உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பது
உலகின்
அதிநவீனப் பாதுகாப்பிலிருந்து தொடங்குகிறது.
உலகின் சிறந்த மேம்பட்ட பாதுகாப்புக் கட்டமைப்புகள் மூலம் Google சேவைகள் அனைத்தும் தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றன. இந்த உள்ளமைந்த பாதுகாப்பு, ஆன்லைன் அச்சுறுத்தல்களைத் தானாகக் கண்டறிந்து தடுக்கின்றன. எனவே உங்கள் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பாக உள்ளது என நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.
ஆன்லைனில் உங்களைப் பாதுகாப்பாக
வைக்கிறோம்.
என்க்ரிப்ஷன்
பரிமாற்றத்தின்போது தரவைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க என்க்ரிப்ஷன் உதவுகிறது
என்க்ரிப்ஷன் எங்கள் சேவைகளுக்கு அதிகப் பாதுகாப்பையும் தனியுரிமையையும் அளிக்கிறது. நீங்கள் மின்னஞ்சலை அனுப்பும் போது, வீடியோவைப் பகிரும் போது, இணையதளத்திற்குச் செல்லும் போது அல்லது படங்களைச் சேமிக்கும் போது, உருவாக்கப்படும் தரவானது உங்கள் சாதனம், Google சேவைகள், எங்களின் தரவு மையங்கள் ஆகியவற்றுக்கு இடையே நகர்த்தப்படும். HTTPS, டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டி போன்ற முதன்மை என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் உட்பட பல லேயர்கள் கொண்ட பாதுகாப்புடன் இந்தத் தரவைப் பாதுகாக்கிறோம்.
பாதுகாப்பு அறிவிப்புகள்
பாதுகாப்பு குறித்த முன்கூட்டிய அறிவிப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க உதவுகின்றன
சந்தேகத்திற்குரிய உள்நுழைவு அல்லது தீங்கிழைக்கும் இணையதளம், ஃபைல் அல்லது ஆப்ஸ் போன்று, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் நினைப்பவற்றைக் கண்டறிந்தால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கி உங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் வழிகாட்டுதலை வழங்குவோம். எடுத்துக்காட்டாக, Gmailலில் உங்கள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய இணைப்பை நீங்கள் பதிவிறக்கும் முன்போ நீங்கள் இணைந்திருக்காத சாதனத்தில் இருந்து உங்கள் கணக்கில் யாரேனும் உள்நுழைந்தாலோ உங்களை எச்சரிப்போம். உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரியதாக எதையேனும் நாங்கள் கண்டறியும்போது உங்கள் இன்பாக்ஸிற்கோ மொபைலுக்கோ ஓர் அறிவிப்பை அனுப்புவோம். அதிலுள்ள பட்டனைக் கிளிக் செய்து உங்கள் கணக்கை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மோசமான விளம்பரங்களைத் தடுத்தல்
தீங்கிழைக்கக்கூடிய மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பரங்களை நீங்கள் பார்ப்பதற்கு முன் அவற்றைத் தடுக்கிறோம்
மால்வேர் உள்ள விளம்பரங்கள், நீங்கள் பார்க்க முயற்சிக்கும் உள்ளடக்கத்தை மறைக்கும் விளம்பரங்கள், போலியான பொருட்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்கள், எங்கள் விளம்பரக் கொள்கைகளை மீறுகின்ற விளம்பரங்கள் போன்றவை உங்கள் ஆன்லைன் உபயோகத்தைப் பாதிப்பதுடன் உங்கள் பாதுகாப்பையும் பாதிக்கிறது. இந்தப் பிரச்சினையை நாங்கள் தீவிரமானதாகக் கருதுகிறோம். நேரடி மதிப்பாய்வாளர்கள் மற்றும் அதிநவீன மென்பொருள் மூலம், சராசரியாக நொடிக்கு 100 விளம்பரங்கள் வீதம் ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான மோசமான விளம்பரங்களைத் தடுக்கிறோம். மனதைப் புண்படுத்தும் விளம்பரங்களைப் பற்றிப் புகாரளிப்பதற்கும் நீங்கள் பார்க்க விரும்பும் விளம்பரங்களின் வகைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உங்களுக்குக் கருவிகளையும் வழங்குகிறோம். அனைவருக்கும் இணையம் பாதுகாப்பானதாக இருக்க, எங்களின் புள்ளிவிவரங்களையும் சிறந்த நடைமுறைகளையும் தொடர்ந்து வெளியிடுகிறோம்.
கிளவுட் பாதுகாப்பு
எங்கள் கிளவுட் கட்டமைப்பானது தரவை 24/7 பாதுகாக்கிறது
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தரவு மையங்கள் முதல் கண்டங்களுக்கு இடையே தரவைப் பரிமாற்றுவதற்காகக் கடலுக்கு அடியில் செல்லும் தனிப்பட்ட ஃபைபர் கேபிள்கள் வரை, உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கிளவுட் கட்டமைப்புகளைச் செயல்படுத்துகிறோம். உங்கள் தரவைப் பாதுகாக்கவும் கிடைக்கச் செய்யவும் அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறோம். ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் பிளாட்ஃபார்ம் சேவைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு உடனடியாகத் தானாகவே மாற்றப்படும். இதனால் எந்தக் குறுக்கீடுமின்றி அவை இயங்கும்.
அங்கீகரிப்புக் கருவிகள்
உங்கள் ஆன்லைன் கணக்குகள் அனைத்திற்குமான பாதுகாப்பான உள்நுழைவு
ஆன்லைன் கணக்குகள் மதிப்புமிக்க, பிரத்தியேகச் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில், அவற்றில் உள்நுழைவது மிக முக்கியமான பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தரவு மீறல்களின் காரணமாக லட்சக்கணக்கான கடவுச்சொற்கள் பாதுகாப்பை இழக்கின்றன. இதனால் உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
நீங்கள் விரும்பும் ஆப்ஸ் மற்றும் சேவைகளில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழைய உதவும் வகையில் எங்களின் உள்ளமைந்த அங்கீகரிப்புக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் பாதுகாக்கிறோம்.
-
Gmail சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பதுடன்
ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன் அதுகுறித்து உங்களை எச்சரிக்கவும் செய்கிறது -
தானியங்கு Chrome புதுப்பிப்புகள் அம்சம்
உங்களை மால்வேர் மற்றும் ஏமாற்றக்கூடிய தளங்களில் இருந்து பாதுகாக்கிறதுபாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் எப்போதும் மாறக்கூடியவை என்பதால் நீங்கள் பயன்படுத்தும் உலாவியின் பதிப்பு சமீபத்தியதா இல்லையா என்பதை Chrome அடிக்கடி சரிபார்க்கும். பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய பிழைத் திருத்தங்கள், மால்வேர் மற்றும் ஏமாற்றக்கூடிய தளங்களுக்கு எதிரான பாதுகாப்புகள் போன்றவை இதிலடங்கும். புதுப்பிப்பு தானாகவே செய்யப்படும் என்பதால் Chromeமின் சமீபத்திய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாகப் பாதுகாக்கப்படுவீர்கள்.
-
Google Play Protect மூலம் உங்கள் Android சாதனத்தையும்
ஆப்ஸையும் தரவையும் பாதுகாப்பாக வைக்கிறோம்Google Play Protect சேவை உங்கள் Android சாதனத்தில் உள்ளமைக்கப்பட்டிருக்கும். மேலும் உங்கள் சாதனம், தரவு, ஆப்ஸ் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க தொடர்ந்து பின்னணியில் இயங்கும். Android மொபைல்களில் உள்ள ஆப்ஸை நாங்கள் தினமும் தானாகவே ஸ்கேன் செய்து, தீங்கு விளைவிக்கும் ஆப்ஸ் சாதனங்களை வந்தடைவதைத் தடுக்கிறோம். இதன் மூலம் மொபைல் அச்சுறுத்தலுக்கு எதிராக உலகிலேயே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்புச் சேவையாக Google Play Protect உள்ளது.
கூடுதல் வழிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
-
தனியுரிமைக் கட்டுப்பாடுகள்உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்யுங்கள்.
-
தரவு நடைமுறைகள்பொறுப்பான தரவு நடைமுறைகளின் மூலம் உங்கள் தனியுரிமையை நாங்கள் எவ்வாறு மதிக்கிறோம் என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
-
பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.
-
விளம்பரங்கள் & தரவுஎங்கள் தளங்களில் நீங்கள் பார்க்கக்கூடிய விளம்பரங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.