Google தயாரிப்பு ஒவ்வொன்றும்
பாதுகாப்பில் கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் நம்பகமான தகவல்களைக் கண்டறியவும், விரும்பிய இடத்திற்குப் பயணம் செய்யவும், அன்புக்குரியவர்களைத் தொடர்புகொள்ளவும், மேலும் பலவற்றுக்கும் Googleளைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைப்பது எங்களின் பொறுப்பாகும்.
பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் தேடுங்கள்.
-
பாதுகாப்பான, உயர்தர தேடல் முடிவுகள்
உதவிகரமான, உயர்தரத் தேடல் முடிவுகள் உங்களுக்குக் காட்டப்படுவதையும் இணையத்தில் உள்ள தேவையற்றவை எதுவும் உங்களுக்குக் காட்டப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த நாங்கள் கடுமையாகப் பணியாற்றி வருகிறோம். உயர்தர உள்ளடக்கத்தை வழங்காத அல்லது பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்ற இணையப்பக்கங்களை நாங்கள் தேடல் முடிவுகளில் காட்டுவதில்லை. உயர்தரமான மற்றும் பாதுகாப்பான இணையத்தை உருவாக்க, எங்களின் ஸ்பேம் எதிர்ப்புச் செயல்களுக்கான தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், Google மட்டுமல்லாது பிற நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
-
உங்கள் தேடல் விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன
Google ஆப்ஸிலும் google.com தளத்திலும் நீங்கள் தேடுபவை அனைத்தும் இயல்பாகவே என்க்ரிப்ட் செய்யப்படும். இதனால் நீங்கள் தேடியவை பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
-
எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள்
நீங்கள் இதுவரை தேடியவற்றைப் பாதுகாப்பாகச் சேமிக்கிறோம். தனியுரிமைக் கட்டுப்பாடுகளுக்குச் சென்று நீங்கள் அவற்றைப் பார்க்கலாம், கணக்கிலிருந்து எளிதில் நீக்கலாம்.
-
உள்ளடக்கப் பாதுகாப்பிற்கான கட்டுப்பாடுகள்
நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் Search வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தேடலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மற்றொரு பாதுகாப்பு அடுக்கைச் சேர்க்கலாம், இது வெளிப்படையான பாலியல் முடிவுகளை வடிகட்ட உதவும்.
-
Google செயலி மூலம் மறைநிலைப் பயன்முறையில் தேடுங்கள்
iOSக்கான Google செயலியானது மறைநிலைப் பயன்முறையுடன் வருகிறது. உங்கள் முகப்புத் திரையிலிருந்து எப்போதும் ஒரு தட்டல் தூரம் தான்.
வைக்கும் மின்னஞ்சல்.
-
ஃபிஷிங்கிலிருந்து வலுவான பாதுகாப்பு
மால்வேர் மற்றும் ஃபிஷிங் தாக்குதல்களில் பல மின்னஞ்சல் மூலமே தொடங்குகின்றன. 99.9%க்கும் மேற்பட்ட ஸ்பேம், ஃபிஷிங் முயற்சிகள், மால்வேர் ஆகியவற்றை Gmail தடுக்கிறது.
-
கணக்குப் பாதுகாப்பு
பல்வேறு பாதுகாப்பு அறிகுறிகளைக் கண்காணிப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய உள்நுழைவுகள், அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாக்கிறோம். இலக்கு வைத்துத் தாக்கப்படும் அதிக ஆபத்துள்ள கணக்குகளுக்கு மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.
-
மின்னஞ்சல் என்க்ரிப்ஷன்
Google உள்கட்டமைப்பில், மின்னஞ்சல் செய்திகள் சேமிக்கப்பட்டிருக்கும்போதும் தரவு மையங்களுக்கிடையே பரிமாற்றப்படும்போதும் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. மூன்றாம் தரப்பு வழங்குநர்களுக்குப் பரிமாற்றப்படும் மின்னஞ்சல் செய்திகள் சாத்தியமான சூழல்களிலும் உள்ளமைவுக்குத் தேவைப்படும்போதும் டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டி மூலம் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.
-
இயல்பாகவே பாதுகாப்பானது
பாதுகாப்பு உலாவல், சாண்ட்பாக்ஸிங், மேலும் பிற சிறந்த தொழில்நுட்பங்கள் போன்ற உள்ளமைந்த பாதுகாப்பு அம்சங்கள், நீங்கள் Chrome பயன்படுத்தும்போது ஆபத்தான தளங்கள், மால்வேர், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன.
-
தானாகவே புதுப்பிக்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள்
ஆறு வாரத்திற்கு ஒருமுறை Chrome தானாகவே புதுப்பிக்கப்படும், இதனால் சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களையும் பிழைதிருத்தங்களையும் பெறுவீர்கள். நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
-
வலிமையான, பிரத்தியேகமான கடவுச்சொற்கள்
உங்கள் கணக்குகள் அனைத்தையும் இன்னும் பாதுகாப்பாக வைக்க, வலிமையான, பிரத்தியேகமான கடவுச்சொற்களை உருவாக்க Chrome உதவ முடியும். அத்துடன் இணையத்தைப் பயன்படுத்தும்போது பல்வேறு சாதனங்களில் உங்களுக்காக அவற்றைத் தானாகவே நிரப்பவும் முடியும்.
-
மறைநிலைப் பயன்முறை
உங்கள் செயல்பாட்டை உலாவியிலோ சாதனத்திலோ சேமிக்காமலேயே இணையத்தைப் பயன்படுத்தும் வசதியை Chrome மறைநிலைப் பயன்முறை உங்களுக்கு வழங்குகிறது.
உங்கள் தனியுரிமையையும் கட்டுப்படுத்துங்கள்.
-
மறைநிலைப் பயன்முறை
Mapsஸை மறைநிலைப் பயன்முறையில் பயன்படுத்தினால் உங்கள் செயல்பாடுகள் சாதனத்தில் சேமிக்கப்படாது. Mapsஸில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டி மறைநிலைப் பயன்முறையை எளிதில் இயக்கலாம். உணவகப் பரிந்துரைகள், உங்களுக்கேற்ற அம்சங்கள் போன்ற பிரத்தியேக அனுபவத்தைப் பெற, இதை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.
-
எளிதாக அணுகக்கூடிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள்
“Maps ஆப்ஸில் உங்கள் தரவு” எனும் பக்கத்திற்குச் சென்று இதுவரை சென்ற இடங்களையும் பிற தனியுரிமைக் கட்டுப்பாடுகளையும் எளிதாக அணுகலாம், உங்கள் தரவைப் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.
முழுக் கட்டுப்பாடும் உங்களிடமே உள்ளது.
-
விளம்பர அமைப்புகள்
உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் ஒருபோதும் விற்பதில்லை. உங்களின் விளம்பர அமைப்புகளுக்குச் சென்று உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைச் சிறந்த விதத்தில் கட்டுப்படுத்தலாம், விளம்பரப் பிரத்தியேகமாக்க அம்சத்தை முடக்கிக்கொள்ளலாம்.
-
மறைநிலைப் பயன்முறை
YouTubeல் மறைநிலைப் பயன்முறை இயக்கத்தில் இருந்தால் உங்களின் செயல்பாடுகள் (எ.கா. நீங்கள் பார்க்கும் வீடியோக்கள்) Google கணக்கில் சேமிக்கப்படாது, 'இதுவரை பார்த்தவை' பட்டியலிலும் சேர்க்கப்படாது.
-
எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள்
'YouTube செயல்பாடுகள்' தகவல் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தவும் உங்களுக்கு வீடியோக்களைப் பரிந்துரைக்கவும் உதவுகிறது. “YouTubeல் உங்கள் தரவு” எனும் பக்கத்திற்குச் சென்று YouTube செயல்பாடுகளை வைத்திருப்பதற்கான காலத்தை வரம்பிடலாம் அல்லது அதை முற்றிலும் முடக்கத் தேர்வுசெய்யலாம்.
சேமிப்பதற்கான பாதுகாப்பான இடம்.
-
உங்கள் தகவலைப் பாதுகாப்பாக வைக்கிறோம்
Google Photosஸில் நீங்கள் காப்புப் பிரதி எடுக்கும் உங்கள் நினைவுகளை, உலகின் மிக மேம்பட்ட பாதுகாப்புக் கட்டமைப்புகளில் ஒன்றின் மூலம் நாங்கள் பாதுகாக்கிறோம். அத்துடன் உங்கள் சாதனம், Google சேவைகள், எங்கள் தரவு மையங்கள் ஆகியவற்றுக்கிடையே தகவல்கள் பரிமாற்றப்படும்போது அவற்றை என்க்ரிப்ட்டும் செய்கிறோம்.
-
தரவைப் பொறுப்பாகக் கையாளுதல்
உங்கள் படங்கள், வீடியோக்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை Google Photos யாரிடமும் விற்பதில்லை. மேலும் உங்கள் படங்களையோ வீடியோக்களையோ விளம்பரத்துக்காகப் பயன்படுத்துவதில்லை. முகத்தின்படி குழுவாக்குதல் போன்ற அம்சங்கள் உங்கள் படங்களை எளிதாகத் தேடுவதையும் நிர்வகிப்பதையும் எளிதாக்குகின்றன. எனினும் முகத்தின்படி குழுவாக்கப்பட்ட படங்களும் லேபிள்களும் உங்களுக்கு மட்டுமே காட்டப்படும். பொது நோக்கத்திற்கான முகமறிதல் தொழில்நுட்பத்தை நாங்கள் தொழில்ரீதியாக வழங்குவதில்லை.
-
முழுக் கட்டுப்பாடும் உங்களிடம் உள்ளது
எளிதாகப் பயன்படுத்தக்கூடிய எங்களின் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் Google Photos உபயோகத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் நீங்கள் பெறலாம். கிளவுடில் சேமித்து வைக்க விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுத்து காப்புப் பிரதி எடுக்கலாம், படங்களைப் பாதுகாப்பாகப் பகிரலாம், முகத்தின்படி குழுவாக்குதல் மற்றும் லேபிளிடல் அம்சத்தை முடக்கிவிட்டு அவற்றுக்குரிய படங்களைக் கணக்கிலிருந்து நீக்கலாம், இருப்பிடத் தகவலை மாற்றலாம்.
உங்கள் டிஜிட்டல் வாழ்க்கை.
-
சாதனத்தில் உள்ளமைந்த நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள்
அதிகமான தரவை உங்கள் சாதனத்தில் வைத்திருக்க உதவும் மெஷின் லேர்னிங் (ML) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் முன்னோடியாக இருந்து வருகிறோம். ஃபெடெரேட்டட் லேர்னிங் என்பது ML மாடல்களைப் பயிற்றுவிப்பதற்குப் பல்வேறு சாதனங்களிலிருந்து பெறப்படும் அடையாளம் நீக்கிய தகவல்களை ஒருங்கிணைக்கக்கூடிய புதிய அணுகுமுறையாகும். எவரையும் குறித்து தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொள்ளாமல் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள எங்களுக்கு இது உதவுகிறது. இன்னும் பல பயனுள்ள தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்கும் அதேவேளையில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும் ஃபெடரேட்டட் லேர்னிங் உதவுகிறது.
-
Titan™ M சிப்
Google Cloud தரவு மையங்களைப் பாதுகாக்கிற அதே பாதுகாப்புச் சிப்தான் உங்களின் அதிமுக்கியத் தகவல்களையும் பாதுகாக்கிறது. இதில் கடவுக்குறியீட்டுப் பாதுகாப்பு, என்க்ரிப்ஷன், பணப் பரிமாற்றப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
-
தானியங்கு OS புதுப்பிப்புகள்
Pixel சாதனத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்காவது சமீபத்திய OS மற்றும் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைத் தானாகவே பெறுவீர்கள்.1 இதனால் புதிய அம்சங்களையும் பாதுகாப்பு மேம்பாடுகளையும் உடனுக்குடன் பெறுவீர்கள்.
1 அமெரிக்காவின் Google Storeரில் மொபைல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு Android பதிப்புக்கான புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள். விவரங்களுக்கு g.co/pixel/updates எனும் இணைப்பைப் பாருங்கள்.
தனியுரிமைக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
இயக்கும் வரை காத்திருப்புப் பயன்முறையிலேயே இருக்கும்
நீங்கள் இயக்கும் வரை (எ.கா. “Ok Google” என்று கூறுதல்) காத்திருப்புப் பயன்முறையில் இருக்குமாறு Google Assistant வடிவமைக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பயன்முறையில் இருக்கும்போது உங்கள் உரையாடல்களை Googleளுக்கோ வேறு எவருக்கோ Assistant அனுப்பாது.
இயக்கப்பட்டதை உணர்ந்ததும், Google Assistant காத்திருப்புப் பயன்முறையில் இருந்து வெளியேறி உங்கள் கோரிக்கையை Google சேவையகங்களுக்கு அனுப்பும். "Ok Google" போன்ற ஏதேனும் சத்தத்தை அது கேட்டாலோ நீங்கள் தெரியாமல் அதை இயக்கினாலோ கூட இவ்வாறு நடக்கலாம்.
-
தனியுரிமைக்கென்று வடிவமைக்கப்பட்டது
இயல்பாக, உங்கள் Google Assistant ஆடியோ ரெக்கார்டிங்குகளை நாங்கள் சேமித்து வைக்கமாட்டோம். உங்கள் தரவைப் பயன்படுத்தி Google Assistant எப்படி உங்களுக்காகச் செயல்படுகிறது என்பது குறித்து மேலும் அறிய, “Google Assistantடில் உங்கள் தரவு” என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
-
எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள்
எந்தெந்த உரையாடல்கள் சேமிக்கப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த, “Ok Google, இந்த வாரம் நான் சொன்னதை எல்லாம் டெலீட் பண்ணிடு” என்பது போன்று கூறினால் போதும். “எனது செயல்பாடுகள்” பக்கத்தில் உள்ள அந்த உரையாடல்களை Google Assistant நீக்கிவிடும்.
பிளாட்ஃபார்ம்.
-
Google Play Protect
உங்கள் ஆப்ஸ் பாதுகாப்பானவை என்பதை உறுதிசெய்ய, Google Play Protect தானாகவே அவற்றை ஸ்கேன் செய்யும். தீங்கு விளைவிக்கக்கூடிய ஆப்ஸை நீங்கள் வைத்திருந்தால் விரைவில் உங்களை எச்சரித்து அந்த ஆப்ஸைச் சாதனத்திலிருந்து எவ்வாறு நீக்குவது என்பதற்கான வழிமுறைகளையும் உங்களுக்கு வழங்குவோம்.
-
ஆப்ஸ் அனுமதிகள்
நீங்கள் பதிவிறக்கும் ஆப்ஸ் அவற்றின் செயல்பாட்டை மேலும் பயனுள்ளதாக்க, உங்கள் சாதனத்திலுள்ள தரவைப் பயன்படுத்துகின்றன. உங்கள் சாதனத்திலுள்ள பல்வேறு வகையான தரவை (தொடர்புகள், படங்கள், இருப்பிடம் போன்றவை) ஓர் ஆப்ஸ் எப்போது, எதற்காக அணுகலாம் என்பதை ஆப்ஸ் அனுமதிகள் மூலம் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
-
ஃபிஷிங்கிலிருந்து பாதுகாப்பு
ஃபிஷிங் என்பது யாராவது உங்களை ஏமாற்றி உங்களின் தனிப்பட்ட தகவலைப் பெற முயலும் செயலாகும். ஸ்பேமர்களைப் பற்றி Android உங்களை எச்சரிக்கும், மேலும் நீங்கள் அழைப்பை ஏற்கும் முன்பே யார் அழைக்கிறார்கள் என அவர்களிடம் கேட்க அழைப்பு வடிப்பானைப் பயன்படுத்தலாம்.
மிகவும் பாதுகாப்பான வழி.
-
ஒவ்வொரு முறை பர்ச்சேஸ் செய்வதற்கு முன்பும் அங்கீகரியுங்கள்
கைரேகை, பின் அல்லது பேட்டர்ன் மூலம் சாதனத்தை அன்லாக் செய்தால் மட்டுமே Google Pay வேலை செய்யும்*. எனவே உங்கள் மொபைலைப் பயன்படுத்தி நீங்கள் மட்டுமே பணம் செலுத்த முடியும்.
*அன்லாக் செய்வதற்கான தேவைகள் நாட்டைப் பொறுத்து மாறுபடும்.
-
உங்கள் கார்டு விவரங்கள் பகிரப்படாது
தட்டிப் பணம் செலுத்தும்போது வணிகர்களால் உங்கள் கார்டு எண்ணைப் பெற முடியாது என்பதால், கார்டை ஸ்வைப் செய்வதைவிட அது கூடுதல் பாதுகாப்பானது. விர்ச்சுவல் கணக்கு எண் மூலம் உங்கள் பேமெண்ட் தகவலை Google Pay பாதுகாக்கிறது.
-
எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் மொபைலைப் பூட்டலாம்
உங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ Googleளின் Find My Deviceஸைப் பயன்படுத்தி நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அதைப் பூட்டலாம், உங்கள் Google கணக்கிலிருந்து வெளியேறலாம், தரவு முழுவதையும் அழிக்கலாம். இதனால் உங்களைத் தவிர வேறு யாராலும் பேமெண்ட் எதுவும் செய்ய முடியாது.
-
பாதுகாப்பு அம்சங்கள் இயல்பாகவே இயக்கத்தில் இருக்கும்
மீட்டிங்குகளைப் பாதுகாப்பாக வைக்க, தவறான பயன்பாட்டைத் தடுக்கும் அம்சங்களும் பாதுகாப்பான மீட்டிங் கட்டுப்பாடுகளும் Google Meetடில் இயல்பாகவே இயக்கத்தில் வைக்கப்படுகின்றன. மேலும் பல வகையான இருபடிச் சரிபார்ப்பு முறைகளையும் (பாதுகாப்பு விசைகள் உட்பட) இதில் பயன்படுத்த முடியும்.
-
பரிமாற்றப்படும்போது இயல்பாகவே அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்படுகிறது
வீடியோ மீட்டிங் நடைபெறும்போது அவை அனைத்துமே என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. டேட்டாகிராம் டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டிக்கான (DTLS) IETF பாதுகாப்புத் தரங்களுக்கு Meet இணங்குகிறது.
-
பாதுகாப்பாகச் செயல்படுத்துவது எளிது
இணையத்தில் Meetடைப் பயன்படுத்த செருகுநிரல்கள் தேவையில்லை. இது Chrome மற்றும் பிற உலாவிகளில் செருகுநிரல் இன்றிச் செயல்படும் என்பதால் இதற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறைவாகவே உள்ளன. மொபைலில் நீங்கள் Google Meet ஆப்ஸை நிறுவிக்கொள்ளலாம்.
தனியுரிமையைப் பாதுகாக்கும் வீடே உதவிகரமானது.
-
தனியுரிமைக் கட்டுப்பாடுகள்
எங்களின் டிஸ்ப்ளேக்களிலும் ஸ்பீக்கர்களிலும் நேரடியாக மைக்ரோஃபோனை ஒலியடக்கக்கூடிய ஸ்விட்ச்சுகள் உள்ளன. மேலும் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தரவை (ஆடியோவையும் வீடியோவையும் அணுகுதல், மதிப்பாய்வு செய்தல், நீக்குதல் ஆகியவை உட்பட) நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிர்வகிக்கலாம்.
-
சென்சார் வெளிப்படைத்தன்மை
எங்களின் தயாரிப்புகளில் உள்ள சென்சார்கள் பற்றியும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். ஆடியோ, வீடியோ, சுற்றுச்சூழல், ஆக்டிவிட்டி சென்சார்கள் (இயக்கப்பட்டிருந்தாலும் இயக்கப்படவில்லை என்றாலும்) ஆகிய அனைத்தையும் சாதனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் பட்டியலிடுகிறோம். இந்த சென்சார்கள் எந்த வகையான தரவை Googleளுக்கு அனுப்புகின்றன என்பதை எங்களின் சென்சார்களுக்கான வழிகாட்டி விளக்குகிறது, மேலும் அந்தத் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான உதாரணங்களும் அதிலுள்ளன.
-
பொறுப்பான தரவுப் பயன்பாடு
மிக உதவிகரமான வீட்டை உருவாக்கும் வகையில் Google Nest சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்கள் சாதனங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ, ஆடியோ, சுற்றுச்சூழல் ஆகியவை சார்ந்த சென்சார் தரவு உதவிகரமான அம்சங்களையும் சேவைகளையும் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தரவை விளம்பரப் பிரத்தியேகமாக்கலில் இருந்து எவ்வாறு தனிப்படுத்தி வைக்கிறோம் என்பதை இங்கே விளக்கியுள்ளோம்.
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
-
பாதுகாப்பு & தனியுரிமைGoogle உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு வழங்கும் பாதுகாப்பையும், உங்களுக்கு வழங்கும் கட்டுப்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
-
குடும்பப் பாதுகாப்புஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதை நிர்வகிக்க Google எப்படி உதவுகிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.
-
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.