உங்கள் எல்லா ஆன்லைன் கணக்குகளிலும் உள்நுழைவதற்குப் பாதுகாப்பான வழி.
உங்கள் எல்லா ஆன்லைன் கணக்குகளிலும் உள்நுழைவதில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாது. உங்கள் கணக்கின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கக்கூடுமோ என நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லாத வகையில் உள்நுழைவது விரைவானதாகவும் எளிதானதாகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் விரும்பும் ஆப்ஸ் மற்றும் சேவைகளில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழைய உதவும் வகையில் எங்களின் உள்ளமைந்த அங்கீகரிப்புக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
கடவுச்சொற்களே இல்லாமல் எளிதாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழையுங்கள்
உங்கள் சாதனத்தின் திரைப் பூட்டைப் பயன்படுத்தி எளிதாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழைவதற்குக் கடவுச்சாவிகள் உதவுகின்றன. எனவே உங்கள் மொபைலைப் பார்ப்பது அல்லது கைரேகையை ஸ்கேன் செய்வதன் மூலம் எளிதாகவே உள்நுழையலாம். கடவுச்சாவிகள் தொழிற்துறைத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் இவை உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் பிளாட்ஃபார்ம்களிலும் செயல்படும்.
மேலும் அறிக -
உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் எளிதாக உள்நுழையுங்கள்
கடவுச்சாவிகளை நினைவில் வைத்துக்கொள்ளவோ உள்ளிடவோ வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, கைரேகை, முகத்தை ஸ்கேன் செய்தல், பின், பிற திரைப் பூட்டு அம்சம் ஆகியவை மூலம் கடவுச்சொல்லை உள்ளிடுவதைவிட இருமடங்கு வேகமாக உள்நுழையலாம். ஏனெனில் கடவுச்சாவிகள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளதால் ஒத்திசைக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
-
அடுத்த தலைமுறைக்கான கணக்குப் பாதுகாப்பு
FIDO Alliance மற்றும் W3C தரநிலைகளின் அடிப்படையில், பாதுகாப்பு விசைக் கருவிகளை ஆதரிக்கும் அதே பொதுக் குறியீட்டு கிரிப்டோகிராஃபிக் நெறிமுறைகளைக் கடவுச்சாவிகள் ஆதரிக்கின்றன. மேலும் அவை ஃபிஷிங், அனுமதிச் சான்றை நிரப்புதல், பிற தொலைநிலைத் தாக்குதல்கள் ஆகியவற்றையும் தடுக்கின்றன.
-
உங்களுக்கு விருப்பமான ஆப்ஸிலும் சேவைகளிலும் உள்நுழைவதற்கான பாதுகாப்பான வழி
உங்கள் அனைத்து ஆன்லைன் கணக்குகளிலும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழையலாம். ஆயிரக்கணக்கான ஆப்ஸிலும் இணையதளங்களிலும் நீங்கள் மிகவும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் உள்நுழையலாம். ஏனெனில் உங்கள் உள்நுழைவுத் தகவல்கள் Google கணக்கில் தனிப்பட்டதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
'Google மூலம் உள்நுழைவு' அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள் -
ஒருமுறை தட்டுவதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பாதுகாப்பாக உள்நுழையுங்கள் அல்லது பதிவுசெய்யுங்கள்
மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளில் Google மூலம் உள்நுழைந்தாலும் பதிவுசெய்தாலும் தவறான நோக்கமுடையவர்கள் உங்கள் கடவுச்சொற்களைத் திருடுவதில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். ஏதேனும் ஆப்ஸிலோ சேவையிலோ பாதுகாப்புச் சிக்கல் இருந்தாலும், Google மூலம் ஒவ்வொரு முறை நீங்கள் உள்நுழையும்போதும் அது நீங்கள்தான் என்பதைத் தனித்துவமாக உறுதிப்படுத்துவதன் மூலம் தொடர்ந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
-
உங்கள் கணக்குகளுக்கும் இணைப்புகளுக்குமான கூடுதல் கட்டுப்பாடு
Google மூலம் உள்நுழைக, இணைக்கப்பட்ட கணக்குகள், Google கணக்குடன் பிற மூன்றாம் தரப்பு இணைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விதத்தை நிர்வகிக்கலாம். நீங்கள் பகிரத் தேர்வுசெய்யும் தரவை ஒரே இடத்தில் பார்க்கலாம் புதுப்பிக்கலாம் நிர்வகிக்கலாம். இதனால் உங்கள் தரவை ஒழுங்கமைத்து வைத்திருக்கலாம், கட்டுப்பாடும் உங்களிடமே இருக்கும்.
உங்கள் இணைப்புகளை இப்போதே சரிபார்க்கலாம்
-
வலிமையான கடவுச்சொற்கள் உங்கள் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன
உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பிறர் அணுக முடியாததாக வைத்திருப்பதற்கு ஆன்லைன் கணக்குகளுக்கு வலிமையான, தனித்துவமான கடவுச்சொற்களைத் தேர்வுசெய்வது முக்கியமான படியாகும். எனினும் பெரும்பாலான மக்கள் வலுவற்ற ஒரே கடவுச்சொல்லையே பல தளங்களிலும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர். இது அந்தக் கணக்குகளின் பாதுகாப்புக் குறைபாடுகளை அதிகரிக்கிறது.
-
Googleளின் Password Manager உங்கள் கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறது
உங்கள் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் நிர்வகிக்கலாம்Chrome மற்றும் Androidல் Googleளின் Password Manager உள்ளமைக்கப்பட்டுள்ளது. இது உங்களின் அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் கடவுச்சொற்களைப் பரிந்துரைக்கிறது, சேமிக்கிறது, தானாக நிரப்புகிறது. கடவுச்சொற்களுடன் கடவுச்சாவிகளையும் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் ஒரே இடத்திலேயே எளிதாக நிர்வகிக்கலாம்.
-
உங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத் தானியங்கிக் கடவுச்சொல் எச்சரிக்கைகள் உதவுகின்றன
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நடைபெறும் தரவு மீறல் நிகழ்வுகள் லட்சக்கணக்கான பயனர்பெயர்களையும் கடவுச்சொற்களையும் பொதுவில் வெளிப்படுத்துகின்றன. களவாடப்பட்ட கடவுச்சொற்களை Google கண்காணித்து வருகிறது. இதனால் தரவு மீறலின்போது உங்களின் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் ஏதேனும் வெளியாகி இருப்பதைக் கண்டறிந்தால் நாங்கள் தானாகவே உங்களுக்கு எச்சரிக்கையை அனுப்புவோம்.
கடவுச்சொல் சரிபார்ப்பு மூலம் உங்கள் அனைத்து ஆன்லைன் கணக்குகளையும் பாதுகாக்கலாம். உங்கள் கடவுச்சொற்களின் வலிமையைப் பரிசோதிக்கலாம். ஏதேனும் கடவுச்சொற்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தியுள்ளீர்களா என்பதைச் சரிபார்த்து, அவற்றில் ஏதேனும் களவாடப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
கூடுதல் வழிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
-
தனியுரிமைக் கட்டுப்பாடுகள்உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்யுங்கள்.
-
தரவு நடைமுறைகள்பொறுப்பான தரவு நடைமுறைகளின் மூலம் உங்கள் தனியுரிமையை நாங்கள் எவ்வாறு மதிக்கிறோம் என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
-
பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.
-
விளம்பரங்கள் & தரவுஎங்கள் தளங்களில் நீங்கள் பார்க்கக்கூடிய விளம்பரங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.