சிறுவர்கள் ஸ்மார்ட்டாகவும், தன்னம்பிக்கையுடனும் ஆன்லைனில் வலம்வர உதவுதல்

சிறுவர்கள் ஆன்லைனில் சிறப்பான முடிவுகளை எடுப்பதற்குக் கற்றுக் கொடுக்கவும், அவர்களை ஸ்மார்ட்டான, நுண்ணறிவு மிக்க டிஜிட்டல் பயனர்களாக மாற்றுவதற்கும் உதவும் பாடங்களையும் உதவிக் குறிப்புகளையும் உருவாக்கியுள்ளோம்.

இந்த உதவிக் குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு ஆன்லைனில் தேர்ந்த முடிவுகளை எடுக்கவும்

 • Be Internet Awesome திட்டத்தின் மூலம் ஸ்மார்ட்டான டிஜிட்டல் குடிமக்களாவதற்கு பிள்ளைகளுக்கு உதவுதல்

  இணையத்தில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்கு, பிள்ளைகள் நன்கு தகவலைத் தெரிந்து கொண்டு சிறந்த முடிவுகளை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இந்தத் திட்டமானது, டிஜிட்டல் குடியுரிமை மற்றும் பாதுகாப்பு பற்றி பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறது. இதனால், ஆன்லைன் உலகத்தில் அவர்களால் நம்பிக்கையுடன் உலாவ முடியும். பிள்ளைகள் இணையத்தில் சிறப்பாக இருப்பதற்கான அவர்களது வழியை, டிஜிட்டல் பாதுகாப்பின் முக்கியப் பாடங்களை நான்கு சவாலான கேம்களுடனான செய்முறைப் பயிற்சியாகக் கொண்டுள்ள, ஆன்லைன் சாகசமான Interland கேம் விளையாடுவதன் மூலம் அறியலாம்.

  இதுவரை, இந்தத் திட்டத்தை அமெரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் வெளியிட்டுள்ளோம். இன்னும் அதிக சந்தைகளில் விரிவாக்கும் திட்டம் உள்ளது. ஆன்லைனில் எவ்வாறு ஸ்மார்ட்டாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது என்பது பற்றி டீன் ஏஜர்கள் அறிந்து கொள்ள உதவ, ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான ரோட்ஷோவின் ஒரு பகுதியாக, இந்தப் பாடத்திட்டத்தை அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாகவும் கொண்டு சென்றோம்.

கவனமாகப் பகிர்தல்

நல்ல மற்றும் கெட்ட செய்திகள் ஆன்லைனில் வேகமாகப் பரவும். எந்தவித முன்யோசனையும் இன்றி, நீண்டகாலத்திற்கு நீடிக்கும் விளைவுகளைக் கொண்ட சூழ்நிலைகளில் குழந்தைகளும் டீன் ஏஜர்களும் சிக்கிக் கொள்ளலாம். சரியானவர்களுடன் சரியான முறையில் பகிர்ந்து கொள்வதைக் கற்பதற்கு, பகிர்வதற்கான உதவிக் குறிப்புகளை அவர்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

 • அவர்களின் டிஜிட்டல் கால்தடம் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல்

  ஆன்லைனில் உங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக, உங்களையோ அல்லது அவர்கள் விரும்பும் இசைக்கலைஞரையோ தேடி, நீங்கள் கண்டறிவதைப் பற்றி பேசவும். கிடைக்கும் முடிவுகளை முன்கூட்டியே நீங்கள் சரிபார்க்க விரும்பலாம். இந்த முடிவுகளில் இருந்து உங்களைப் பற்றி பிறர் என்ன அறிந்து கொள்ளலாம் என்பதைப் பற்றியும் ஆன்லைனில் உங்கள் டிஜிட்டல் கால்தடத்தை எவ்வாறு உருவாக்கினீர்கள் என்பதைப் பற்றியும் பேசவும்.

 • சமூக ஒப்பீடுகளைக் குறைப்பதில் உதவுதல்

  ஆன்லைனில் நண்பர்கள் பகிர்வது, முழுக் கதையின் ஒரு பகுதி மட்டுமே என்பதையும், பொதுவாக அது அவர்களின் முக்கியத் தருணங்களைப் பற்றியதாகவே இருக்கும் என்பதையும், உங்கள் பிள்ளைக்குக் கூறிப் புரியவைக்கவும். அனைவரிடமும் அவர்கள் பகிர விரும்பாத சலிப்பான, சோகமான அல்லது சங்கடமான தருணங்கள் இருக்கும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும்.

 • எவற்றைப் பகிர வேண்டும் என்பதைப் பற்றி, குடும்பத்திற்கான விதிகளை உருவாக்குதல்

  படங்கள் அல்லது தனிப்பட்ட தகவல் போன்று, ஆன்லைனில் எவற்றைப் பகிரக்கூடாது என்பது பற்றி, உங்கள் குடும்பத்திற்கான தெளிவான எதிர்பார்ப்புகளை அமைக்கவும். பயிற்சிக்காக அனைவருடனும் சில படங்களை எடுத்து, அவற்றைப் பகிரும்போது எப்படிப் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி பேசவும். எடுத்துக்காட்டாக, உங்கள் பிள்ளைகளை, தங்களது படங்கள் மட்டுமின்றி பிறரது படங்களையும் பகிர்வதற்கு முன் சிந்திக்கும்படி ஊக்குவிக்கவும். அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், உங்களிடம் அனுமதி கேட்பதை ஊக்குவிக்கவும்.

 • அதிகமான தகவலைப் பகிர்தல் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல்

  அளவுக்கு அதிகமாகப் பகிர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான தீர்வுகளைப் பற்றிப் பேசவும். உதாரணமாக, பகிர்ந்ததை அகற்றுதல் அல்லது தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்தல் ஆகியவை குறித்துப் பேசவும். அப்படி இதற்குமுன் நடந்திருந்தாலும், அதையும் நேர்மறை மனப்பான்மையுடன் எதிர்கொள்ள உதவுங்கள். சில சங்கடமான தருணங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும் பெரும்பாலான உதாரணங்கள் இதன் தீவிரத்தைக் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்புகளாகவே அமையும்.

போலியானவற்றைக் கண்டு ஏமாற வேண்டாம்

ஆன்லைனில் இருக்கும் நபர்களும் சூழ்நிலைகளும் பார்ப்பது போலவே எப்போதும் இருக்காது என்பதைப் பற்றி, உங்கள் குழந்தைகள் அறிந்திருப்பதற்கு உதவுவது முக்கியமானதாகும். உண்மைக்கும் போலிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிவதில் அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பது பற்றிய பயனுள்ள வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளோம்.

 • ஆள்மாறாட்டத்தை விளக்குதல்

  உங்கள் பிள்ளையிடம், ஏன் அவர்களது கடவுச்சொற்களையோ அல்லது தனிப்பட்ட தரவையோ பெறுவதற்குப் பிறர் விரும்புகின்றனர் என்பதை விளக்கவும். இந்தத் தகவலின் மூலம், யாரேனும் அவர்களது கணக்கைப் பயன்படுத்தி, அவர்களைப் போல நடிக்கலாம்.

 • ஃபிஷிங் முயற்சிகளைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுதல்

  உங்கள் பிள்ளைகள் தங்கள் தனிப்பட்ட தகவலை வழங்கும்படி பிறரால் ஏமாற்றப்படலாம் என்பதை உணராமல் இருக்கலாம். யாரெனத் தெரியாதவரிடமிருந்து கணக்குத் தகவலைக் கேட்கும் அல்லது வித்தியாசமாகத் தோன்றும் இணைப்பைக் கொண்ட செய்தி, இணைப்பு அல்லது மின்னஞ்சலைப் பெற்றால், உங்களிடம் தெரிவிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

 • மோசடிகளை அடையாளங்காண அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல்

  சில ஏமாற்றக்கூடிய மோசடிகள், நண்பர்களிடம் இருந்து வருவது போலத் தோன்றும் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவிக்கவும். இணையத்தில் நிபுணராக இருக்கும் பெரியவர்கள் கூட இது போன்ற மோசடிகளால் ஏமாற்றப்படுகின்றனர்! ஒரு செய்தியானது மோசடி போலத் தெரிந்தால், உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறவும். அவர்கள் கூறும் கருத்திற்குப் பதிலளிப்பது, நம்பிக்கையை வளர்ப்பதற்குச் சிறப்பாக உதவும்.

 • பாதுகாப்புக் குறிப்புகளை ஒன்றாகத் தேடுதல்

  உங்கள் பிள்ளையுடன் ஒரு இணையதளத்திற்குச் சென்று, பாதுகாப்பின் அறிகுறிகள் உள்ளனவா எனத் தேடவும். URL பாதுகாப்பானது என்பதைக் குறிக்கும் வகையில், அதனருகில் பேட்லாக் உள்ளதா அல்லது அது https எனத் தொடங்குகிறதா? தளத்தின் பெயருடன் URL பொருந்துகிறதா? உங்கள் பிள்ளை ஒரு தளத்திற்குச் செல்லும் போது, அவர்கள் தேட வேண்டிய அறிகுறிகளைச் சுட்டிக்காட்ட உதவவும்.

உங்கள் ரகசியங்களைப் பாதுகாக்கவும்

தனிநபர் தனியுரிமையும் பாதுகாப்பும் ஆஃப்லைனைப் போலவே ஆன்லைனிலும் முக்கியமானவை ஆகும். உங்கள் பிள்ளைகளின் சாதனங்களையும் நற்பெயரையும் உறவுகளையும் சேதப்படுத்துவதைத் தவிர்க்க, அவர்கள் தங்களது முக்கியமான தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.

 • கணிப்பதற்குக் கடினமான கடவுச்சொல்லை உருவாக்குதல்

  நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய சொற்றொடரை வலிமையான கடவுச்சொல்லாக எவ்வாறு மாற்றுவது எப்படி என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும். சிறிய மற்றும் பேரெழுத்துகளை ஒன்றாகக் கலந்து, சிலவற்றைச் சின்னங்களாகவும் எண்களாகவும் மாற்றி, குறைந்தபட்சம் எட்டு எழுத்துகளைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, “My younger sister is named Ann” என்பதை myL$1Nan என்ற கடவுச்சொல்லாக வைக்கலாம். பிறர் எளிதாகக் கணிக்கக்கூடிய உங்கள் முகவரி, பிறந்தநாள், 123456 அல்லது “password” போன்ற பலவீனமான கடவுச்சொற்கள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவவும்.

 • அவர்களின் தனிப்பட்ட தகவலை, தனிப்பட்டதாக வைத்திருத்தல்

  உங்கள் பிள்ளையின் வீட்டு முகவரி, கடவுச்சொற்கள் அல்லது அவர்கள் படிக்கும் பள்ளி போன்ற, தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டிய தகவலைப் பற்றி அவர்களிடம் பேசவும். இது போன்ற தகவல் அவர்களிடம் கேட்கப்பட்டால், உங்களிடம் தெரிவிக்கும்படி அவர்களை ஊக்குவிக்கவும்.

 • நல்ல கடவுச்சொல்லைப் பற்றி கற்றுக் கொடுத்தல்

  அவர்களது கடவுச்சொல்லை எங்கேனும் உள்ளிடுவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்றும், அது சரியான ஆப்ஸ் அல்லது தளம்தானா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கவும். சந்தேகமாக இருக்கும் போது, எதையும் உள்ளிடுவதற்கு முன் அவர்கள் உங்களிடம் வந்து பேச வேண்டும். கூடுதலாக, வெவ்வேறு ஆப்ஸ் மற்றும் தளங்களுக்கு வெவ்வேறு கடவுச்சொற்களை வைத்திருக்கும்படி ஊக்குவிக்கவும். ஒரு பிரதான கடவுச்சொல்லைக் கொண்டிருந்து, ஒவ்வொரு ஆப்ஸுக்கும் அதில் சில எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

 • ஏமாற்றுபவற்றைத் தவிர்க்க அவர்களுக்கு உதவுதல்

  உங்கள் பிள்ளைகள் தங்கள் கடவுச்சொல்லைத் தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு நினைவூட்டவும், இதன் மூலம் பிறர் அவர்களின் கணக்குகளை அணுகி, போலியான அல்லது சங்கடமான செய்திகளை அனுப்பாமல் தடுக்கலாம் என்றும் நினைவூட்டவும்.

அக்கறையுடன் நடந்துகொள்வது சிறப்பானது

இணையம் என்பது, நேர்மறையானவற்றையோ அல்லது எதிர்மறையானவற்றையோ மிகைப்படுத்திப் பரப்பும் அளவிற்குச் சக்தி வாய்ந்ததாகும். ஆன்லைனில் அவர்கள் செய்யும் செயல்களுக்கு "நீங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்களோ அவ்வாறு பிறரை நடத்தவும்" என்ற கருத்தை ஊக்குவிப்பது, மற்றவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மிரட்டும் நடத்தையைத் தடுப்பதன் மூலம், உங்கள் குழந்தைகள் நேர்மையான முறையில் நடப்பதற்கு உதவவும்.

 • ஆன்லைனில் மிரட்டுதல் பற்றிய உரையாடலை உருவாக்குதல்

  ஆன்லைனில் உபத்திரவம் கொடுத்தல் அல்லது மற்றவர்களை வேண்டுமென்றே துன்புறுத்துவதற்காக ஆன்லைன் கருவிகளைப் பிறர் பயன்படுத்தும் சூழ்நிலைகள் பற்றி பேசவும். அது போன்ற நிகழ்வுகளைக் கண்டால் அல்லது அவர்களுக்கே அது போல் நடந்தால், அவர்கள் யாரிடம் வந்து கூற வேண்டும் என்பதைத் திட்டமிடவும். உங்கள் பிள்ளைகளோ அவர்களின் நண்பர்களோ ஆன்லைனில் இதுபோன்ற மோசமான அனுபவத்தைப் பெற்றுள்ளனரா எனக் கேட்கவும். இது போன்ற சில கேள்விகளைக் கேட்கலாம்: அது எந்த வடிவத்தில் இருந்தது? அதை எவ்வாறு உணர்ந்தீர்கள்? மோசமான கருத்தைப் பற்றி யாரிடமாவது கூறுவதன் மூலம் அதை நிறுத்த உதவுவதற்கான திறன் உங்களிடம் இருந்ததாக நினைக்கிறீர்களா?

 • உங்கள் குடும்பத்திற்கான நெறிகளை ஆன்லைனிலும் உறுதிப்படுத்துக்கொள்ளுதல்

  உங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறவும். ஆரம்பத்தில் இது போல அறிவுறுத்தலாம்: பிறர் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவ்வாறே பிறரையும் நீங்கள் நடத்த வேண்டும் என்று கூறலாம்; பிறரிடம் எதை உங்களால் நேரில் கூற முடியுமோ, அதை மட்டுமே ஆன்லைனில் பேசும்போதும் கூற வேண்டும் என்று கூறலாம்.

 • பிறர் கூறுவதன் பின்னணியில் உள்ள பொருளைப் பற்றியும் நேர்மறையாகச் சிந்திப்பதையும் பற்றி பேசுதல்

  உங்கள் பிள்ளைகளிடம் குரல் தொனியைப் பற்றி பேசவும், மேலும் ஆன்லைனில் யாரேனும் கூற வருவதை எளிதில் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும். யாரேனும் கூற வருவதைப் பற்றி அவர்களுக்குத் தெளிவாகப் புரியவில்லை எனில், நல்லவிதமாகவே அதைப் புரிந்துகொள்ளவும், நண்பர்களுடன் நேரடியாகப் பேசவும் ஊக்குவிக்கவும். நல்ல நேர்மறையான செய்திகளை ஆன்லைனில் அனுப்புவதும் பெறுவதும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசவும். நீங்கள் பயன்படுத்தும் ஒரு ஆப்ஸிலிருந்து, அவர்களுடன் சேர்ந்து நேர்மறையான கருத்து அல்லது செய்தியை அனுப்பிக் காண்பிக்கலாம்.

சந்தேகமாக இருந்தால், அதைக் கேட்கவும்

எதிர்கொள்ளும் எல்லா டிஜிட்டல் வகைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு படிப்பினை: உங்கள் குழந்தைகள் ஏதேனும் சந்தேகத்திற்குரியவற்றைப் பார்த்தால், நம்பகமான பெரியவரிடம் அதைப் பற்றி கூறுவதை அவர்கள் பாதுகாப்பாகக் கருத வேண்டும். வீட்டில் வெளிப்படையாகப் பேசுவதை ஊக்குவிப்பதன் மூலம், இந்த நடத்தையை ஆதரிக்கலாம்.

 • ஆன்லைனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதித்தல்

  உங்கள் குடும்பம் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி பேசுவதற்கு நேரத்தைச் செலவிடவும். உங்கள் பிள்ளைகள் அதிகமாகப் பயன்படுத்தும் ஆப்ஸில் ஆர்வம் காட்டி, அது எவ்வாறு செயல்படுகிறது என விளக்கும்படி கேட்கவும். அவர்களது ஆப்ஸை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அவற்றில் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையும் கண்டறியவும்.

 • காலப்போக்கில் மாறக்கூடிய வரம்புகளை அமைத்தல்

  உங்கள் பிள்ளைகளின் கணக்குகளுக்கு, உள்ளடக்க வடிப்பான்கள் மற்றும் நேர வரம்புகள் போன்ற விதிகளை அமைக்கவும், அவர்கள் வளரும் போது இவை மாறலாம் என்பதையும் தெரிவிக்கவும். அமைப்புகள் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அமைத்துவிட்டு அப்படியே மறந்துவிடக் கூடாது!

 • உங்கள் பிள்ளைகள் தொடர்பு கொள்வதற்கான நபர்களைக் கண்டறிய அவர்களுக்கு உதவுதல்

  உங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் அசௌகரியமாக உணரச் செய்யும் உள்ளடக்கத்தைப் பார்த்தால், அவர்கள் தொடர்பு கொள்வதற்கு மூன்று நம்பகமான நபர்களைக் கண்டறியவும். அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதையும் அதைப் போன்று எதிர்காலத்தில் பார்க்காமல் தடுப்பதையும் செயலாக்க, நம்பகமான நபரால் உதவ முடியும்.

 • ஆன்லைனில் சிறந்த முறையில் நேரத்தைச் செலவழிக்க, ஆதரவளித்தல்

  கலைத்திறன் அல்லது பிரச்சனைகளைத் தீர்க்கும் திறமைகளைக் கற்றுக்கொடுக்கும் கேம்கள் மற்றும் ஆப்ஸைப் பயன்படுத்தும்படி ஊக்குவிக்கவும்.

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.