்த்துப் போராடுகிறோம்.
-
சைபர் பணியாளர்களை வலுப்படுத்துதல்
எங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்வதன் மூலமும், தொழில் பாதைகளை விரிவுபடுத்துவதன் மூலமும், அனுபவம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் இணையப் பாதுகாப்பில் கூடுதல் வேலை வாய்ப்புகளை அறிமுகப்படுத்த உதவும் வகையில் அரசாங்கத்துடனும் தொழிற்துறை நிறுவனங்களுடனும் வலுவான பார்ட்னர்ஷிப் உறவுகளை உருவாக்குவதன் மூலமும் சைபர் பணியாளர் சமூகத்திற்கு வலு சேர்க்கிறோம். அனைவருக்கும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குகிறோம்.
-
Mandiant Threat Intelligence
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் இணையப் பாதுகாப்பின் முன்னணியில் பெறப்பட்ட நிகழ்நேர, விரிவான அச்சறுத்தல் நுண்ணறிவை Mandiant வழங்குகிறது. Google Cloud பாதுகாப்புடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்புச் செயல்பாடுகள் முழுவதிலும் நிறுவனங்களும் பொதுத்துறை ஏஜென்சிகளும் பாதுகாப்பாக இருக்க நாங்கள் உதவுகிறோம்.
பாதிக்கப்படக்கூடிய பயனர்களை ஆன்லைன் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பணியாற்றி வரும் அதேவேளையில் AI, வன்பொருள், கிளவுடு கம்ப்யூட்டிங் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கான சர்வதேசத் தரநிலைகளை இயக்குவதன் மூலம் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாத்து வருகிறோம்.
-
AI-இயக்கப்பட்டுள்ள பாதுகாப்பான தயாரிப்புகள்
அனைத்துப் பயனர்களுக்கும் பாதுகாப்பான அனுபவங்களை வழங்க எங்கள் தயாரிப்புகளில் தானியங்குப் பாதுகாப்பு அம்சங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்பேம், ஃபிஷிங், மால்வேர் ஆகியவற்றை உங்கள் இன்பாக்ஸில் 99.9% துல்லியத்துடன் காட்டுவதை Gmail தடுக்க மெஷின் லேர்னிங் உதவுகிறது.
-
போஸ்ட் குவாண்டம் கிரிப்டோகிராஃபி
பொதுக் குறியீடு கிரிப்டோ சிஸ்டம்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பளிக்க நாங்கள் கிரிப்டோகிராஃபிக் சிஸ்டம்களை உருவாக்குகிறோம். Googleளின் பங்களிப்பைக் கொண்ட, தரநிலைப்படுத்தலுக்கான சமர்ப்பிப்பை தேசியத் தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIST - National Institute of Standards and Technology) தேர்வுசெய்துள்ளது.
-
நம்பகமான வன்பொருள்
வலுவான கணக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய, பொதுக் குறியீட்டுக் கிரிப்டோகிராஃபியைப் பாதுகாப்பு விசைகள் பயன்படுத்துகின்றன. Titan Security Keyகள் வன்பொருள் சிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவை ஃபிஷிங்கையும் நிலைபொருள், ரகசியமான முக்கியத் தகவல்கள் ஆகியவற்றைப் பிரித்தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட தாக்குதல்களையும் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
Google Trust Services
GTS (Google Trust Services) என்பது புவியியல் ரீதியாக பல இடங்களில் அமைக்கப்பட்ட Googleளின் தளத்தில் உருவாக்கப்பட்ட ஓர் இலவசச் சான்றிதழ் வழங்கும் அமைப்பாகும். இது இணைப்புகளை அங்கீகரித்து என்க்ரிப்ஷன் செய்கிறது, Google தனது சொந்தத் தளங்களை GTS மூலம் பாதுகாப்பதோடு தற்போது அதே தொழில்நுட்பத்தை அனைத்து இணையதளங்களும் பயன்படுத்துவதற்கு வழங்குகிறது.
இணையப் பாதுகாப்பு என்பது ஒன்றிணைந்து பணிபுரிவதாகும். நாம் ஒன்றாக வேலை செய்யும்போது, இந்தச் சிக்கலான, வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்பை உருவாக்கலாம் மற்றும் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்தலாம்.
தனியுரிமை, பாதுகாப்பு, உள்ளடக்கப் பொறுப்பு, குடும்பப் பாதுகாப்பு ஆகியவற்றில் உலகெங்கிலும் எங்கள் குழுக்கள் பணிபுரிந்து வருகின்றன. அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள், கொள்கை நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் தலைமையில் செயல்படும் இந்த வேலைக்கு எங்கள் GSECகள் வழிகாட்ட உதவுகின்றன.
எங்கள் உலகளாவிய Bug Hunters சமூகம் எங்கள் தயாரிப்புகளை அவை எண்ணிய வழியில் செயல்படுவதற்கும் இணையத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும் கவனம் செலுத்துகிறது.
அரசாங்கங்கள், முக்கியமான உள்கட்டமைப்பு, நிறுவனங்கள், சிறிய பிசினஸ்கள் ஆகியவற்றின் பாதுகாப்பையும் டிஜிட்டல் மாற்றத்தையும் ஆதரிக்க உலகின் முதன்மையான பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
-
எங்களின் தயாரிப்புகளில்எங்களின் Google தயாரிப்புகள் அனைத்திலும் நீங்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.
-
பாதுகாப்பு & தனியுரிமைGoogle உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு வழங்கும் பாதுகாப்பையும், உங்களுக்கு வழங்கும் கட்டுப்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
-
குடும்பப் பாதுகாப்புஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதை நிர்வகிக்க Google எப்படி உதவுகிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.