உங்கள் தரவை எவ்வாறு உங்களுடன் எடுத்துச் செல்வது?
தனிப்பட்ட தரவை உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கவோ வேறொரு வழங்குநருக்கு மாற்றவோ விரும்புகிறீர்களா? Google Takeout மூலம் இந்த இரண்டுமே சாத்தியம் என Googleளின் ஸ்டீஃபன் மிக்லிட்ஸும் கிரெக் ஃபேரும் விளக்குகிறார்கள்
திரு. மிக்லிட்ஸ் மற்றும் திரு. ஃபேர், Google Takeout ஆப்ஸுக்கு நீங்கள்தான் பொறுப்பாக உள்ளீர்கள். இது எதற்காக உருவாக்கப்பட்டது?
ஸ்டீஃபன் மிக்லிட்ஸ், Googleளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பொறியியல் இயக்குநர்: Google Driveவில் சேமிக்கப்பட்ட படங்கள், தொடர்புகள், மின்னஞ்சல்கள், கேலெண்டர் உள்ளீடுகள், மியூசிக் ஃபைல்கள் ஆகியவற்றை உங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றவோ வேறொரு வழங்குநருக்கு இடமாற்றவோ Google Takeout உதவுகிறது.
கிரெக் ஃபேர், Google Takeoutடின் தயாரிப்பு நிர்வாகி: எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், பெரும்பாலான பெற்றோரைப் போலவே நானும் என் மனைவியும் அவர்களின் படங்களை அதிக அளவில் (600 ஜிகாபைட் அளவிற்கு) வைத்துள்ளோம். அவர்களின் படங்களைச் சேமித்திருந்த ஹார்டு டிரைவ் சிதைவடைந்தபோதும், படங்கள் அனைத்தையும் Google Photosஸிலும் சேமித்திருந்ததால் நிம்மதியடைந்தேன். அதன் மூலம் Google Takeoutடைப் பயன்படுத்தி புதிய ஹார்டு டிரைவிற்குப் படங்களை எளிதாகப் பதிவிறக்க முடிந்தது.
பயனர்கள் Takeoutடை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?
ஃபேர்: பெரும்பாலும் Google Driveவில் அவர்கள் சேமித்த அனைத்துத் தரவையும் காப்புப் பிரதி எடுக்க அதைப் பயன்படுத்துகிறார்கள்.
மிக்லிட்ஸ்: இது ஓரளவு ஏற்கக்கூடியதாக இல்லை, ஏனெனில் பெரும்பாலான வீட்டுச் சேமிப்பகச் சாதனங்களைவிட Google Driveவில் தரவு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான் உண்மை.
ஃபேர்: வீட்டிலிருக்கும் பூனை ஹார்டு டிரைவில் அசுத்தம் செய்துவிடலாம், சிறுவர்கள் அதை உடைத்துவிடலாம், அது தீப்பற்றும் வாய்ப்பும் உள்ளது. Googleளில் ஒவ்வொரு ஃபைலும் வெவ்வேறு சேவையகங்களில் பலமுறை சேமிக்கப்படும். இதைவிடப் பாதுகாப்பான ஒன்று இருக்க முடியாது.
எனினும் நீங்களும் உங்கள் ஹார்டு டிரைவில்தான் தரவைக் காப்புப் பிரதி எடுக்கிறீர்களா திரு. ஃபேர்!
ஃபேர்: ஏனெனில் படத்தை எடிட் செய்வதற்கான புரோகிராம்களை என் மனைவி பயன்படுத்துவதால் கிளவுடில் படங்களைச் சேமிப்பது கடினம்.
"Googleளில் ஒவ்வொரு ஃபைலும் வெவ்வேறு சேவையகங்களில் பலமுறை சேமிக்கப்படுகிறது. இதைவிடப் பாதுகாப்பான ஒன்று இருக்க முடியாது."
கிரெக் ஃபேர்
சரி.
மிக்லிட்ஸ்: உதாரணமாக, என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், அதுபோன்ற புரோகிராம்களை நான் பயன்படுத்த மாட்டேன், ஆனாலும் எனது படங்களின் நகல்கள் அனைத்தையும் ஹார்டு டிரைவில் காப்புப் பிரதி எடுத்துள்ளேன். அது என்னுடைய தரவு என்பதால் அதன் நகல் எனக்கு வேண்டும்.
நீங்கள் செய்வது எதனால் “ஏற்கக்கூடியதாக இல்லை”?
மிக்லிட்ஸ்: படங்களுடன் எங்களுக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. அவை, பல நினைவுகளுடன் தொடர்புள்ளவை. ஒரு பயனராக எனது படங்களைப் பாதுகாப்பாக வைக்க ஒரே நிறுவனத்தைச் சார்ந்திருக்க விரும்பவில்லை, நான் பணிபுரியும் நிறுவனமாக இருந்தாலும் இது பொருந்தும். எனவேதான் Google Takeout போன்ற பெயர்வுத்திறன் சேவைகள் மிகவும் முக்கியமாகின்றன. ஏனெனில் எங்கள் பயனர்களின் தரவை எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுக்க அவை உதவுகின்றன (கிளவுடில் இருந்தாலும் கூட).
பெயர்வுத்திறன் என்பது எப்போதிலிருந்து Googleளுக்கு முக்கியமான ஒன்றாக மாறியது?
ஃபேர்: பத்தாண்டுகளுக்கும் மேலாக. தொடக்கத்தில் பயனர் கணக்குகளில் தரவுப் பெயர்வுத்திறன் அம்சத்தை உருவாக்கினோம். அதன்பிறகு 2011ல் Takeout எனும் மையத் தீர்வை Google வெளியிட்டது. அப்போதிலிருந்து அதிகமான Google சேவைகளை ஒருங்கிணைத்தோம், இப்போது 40க்கும் அதிகமான சேவைகளை Takeout ஆதரிக்கிறது.
பெரும்பாலான பயனர்கள் தங்களின் தரவைக் கம்ப்யூட்டர்களில்தான் பதிவிறக்குகின்றனர், அரிதாகவே மற்ற சேவைகளுக்குத் தரவை மாற்றுகின்றனர். இந்தச் சமநிலையின்மை ஏன் தொடர்கிறது?
ஃபேர்: இப்போது பயனர்கள் Googleளில் இருந்து Dropbox, Box, Microsoft Office 365 போன்ற சேவைகளுக்குத் தரவை மாற்றலாம், மேலும் அவற்றிலிருந்து Googleளுக்கும் மாற்றலாம். எங்களின் போட்டியாளர்களில் பலரும் இந்த அம்சத்தை இன்னும் வழங்கவில்லை. இதில் மாற்றத்தைச் செய்வதற்காகத் தரவுப் பகிர்தல் திட்டத்தை 2017ல் தொடங்கினோம், மேலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 2018ல் வெளியிட்டோம். இது பெயர்வுத்திறன் செயல்பாடுகளுக்காக இலவசக் குறியீட்டை நிறுவனங்களுக்கு வழங்கும் ஓப்பன் சோர்ஸ் திட்டமாகும். இதன் மூலம் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்குத் தரவைத் தடையற்று மாற்ற முடியும்.
மிக்லிட்ஸ்: ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய சிறந்த சேவையை உருவாக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். சிறிய நிறுவனம் சொந்தமாகப் பெயர்வுத்திறன் தீர்வை உருவாக்க அதிகச் செலவாகும். அதற்குப் பதிலாகத் தரவுப் பகிர்தல் திட்டத்தைப் பயன்படுத்தி, தேவையான குறியீடுகளை அந்த நிறுவனத்தின் சொந்த மென்பொருளுக்கு மாற்றலாம்.
ஆனால் நான் வேறொரு வழங்குநருக்கு மாற்றுவது உங்களுக்கு எவ்வாறு பலனளிக்கும்?
ஃபேர்: Google சேவைகள் சிறந்தவை என்பதால் அவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென விரும்புகிறோமே தவிர, உங்கள் தரவை வேறெங்கும் பயன்படுத்த முடியாது என்று நீங்கள் நினைக்கக்கூடாது.
மே 2018ல் நடைமுறைக்கு வந்த பொதுவான தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation - GDPR), தரவுப் பெயர்வுத்திறன் தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளது. இந்த விதிகளுக்கு இணங்கும் வகையில் உங்கள் தரவுப் பதிவிறக்கக் கருவியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்ததா?
ஃபேர்: இந்த ஒழுங்குமுறையை 2016ல் முதல்முறை படித்தபோது பெயர்வுத்திறனைப் பொறுத்தவரை நாங்கள் நன்றாகச் செயல்படுகிறோம் என்று தெரிந்தது. அதற்கு முன்பே பெயர்வுத்திறன் அம்சம் தொடர்பாகச் சிறிது காலம் தீவிரமாகப் பணியாற்றி வந்தோம்.
மிக்லிட்ஸ்: பெயர்வுத்திறன் அம்சத்துக்கான உரிய மதிப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போதும் பல பயனர்களுக்கு, பெயர்வுத்திறன் என்பது ஆர்வமில்லாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் இது சில வருடங்களில் மாறும் என நம்புகிறோம்.
"என்னைப் போலவே என் பிள்ளைகளும் தங்களின் படங்களையும் வீடியோக்களையும் சேமித்து, இளம்பருவ நினைவுகளைத் திரும்பிப் பார்த்து மகிழ வேண்டும் என விரும்புகிறேன்."
ஸ்டீஃபன் மிக்லிட்ஸ்
ஏன்?
மிக்லிட்ஸ்: பயனர்கள் இப்போதுதான் தங்களின் தரவைக் கிளவுடில் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு நிறுவனம் திவாலாகிவிட்டது, அந்த நிறுவனத்தின் சேவையகங்களில்தான் உங்கள் தரவைச் சேமித்துள்ளதாக வைத்துக்கொள்வோம். உங்கள் தரவை எப்படி மீட்டெடுக்கலாம் என்று தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். தரவு எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பது குறித்தும் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். எனது பெற்றோரின் பிரிண்ட் செய்யப்பட்ட பழைய படங்களை நான் சேமித்து வைத்துள்ளதைப் போன்று, என் பிள்ளைகளும் தங்களின் படங்களையும் வீடியோக்களையும் சேமித்து இளம்பருவ நினைவுகளைத் திரும்பிப் பார்த்து மகிழ வேண்டும் என விரும்புகிறேன்.
பிரிண்ட் செய்யப்பட்ட படங்களைப் போன்று டிஜிட்டல் படங்களும் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?
மிக்லிட்ஸ்: ஆம். தரவுப் பாதுகாப்பில் இதுவும் ஓர் அம்சமாகும். அதாவது இன்று நான் சேமித்த தரவை 50 வருடங்களுக்குப் பிறகும் என்னால் பயன்படுத்த முடியும்.
படங்கள்: கானி மிர்பாக்
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்
உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
மேலும் அறிக