உங்கள் தனியுரிமையை மதிக்கும் விளம்பரங்கள்.

“ஆன்லைனில் உங்களைப் பாதுகாப்பாக வைப்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. இயல்பாகவே பாதுகாப்பாகவும் வடிவமைப்பில் தனிப்பட்டதாகவும் உங்களுக்குக் கட்டுப்பாட்டை வழங்கும் தயாரிப்புகளை வழங்கி Googleளுடன் ஒவ்வொரு நாளும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்கிறோம்.”

- ஜென் ஃபிட்ஸ்பேட்ரிக், Googleளின் கோர் சிஸ்டம்ஸ் & எக்ஸ்பீரியன்சஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர்

பொறுப்பான விளம்பரப்படுத்துதலுக்கான எங்கள் உறுதிப்பாடுகள்.

இணையத்தை வெளிப்படையாகவும் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது நாங்கள் செய்யும் அனைத்திலும் முதன்மையானதாகும். பொறுப்புடன் விளம்பரங்களை வழங்குவதில் உறுதியாக உள்ளோம். விளம்பரங்களுக்கு Googleளின் தனியுரிமைக் கொள்கைகள் பொருந்தும் விதம்:

உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் நாங்கள் எவருக்கும் விற்பதில்லை.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவருக்கும் நாங்கள் ஒருபோதும் விற்பதில்லை (விளம்பர நோக்கங்களுக்காகவும்கூட).

என்ன தரவைச் சேகரிக்கிறோம், ஏன் சேகரிக்கிறோம் என்பதில் வெளிப்படையாக இருக்கிறோம்.

எங்கள் பிளாட்ஃபார்ம்களில் விளம்பரங்களையும் விளம்பரதாரர் உள்ளடக்கத்தையும் தெளிவாக லேபிளிட்டு, குறிப்பிட்ட விளம்பரங்கள் ஏன் காட்டப்படுகின்றன, என்னென்ன தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன, Google Ads அனுபவத்தை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்தலாம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறோம்.

உதாரணத்திற்கு, Search, YouTube மற்றும் Discover உடன் எனது விளம்பர மையம் விளம்பரங்களுக்கு எந்தெந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டி அந்தத் தகவல்களை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது. எனவே உங்களுக்கேற்ற அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறோம்.

உங்கள் தகவல்களும் அது விளம்பரப்படுத்துதலுக்காகப் பயன்படுத்தப்படும் விதமும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. நீங்கள் சென்ற தளங்கள், தேடியவை போன்று Googleளில் மேற்கொள்ளும் உங்கள் செயல்பாடு உங்கள் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில், விளம்பரங்கள் உட்பட எங்கள் தயாரிப்புகளில் சிறந்த, இன்னும் உதவிகரமான அனுபவங்களை வழங்க உதவுகிறது.

நீங்கள் விரும்பாதவற்றைக் குறைவாகப் பார்த்து, விருப்பமான பிராண்டுகளையும் தலைப்புகளையும் அதிகமாகப் பார்க்க எனது விளம்பர மையம் மூலம் Google Search, Discover, YouTube ஆகியவற்றில் உங்கள் விளம்பர அனுபவங்களை நீங்கள் பிரத்தியேகப்படுத்தலாம். மதுபானம், டேட்டிங், சூதாட்டம், கர்ப்பக் காலம், குழந்தை வளர்ப்பு, எடையைக் குறைத்தல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாதுகாக்கவேண்டிய விளம்பரத் தலைப்புகள் தொடர்பான விளம்பரங்களைக் குறைக்கவும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

தரவு மற்றும் தனியுரிமை அமைப்புகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் விளம்பரப் பிரத்தியேகமாக்கலை முழுவதுமாக முடக்கி உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுத் தரவையும் நிரந்தரமாக நீக்கலாம்.

உங்கள் தனியுரிமையை மேலும் பாதுகாக்க, நாங்கள் பயன்படுத்தும் தரவைக் குறைக்கிறோம்.

உங்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்க உடல்நலம், இனம், மதம், பாலியல் நாட்டம் போன்ற பாதுகாக்கவேண்டிய தகவல்களை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.

Drive, Gmail, Photos போன்ற ஆப்ஸில் நீங்கள் உருவாக்கிச் சேமிக்கும் உள்ளடக்கத்தை விளம்பர நோக்கங்களுக்காக ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. அத்துடன் உங்கள் தனியுரிமையை மேலும் பாதுகாக்க எங்களின் முக்கியச் செயல்பாட்டு அமைப்புகளுக்குத் தானாக நீக்குதலை இயல்பாக அமைத்துள்ளோம். அதாவது, நீங்கள் நீக்கும்வரை காத்திருக்காமல் உங்கள் கணக்குடன் இருக்கும் செயல்பாட்டுத் தரவு 18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தொடர்ந்து நீக்கப்படும்.

ஆன்லைனில் சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழிகளை எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறோம். மேலும் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்று எங்களுக்குத் தெரியும் இடங்களில் சிறுவர்களுக்கு விளம்பரப் பிரத்தியேகமாக்கலை அனுமதிப்பதில்லை.

இயல்பாகவே பாதுகாப்பாக இருக்கும் தயாரிப்புகளைத் தயாரித்து உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை மற்றும் தரவைப் பாதுகாப்பதே Googleளின் பணியில் முக்கியமாகும். அதனால்தான் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுடன் Google தயாரிப்புகள் அனைத்தும் தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றன. உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு இந்த உள்ளமைந்த பாதுகாப்பு வளர்ந்துவரும் ஆன்லைன் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுத்து உதவுகிறது உதவுகிறது (மோசடிகள், மோசடி விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயல்வது உட்பட).

கூடுதலாக, உங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு உதவ உலகளவில் விளம்பரதாரர்களைச் சரிபார்த்து, தவறான நோக்கமுடையவர்களைக் கண்டறிய வேலை செய்து, தவறான பிரதிநிதித்துவம் செய்யும் அவர்களின் முயற்சிகளைக் குறைக்கிறோம். விளம்பரங்களுக்கான வெளிப்படைத்தன்மை மையம் மூலம், சரிபார்க்கப்பட்ட விளம்பரதாரர்கள் வழங்கும் அனைத்து விளம்பரங்களுக்குமான எங்கள் தேடக்கூடிய ஹப்பிற்குச் சென்று நீங்கள் மேலும் அறியலாம்.

மேம்பட்ட தனியுரிமைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி பிறருடன் அவற்றைப் பகிர்கிறோம்.

என்னென்ன தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன, யாரால் சேகரிக்கப்படுகின்றன ஆகியவற்றைப் பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் ஆன்லைன் அனுபவத்தைப் பெற்று மகிழ வேண்டும். அதற்காகத்தான் ஆன்லைனில் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்த, Googleளில் இருக்கும் குழுக்கள் பல நிறுவனங்களுடன் சேர்ந்து பணிபுரிகின்றன. பயனர் தகவல்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் பிசினஸ்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் தங்கள் விளம்பரங்களின் செயல்திறனை அளவிடவும் உதவுகின்ற ரகசியக் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் தனியுரிமை சாண்ட்பாக்ஸ் தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதும் இதிலடங்கும்.

உங்களுக்கு ஏற்ற
விளம்பர அனுபவத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
உங்கள் விளம்பர அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் கூடிய 'எனது விளம்பர மைய' ஹப் பக்கத்தின் மாதிரி

Googleளில் விளம்பரக் கட்டுப்பாடுகள்

Google Search, YouTube, Discover ஆகியவை முழுவதிலும் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை எனது விளம்பர மையம் மூலம் முன்பைவிட எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டப் பயன்படுத்தப்படும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதை எனது விளம்பர மையம் எளிதாக்குகிறது. உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய தகவல்களும் உங்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் உங்கள் ஆர்வங்கள் தொடர்பான எங்களின் கணிப்புகளும் இதிலடங்கும். உங்கள் விளம்பர அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்தவும் எனது விளம்பர மையத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் மற்ற பிராண்டுகளைத் தடுத்து உங்களுக்கு விருப்பமான பிராண்டுகளை அதிகமாகப் பார்க்கலாம். உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுத் தரவை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நிரந்தரமாக நீக்கிக்கொள்ளலாம்.




Googleளில் உணர்வுப்பூர்வமான தலைப்புகள் தொடர்பான விளம்பரங்களைத் தடுத்தல்

எனது விளம்பர மையம் மூலம், மதுபானம், டேட்டிங், சூதாட்டம், கர்ப்பக் காலம், குழந்தை வளர்ப்பு, எடையைக் குறைத்தல் உட்பட நீங்கள் அசௌகரியமாக உணரக்கூடிய குறிப்பிட்ட தலைப்புகள் தொடர்பான விளம்பரங்கள் காட்டப்படுவதை நீங்கள் தடுக்கலாம். உணர்வுப்பூர்வமான விளம்பர வகைகளைத் தடுத்தல் குறித்து மேலும் அறிக.

எப்போது வேண்டுமானாலும் பிரத்தியேக விளம்பரங்களை நீங்கள் முடக்கிக்கொள்ளலாம்

பிரத்தியேக விளம்பரங்களை எப்போது வேண்டுமானாலும் மொத்தமாக முடக்கிக்கொள்ளலாம். அப்போதும் விளம்பரங்கள் காட்டப்படும், ஆனால் அவை உங்கள் ஆர்வங்களுடன் அந்த அளவுக்குத் தொடர்புடையவையாக இருக்காது. Google கணக்கில் நீங்கள் உள்நுழையும் அனைத்து இடங்களிலும் உங்கள் அமைப்புகள் பயன்படுத்தப்படும்.

நீங்கள் பார்க்கும்
விளம்பரங்களைப்
பற்றி மேலும் அறிய.

ஏன் இந்த விளம்பரம்

நாங்கள் விளம்பரங்களைக் காட்ட என்ன தரவைப் பயன்படுத்துகிறோம் என்று பார்க்கவும்

கொடுக்கப்பட்ட விளம்பரத்தை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள "ஏன் இந்த விளம்பரம்" என்ற அம்சம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் கேமரா விளம்பரத்தை பார்த்தால், கேமரா போட்டாகிராபி இணையத்தளங்களைப் தேடியிருபீர்கள், அல்லது முன்னர் கேமராக்களுக்கான விளம்பரங்களைக் கிளிக் செய்த காரணத்தால் இருக்கலாம்.

கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு விளம்பரதாரர் எவ்வளவு பணம் செலுத்தினார் என்பதைக் காட்டும் எனது விளம்பர மையத்தின் "இந்த விளம்பரத்திற்கு பணம் செலுத்தியது யார்" பக்கத்தின் மாதிரி

விளம்பரதாரர் அடையாளச் சரிபார்ப்பு

நீங்கள் பார்க்கும் விளம்பரத்தின் பின்னணியில் உள்ள விளம்பரதாரரைப் பற்றி அறிக

நீங்கள் யாருடைய விளம்பரத்தைப் பார்க்கிறீர்கள் என்பது குறித்த கூடுதல் தகவல்களை உங்களுக்கு வழங்க, எங்கள் பிளாட்ஃபார்ம்களில் விளம்பரதாரர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கிறோம். எங்களின் இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, Googleளில் இருந்து விளம்பரங்களை வாங்குவதற்கு விளம்பரதாரர்கள் ஒரு சரிபார்ப்புத் திட்டத்தை நிறைவுசெய்ய வேண்டும். விளம்பரதாரரின் பெயர் மற்றும் நாடு குறித்த விவரங்களைக் கொண்ட விளம்பர வெளிப்பாடுகள் உங்களுக்குக் காட்டப்படும்.

குறிப்பிட்ட பிராந்தியத்தில் எந்தெந்த விளம்பரங்கள் காட்டப்பட்டன அல்லது விளம்பர வடிவம் குறித்து மேலும் அறிய விரும்பினால் விளம்பரங்களுக்கான வெளிப்படைத்தன்மை மையத்தில் பார்க்கலாம். இது YouTube, Search, சரிபார்க்கப்பட்ட விளம்பரதாரர்கள் வழங்கும் Display ஆகியவை முழுவதும் அனைத்து விளம்பரங்களின் தேடல் ஹப்பாகும். விளம்பரங்களுக்கான வெளிப்படைத்தன்மை மையத்தை நேரடியாக அணுகலாம் அல்லது நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கு அடுத்துள்ள கூடுதல் விருப்பங்கள் மெனு மூலம் எனது விளம்பர மையத்திற்குச் சென்று அணுகலாம்.

விளம்பரங்களுக்கான வெளிப்படைத்தன்மை மையத்தைப் பாருங்கள்.

விளம்பரங்கள் குறித்து பயனர்கள் கேட்கும் கேள்விகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

எந்தெந்தத் தகவல்களை விளம்பரங்களுக்காக Google பயன்படுத்துகிறது?

விளம்பரங்கள் உட்பட எங்கள் தயாரிப்புகள் முழுவதிலும் சிறந்த, கூடுதல் உதவிகரமான அனுபவங்களை வழங்குவதற்காக நீங்கள் பார்வையிடும் தளங்கள், பயன்படுத்தும் ஆப்ஸ், தேடியவை மற்றும் இருப்பிடம் போன்ற தொடர்புடைய தகவல்களைத் தெரிந்துகொள்ள Googleளில் உங்கள் செயல்பாடுகள் என்பதை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகப்படுத்த உடல்நிலை, இனம், மதம், பாலியல் நாட்டம் போன்ற பாதுகாக்கவேண்டிய தகவல்களை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம். மேலும் விளம்பரங்களுக்காக Drive, Gmail, Photos ஆகியவற்றிலிருந்தும் தகவல்களைப் பயன்படுத்த மாட்டோம்.

எனது விளம்பர மையம் என்பதற்குச் சென்று, விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க எந்தெந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் உங்கள் விளம்பர விருப்பங்களை நிர்வகிக்கலாம்.

விளம்பரப்படுத்தலுக்கு எனது தகவல்களை Google ஏன் பயன்படுத்துகிறது?

உங்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் உங்கள் ஆர்வங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக நாங்கள் கருதும் விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட அல்லது புதியவற்றைக் கண்டறிய உதவவே Google உங்கள் தகவல்களைப் பயன்படுத்துகிறது.

உதாரணமாக, புதிய கார்களைப் பற்றி நீங்கள் ஆராய்கிறீர்கள் எனில், பால்கனி ஃபர்னிச்சர்கள் அல்லது செல்லப் பிராணிகளுக்கான உணவு தொடர்பான விளம்பரங்களைவிட உள்ளூர் கார் விற்பனையாளர்களின் விளம்பரங்களைப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தனியுரிமைக் கருவிகள் மூலம் உங்கள் தரவின் கட்டுப்பாடு எப்போதும் உங்களிடம் இருக்கும். மேலும் Googleளுடன் தகவலைப் பகிர்வதும் விளம்பரப்படுத்தலுக்கு அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை முடிவு செய்வதும் எப்போதும் உங்கள் விருப்பமாகும்.

எனக்கு விளம்பரங்களைக் காட்ட Google என் மின்னஞ்சல்களைப் படிக்கிறதா? என் மொபைல் அழைப்புகளைக் கவனிக்கிறதா?

இல்லை. உங்கள் மின்னஞ்சல் மற்றும் உரையாடல்களைத் தனிப்பட்டவையாக வைக்கிறோம். நீங்கள் மின்னஞ்சல்களில் எழுதுபவை, மொபைல் அழைப்புகளில் பேசுபவை அல்லது Google Drive போன்ற சேவைகளில் சேமிப்பவற்றின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு ஒருபோதும் விளம்பரங்களைக் காட்டுவதில்லை.

Google எனது தகவல்களை விளம்பரதாரர்களுக்கு விற்கிறதா?

இல்லை.

ஒருபோதும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் யாரிடமும் விற்பதில்லை.

பிரத்தியேகமான விளம்பரங்களை முழுமையாக நான் முடக்க முடியுமா?

முடியும். எனது விளம்பர மையம் என்பதற்குச் சென்று உங்கள் விருப்பத்தேர்வுகளை மாற்றலாம் அல்லது விளம்பரப் பிரத்தியேகமாக்கலை முடக்கலாம்.

பிரத்தியேகமான விளம்பரங்களைப் பார்க்க வேண்டாமென்று நீங்கள் தேர்வுசெய்தாலும் உங்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும். ஆனால் அவை குறைந்த அளவிலேயே உங்களுக்குத் தொடர்புடையவையாக இருக்கும்.

நாங்கள் உங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கும்
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.