குடும்பங்களுக்கேற்ற
அனுபவங்களை
உருவாக்குகிறோம்.

குடும்பங்கள் பயன்படுத்தி மகிழ்வதற்கான சிறப்பு அம்சங்களை (ஸ்மார்ட் ஃபில்ட்டர்கள், தளத் தடுப்பான்கள், உள்ளடக்க மதிப்பீடுகள் போன்றவை) எங்களின் பல தயாரிப்புகளில் உருவாக்கியுள்ளோம்.

சிறுவர்கள் கண்டறியவும் உருவாக்கவும் வளரவும்
உதவும் உள்ளடக்கத்தைக் கொண்ட
டேப்லெட் அனுபவம்.*
ஒரு சிறுவனின் கார்ட்டூன் படத்தையும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஸ் வரிசையில் ஒரு பொம்மையின் படத்தைக் கொண்ட ஆப்ஸையும் காட்டும் Google Kids Space திரை.
குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்ட
உங்களுக்கு விருப்பமான தயாரிப்புகள்.
YouTube Kidsஸில் இருந்து சிறுவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வெவ்வேறு வீடியோக்கள் திரையில் காட்டப்பட்டுள்ளன

YouTube Kids

YouTube Kids மூலம் கற்றுக்கொள்வதுடன், வேடிக்கையாகவும் பொழுதைக் கழியுங்கள்

சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆன்லைன் வீடியோக்களைப் பாதுகாப்பாகப் பார்க்கும் வகையில் YouTube Kidsஸை உருவாக்கியுள்ளோம். YouTube Kidsஸை நீங்கள் ஆப்ஸ், இணையம், ஸ்மார்ட் டிவி என எதில் பார்த்தாலும் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் வெவ்வேறு தலைப்புகளில் குடும்பத்திற்கேற்ற வீடியோக்களைக் கண்டறியலாம்.

Google Playயில் ஆசிரியர் அனுமதித்த ஆப்ஸைக் கொண்ட ‘சிறுவர்கள்’ பிரிவை மொபைல் காட்டுகிறது

Google Play

உங்கள் பிள்ளைக்கு Google Playயில் “ஆசிரியர் அனுமதித்த” உள்ளடக்கம்

உங்கள் பிள்ளைக்கேற்ற உள்ளடக்கத்தைக் கண்டறிவதற்கு உதவ, நாடு முழுவதுமுள்ள கல்வி நிபுணர்களுடனும் ஆசிரியர்களுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். “ஆசிரியர் அனுமதித்த” சிறப்பான, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஆப்ஸைக் கண்டறிய, Google Play ஸ்டோரில் உள்ள சிறுவர்கள் பிரிவைப் பாருங்கள். ஆப்ஸுக்கு ஆசிரியர்கள் ஏன் அதிக மதிப்பீட்டை வழங்குகிறார்கள் என்பதை ஆப்ஸ் விவரங்கள் பிரிவிலும், ஆப்ஸ் குறிப்பிட்ட வயதினருக்கானதா என்பதை உள்ளடக்க மதிப்பீட்டிலும் அறிந்துகொள்ளலாம். மேலும் ஆப்ஸில் விளம்பரங்கள் உள்ளனவா, ஆப்ஸில் பர்ச்சேஸ் செய்ய முடியுமா, சாதன அனுமதிகள் தேவையா போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

சிறுவர்களுக்கான ஆப்ஸை உருவாக்கும் டெவெலப்பர்கள் உயர்தரத்திலானவற்றை மட்டும் வழங்கச் செய்வதற்கு எங்களின் Play ஸ்டோருக்கான டெவெலப்பர் பாலிசிகளை உருவாக்கியுள்ளோம்.

Google Homeமில் "Ok Google, ஒரு கதை சொல்" என்ற பேச்சுக் குமிழ் காட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து, "நிச்சயமா, Google பிளேபுக்ஸின் Storynoryயில் உள்ள இந்தக் கதையின் தலைப்பு "குள்ளநரியும் காகமும்"..." என்று Google Assistant அதற்குப் பதிலளிக்கும் பேச்சுக் குமிழ் காட்டப்படுகிறது.

Google Assistant

Google Assistant மூலம் கிடைக்கும் உதவியுடன் முழுக் குடும்பத்திற்குமான பொழுதுபோக்கு

உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகப் பொழுதுபோக்கத் தேவையானவற்றைக் கண்டறிவதை Assistant எளிதாக்குகிறது. எங்களின் 'குடும்பங்களுக்கான செயல்கள்' திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குடும்பத்திற்கேற்ற கேம்களையும் செயல்பாடுகளையும் கண்டறியலாம், கதை சொல்லும்படி Assistantடைக் கேட்பதன் மூலம் உறங்கப்போகும் முன்பு உங்களுக்குப் பிடித்தமான கதைகளைக் கேட்கலாம். வடிப்பான்களை அமைத்து குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கக்கூடிய பாடல்களைக் கேட்டு மகிழலாம், சாதனத்தில் முடக்க நேரத்தை அமைத்து அதைத் தானாக முடங்கச் செய்யலாம், குடும்பத்தினருடன் ஒன்றாக அதிக நேரம் செலவிடலாம்.

'குடும்பங்களுக்கான செயல்கள்' திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் குடும்பத்திற்கு ஏற்றவையா என்று எங்கள் மதிப்பாய்வாளர்கள் சோதித்துப் பார்த்துள்ளனர், இருப்பினும் எந்த சிஸ்டமுமே துல்லியமானதல்ல. பொருத்தமற்ற உள்ளடக்கம் தவறுதலாகத் தோன்றலாம் என்பதால் எங்கள் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

பாதுகாப்பான ஆன்லைன் கற்றலுக்கான கருவிகளை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்குகிறோம்.
Google Workspaceஸின் பகுதியாக உள்ள பல்வேறு Google தயாரிப்புகள் ஒரு லேப்டாப்பில் காட்டப்படுகின்றன

Google Workspace

வகுப்பறைகளில் கற்பதற்கான கூடுதல் பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறோம்

ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு சாதனங்களில் பாதுகாப்பாக உரையாட Google Workspace for Education உதவுகிறது. இதன் முக்கியச் சேவைகளில் விளம்பரங்கள் இருக்காது. மேலும் விளம்பரங்களைக் காட்ட, தொடக்கப் பள்ளிகளிலிருந்து மேல்நிலைப் பள்ளிகள் (K–12) வரையிலான பயனர்களின் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. பொருத்தமான செயல்பாடுகள் பற்றிய கொள்கைகளை அமைப்பதில் நிர்வாகிகளுக்கு உதவவும் மாணவர்களின் பள்ளி Google கணக்குகளைப் பயன்படுத்தி அவர்களைப் பாதுகாப்பதில் உதவவும் நாங்கள் கருவிகளையும் வழங்குகிறோம். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் Google Workspace for Education சேவைகள் பற்றி தெளிவாக முடிவெடுப்பதற்குத் தேவையான கருவிகளையும் தகவல்களையும் பள்ளிகளுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இரண்டு Chromebook லேப்டாப்கள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன.

Chromebooks

வகுப்பறைக்குப் பாதுகாப்பு வழங்குகிறோம்

லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் Googleளின் Chromebook லேப்டாப்களைப் பயன்படுத்துகின்றனர். மாணவர்களுக்குத் தேவையான அம்சங்களையும் அணுகலையும் குழு அமைப்புகளில் நிர்வாகிகளால் நிர்வகிக்க முடியும். எங்கள் தனியுரிமை & பாதுகாப்பு அம்சங்கள், சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன. இதனால் அமெரிக்க K-12 பள்ளிகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள பல பள்ளிகளில் Chromebook லேப்டாப்களை மிக முக்கியமாகப் பயன்படுத்துகின்றனர்.

பெற்றோர் கட்டுப்பாடுகள்

குடும்பங்கள் டிஜிட்டல் விதிகளை அமைத்து ஆன்லைனில் செயல்படுவதற்கான ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்கிட Google எப்படி உதவுகிறது என அறிந்துகொள்ளுங்கள்.