பாதுகாப்பு குறித்து நீங்கள்
கவலைப்படத் தேவையில்லை.
மால்வேர், ஆபத்தான தளங்கள் ஆகியவற்றிலிருந்து Google Chromeமின் பாதுகாப்பு அம்சங்கள் உங்களைப் பாதுகாப்பதால் உங்கள் உலாவல் அனுபவத்தை சிறப்பாக்கலாம்.
இயல்பாகவே பாதுகாப்பானது
இயல்பாகவே பாதுகாப்பானது
Chrome இயல்பாகவே பாதுகாப்பானது. உங்கள் கடவுச்சொற்களைத் திருடக்கூடிய அல்லது கம்ப்யூட்டரில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மற்றும் ஏமாற்றக்கூடிய தளங்களிலிருந்து இது உங்களைப் பாதுகாக்கிறது. தளத்தைத் தனிப்படுத்துதல், சாண்ட்பாக்ஸிங், கணிக்கக்கூடிய ஃபிஷிங் செயல்பாடுகளிலிருந்து பாதுகாப்பு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உங்களையும் தரவையும் பாதுகாப்பாக வைக்கின்றன.
நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது வலிமையான, பிரத்தியேகமான கடவுச்சொற்கள்
நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது வலிமையான, பிரத்தியேகமான கடவுச்சொற்கள்
உங்கள் தரவைப் பல்வேறு தளங்களுக்கு கசியச் செய்யக்கூடிய வலுவற்ற, ஏற்கெனவே பயன்படுத்திய கடவுச்சொற்களுக்கு இனி இடமில்லை. Chrome மூலம் வலிமையான, பிரத்தியேகமான கடவுச்சொற்களை உருவாக்கி, லேப்டாப், மொபைல் போன்றவற்றில் இணையத்தைப் பயன்படுத்தும்போது அவற்றைத் தன்னிரப்ப முடியும். உங்களின் அனுமதிச் சான்றுகள் களவாடப்பட்டிருந்தால் Chrome உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும்.
எப்போதும் சமீபத்திய பதிப்பு
ஆறு வாரத்திற்கு ஒருமுறை Chrome தானாகவே புதுப்பிக்கப்படும், அதனால் உங்களிடம் எப்போதும் சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களும் திருத்தங்களும் இருக்கும். அத்துடன் முக்கியமான பாதுகாப்புப் பிழைகள் கண்டறியப்படும்போது 24 மணிநேரத்திற்குள் நாங்கள் பிழைத் திருத்தத்தை அனுப்பிச் சரிசெய்வோம். நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
மறைநிலைப் பயன்முறை
மறைநிலைப் பயன்முறை
உங்கள் சாதனத்தை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ளும்போது நீங்கள் மனநிம்மதியுடன் செயல்பட மறைநிலைப் பயன்முறை உதவுகிறது. மறைநிலைப் பயன்முறையைப் பயன்படுத்தி உலாவிவிட்டு, மறைநிலைச் சாளரத்தை மூடினால் உலாவிய பக்கங்களின் தகவல் Chromeமிலிருந்து நீக்கப்பட்டுவிடும்.
பாதுகாப்புச் சரிபார்ப்பு
உங்கள் உலாவல் அனுபவத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் தனியுரிமையையும் Chromeமின் பாதுகாப்புச் சரிபார்ப்பால் உறுதிப்படுத்த முடியும். அது Chromeமில் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் ஏதாவது களவாடப்பட்டுள்ளனவா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும், ஆபத்தான நீட்டிப்புகளைக் கொடியிடும், மேலும் உங்கள் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் புதுப்பித்த நிலையில் உள்ளனவா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள உதவும்.
தனியுரிமைக் கட்டுப்பாடுகள்
பிரத்தியேகமாக்கிய ஊட்டம் முதல் எளிதான கடவுச்சொல் நிர்வாகம், பொருத்தமான தேடல் முடிவுகள் வரை உங்களுக்கு ஏற்றவாறு Chromeமின் உபயோகத்தை அமைத்துக்கொள்ளலாம். ஒத்திசைவு அம்சம் மற்றும் உங்கள் இருப்பிடம் அல்லது கேமராவிற்கான அணுகல் போன்ற Chromeமின் தனியுரிமைக் கட்டுப்பாடுகள் (இணையதள அனுமதிகளைக் கட்டுப்படுத்துவதையும் சேர்த்து) மூலம் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கலாம்.
மேலும் அறிந்துகொள்ளுங்கள்.