ஆன்லைனில் உங்கள் குடும்பத்துக்கு ஏற்றவற்றை
நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறோம்.

முந்தைய தலைமுறையினர் வளர்ந்த பின்பே தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டனர், ஆனால் இந்தக் காலத்துப் பிள்ளைகள் தொழில்நுட்பத்துடனேயே வளர்கின்றனர். எனவே உங்கள் குடும்பத்திற்கேற்ற விதத்தில் வரம்புகளை அமைக்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் உதவ, நிபுணர்களுடனும் கல்வியாளர்களுடனும் நேரடியாகப் பணியாற்றுகிறோம்.

ஆன்லைனில் உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்
பெஞ்சமின் எனும் பெயருடைய சிறுவனின் மொபைல் காலை 7 மணிவரை பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலம் லாக் செய்யப்பட்டிருப்பதைக் காட்டும் மொபைல். அதன் கீழே தினசரி வரம்புக்கான மீட்டர் காட்டப்பட்டுள்ளது.

Family Link

பெற்றோர் கட்டுப்பாடுகளை அமையுங்கள்

பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்தும்போது அவர்களின் கணக்கையும் சாதனங்களையும் நிர்வகிக்க Family Link உதவுகிறது. பயன்படுத்தும் நேரத்துக்கான வரம்புகளை அமைக்கலாம், உங்கள் பிள்ளை பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை நிர்வகிக்கலாம், அவர்களிடம் சாதனம் இருக்கும்போது அவர்களின் இருப்பிடத்தை அறியலாம்.

எங்களுடைய தயாரிப்புகள் அனைத்திலும்
குடும்பங்களுக்கேற்ற அனுபவங்களை
உருவாக்குகிறோம்.
ஒரு சிறுவனின் கார்ட்டூன் படத்தையும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஸ் வரிசையில் ஒரு பொம்மையின் படத்தைக் கொண்ட ஆப்ஸையும் காட்டும் Google Kids Space திரை.

குடும்பத்திற்கேற்ற அனுபவங்கள்

குடும்பங்களுக்கென உருவாக்கப்பட்ட அம்சங்களை அறிந்துகொள்ளுங்கள்

குடும்பங்கள் பயன்படுத்தி மகிழ்வதற்கான சிறப்பு அம்சங்களை (ஸ்மார்ட் ஃபில்ட்டர்கள், தளத் தடுப்பான்கள், உள்ளடக்க மதிப்பீடுகள் போன்றவை) எங்களின் Play ஸ்டோர், Assistant, YouTube உள்ளிட்ட பல தயாரிப்புகளில் உருவாக்கியுள்ளோம்.

உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற
ஆன்லைன் உள்ளடக்கத்தை நிர்வகியுங்கள்.