உங்களின் தனிப்பட்ட
விவரங்களைத் தனிப்படுத்தி, பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கிறோம்.
Googleளில், தொழில்துறையில் சிறந்து விளங்கும் பாதுகாப்பு அம்சங்கள், பொறுப்பான தரவு நடைமுறைகள், நீங்களே கட்டுப்படுத்துவற்கு ஏற்ற எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கருவிகள் ஆகியவற்றின் மூலம் நாங்கள் உங்கள் தனியுரிமையை மதித்து, அதைப் பாதுகாக்கிறோம்.
உலகின்
அதிநவீனப் பாதுகாப்பிலிருந்து தொடங்குகிறது.
தீங்கு ஏற்படுவதற்கு முன்பே அவற்றைத் தானாகத் தடுக்கும்படி வடிவமைக்கப்பட்ட உள்ளமைந்த பாதுகாப்பு மூலம் உங்கள் தனியுரிமை Google சேவைகள் அனைத்திலும் பாதுகாக்கப்படுகிறது.
தரவு அனுப்பப்படும்போதும் பெறப்படும்போதும் மேம்பட்ட என்கிரிப்ஷன் அம்சம் அதைப் பாதுகாப்பாக வைக்கிறது
என்கிரிப்ஷன் எங்கள் சேவைகளுக்கு உயர் நிலைப் பாதுகாப்பையும் தனியுரிமையையும் அளிக்கிறது. நீங்கள் மின்னஞ்சலை அனுப்பும் போது, வீடியோவைப் பகிரும் போது, இணையதளத்திற்குச் செல்லும் போது அல்லது படங்களைச் சேமிக்கும் போது, உருவாக்கப்படும் தரவானது உங்கள் சாதனம், Google சேவைகள், எங்களின் தரவு மையங்கள் ஆகியவற்றுக்கு இடையே நகர்த்தப்படும். HTTPS, டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டி போன்ற முதன்மை என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் உட்பட பல லேயர்கள் கொண்ட பாதுகாப்புடன் இந்தத் தரவைப் பாதுகாக்கிறோம்.
பாதுகாப்பு குறித்த முன்கூட்டிய அறிவிப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க உதவுகின்றன
சந்தேகத்திற்குரிய உள்நுழைவு அல்லது தீங்கிழைக்கும் இணையதளம், ஃபைல் அல்லது ஆப்ஸ் போன்று, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் நினைப்பவற்றைக் கண்டறிந்தால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கி நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவ வழிகாட்டுதலை வழங்குவோம். உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரியதாக எதையேனும் நாங்கள் கண்டறியும்போது ஒரே கிளிக்கில் உங்கள் கணக்கை நீங்கள் பாதுகாத்துக் கொள்வதற்காக உங்கள் இன்பாக்ஸிற்கோ மொபைலுக்கோ அறிவிப்பு அனுப்புவோம்.
அச்சுறுத்தல்கள் தானாகவே கண்டறியப்பட்டுத் தடுக்கப்படுகின்றன
Safe Browsing பாதுகாப்பு 5 பில்லியன் கருவிகளை தினமும் பாதுகாக்கிறது, உங்களுடையது உட்பட.ஒவ்வொருவருக்கும் இணையம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, Apple Safari, Mozilla Firefox உள்ளிட்ட பிற நிறுவனங்களின் உலாவிகள் பயன்படுத்துவதற்காக இந்தத் தொழில்நுட்பத்தைக் கட்டணமில்லாமல் வழங்கியுள்ளோம். எனவே Google மட்டுமின்றி வேறு தளங்களில் நீங்கள் உலாவும்போதும் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தனியுரிமைக் கருவிகள்.
உங்கள் Google கணக்கில் எந்தத் தரவு சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்
ஒரே வகையான தனியுரிமை அமைப்புகள் அனைவருக்கும் பொருந்தாது என்பதை அறிவோம். அதனால்தான் உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்ய நாங்கள் உதவுகிறோம். உங்கள் தரவைச் சேமித்தல், நீக்குதல், தானாக நீக்குதல் போன்ற எதைச் செய்ய விரும்பினாலும் அதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்குகிறோம்.
மூலம் உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.
நீங்கள் தினமும் பயன்படுத்தும் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேலும் உதவிகரமானதாக ஆக்குவதில் தரவு முக்கியமான பங்கு வகிக்கிறது. அந்தத் தரவைப் பொறுப்பாகக் கையாளவும் கடுமையான நெறிமுறைகள், புதுமையான தனியுரிமைத் தொழில்நுட்பங்கள் ஆகியவை மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
-
உள்ளமைந்த பாதுகாப்புஎங்களின் தானியங்குப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
-
தனியுரிமைக் கட்டுப்பாடுகள்உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்யுங்கள்.
-
தரவு நடைமுறைகள்பொறுப்பான தரவு நடைமுறைகளின் மூலம் உங்கள் தனியுரிமையை நாங்கள் எவ்வாறு மதிக்கிறோம் என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
-
பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.
-
விளம்பரங்கள் & தரவுஎங்கள் தளங்களில் நீங்கள் பார்க்கக்கூடிய விளம்பரங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.