மியூனிக்கில் தனியுரிமை &
பாதுகாப்புப் பொறியியலை நிர்வகிக்கிறோம்.
ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள GSEC மியூனிக், தனியுரிமை மற்றும் பாதுகாப்புப் பொறியியல் குறித்த Googleளின் உலகளாவிய மையமாகும். 2019ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், உலகம் முழுவதிலும் ஆன்லைனில் உள்ளவர்களைப் பாதுகாக்கவும், அவர்களது தகவல்களைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கவும் உதவும் தயாரிப்புகள் மற்றும் கருவிகளை 300க்கும் மேற்பட்ட அர்ப்பணிப்பு மிகுந்த பொறியாளர்கள் உருவாக்குகிறார்கள்.
லட்சக்கணக்கானவர்களை ஆன்லைனில் பாதுகாப்பதற்கு உதவும் தயாரிப்புகளையும் கருவிகளையும் GSEC மியூனிக் உருவாக்குகிறது. மிகச் சிறந்த தனியுரிமையும் பாதுகாப்பும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில், இந்தச் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளும், உள்ளமைந்த பாதுகாப்பும், ஓப்பன் சோர்ஸ் தொழில்நுட்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Google கணக்கு
பயன்படுத்துவதற்குச் சுலபமான அமைப்புகளும் கட்டுப்பாடுகளும்
வெவ்வேறு தயாரிப்புகளில் Googleளை இன்னும் சிறப்பாக உங்களுக்குச் செயல்பட வைக்க உங்கள் தகவல்கள், தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை நிர்வகிப்பதற்கு Google கணக்கு உங்களுக்கு உதவும். எனது செயல்பாடு போன்ற முக்கிய வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளை இங்கு நீங்கள் காணலாம். இவை Google சேவைகள் முழுவதிலும் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவைப் பற்றிய வெளிப்படைத்தன்மையை இது வழங்குகிறது.
தனியுரிமைச் சரிபார்ப்பு, பாதுகாப்புச் சரிபார்ப்பு போன்ற எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கருவிகளையும் கண்டறியலாம். முக்கியமான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விருப்பங்கள் குறித்து இவை உங்களுக்கு வழிகாட்டும். உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க எந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், விளம்பர அமைப்புகள் போன்ற கட்டுப்பாடுகள் உங்களை அனுமதிக்கும். இதனால் Google மொத்தமும் உங்களுக்காகச் சிறப்பாகச் செயல்பட முடியும்.
கடவுச்சொல் நிர்வாகி
உங்கள் கடவுச்சொற்களை நிர்வகிப்பதற்கான பாதுகாப்பான வழி
Chrome, Android, iOSஸில் உள்ள Chrome ஆகியவற்றில் நேரடியாக உள்ளமைக்கப்பட்டிருக்கும் எங்கள் கடவுச்சொல் நிர்வாகி ஆன்லைனிலுள்ள உங்களுடைய அனைத்துக் கணக்குகளையும் பத்திரமாக வைத்திருக்க உதவும் பாதுகாப்பான வழியாகும். நீங்கள் சேமித்த கடவுச்சொற்களை Googleளின் தானியங்கு பாதுகாப்பு அம்சங்கள் 24/7 பாதுகாக்கின்றன. மேலும் நீங்கள் கடவுச்சொல்லைச் சேமித்துள்ள தளத்திலோ ஆப்ஸிலோ பாதுகாப்பு மீறல் நிகழ்ந்திருப்பதைக் கண்டறிந்தால் அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிப்போம். மேலும், புதிய தளத்திலோ ஆப்ஸிலோ நீங்கள் பதிவுசெய்யும்போது கடவுச்சொல் நிர்வாகி தானாகவே எளிதில் கண்டறிய முடியாத கடவுச்சொல்லை உருவாக்கும். அடுத்த முறை நீங்கள் உள்நுழையும்போது அந்தக் கடவுச்சொல் தானாகவே நிரப்பப்பட்டிருக்கும்.
மியூனிக்கில் அமைந்திருந்தாலும் ஜெர்மனி மற்றும் வேறு பல இடங்களைச் சேர்ந்த GSEC மியூனிக்கின் 300க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மொத்த உலகத்துக்கான பாதுகாப்பு நிறைந்த இணையத்தைக் கட்டமைப்பதில் பணியாற்றுகிறார்கள்.
"பயனர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு தரவுச் சேகரிப்பு நிலையைத் தேர்வுசெய்ய முடிவதை நாங்கள் உறுதிசெய்கிறோம், அத்துடன் தரவை நீக்க விரும்பினால் அதற்கான கருவிகளையும் வழங்குகிறோம்."
Werner Unterhofer
TECHNICAL PROGRAM MANAGER
“தனியுரிமையும் பாதுகாப்பும் இன்றியமையாதவை, மிகவும் தனிப்பட்டவை. அவற்றை அடைவது எளிதாக இருக்க வேண்டும்.”
Jan-Philipp Weber
SOFTWARE ENGINEER
“எந்தெந்தத் தரவுகளை Googleளுடன் பகிரலாம் என்பதைப் பயனர்கள் முடிவு செய்யவும், அவை எவ்வளவு காலத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும் உதவும் கட்டுப்பாடுகளை அவர்களுக்கு வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எளிய வடிவமைப்பின் காரணமாக, பயனர்கள் தங்களின் தரவு மற்றும் தனியுரிமை விருப்பங்களை எளிதாகக் கண்டறியலாம் பயன்படுத்தலாம், நிர்வகிக்கலாம்.”
Elyse Bellamy
INTERACTION DESIGNER
“ஆன்லைன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த கட்டுப்பாடுகள் எப்போதும் பயனர்களிடம் இருக்க வேண்டும். பயனர்கள், அவை பற்றிய கவலை ஏதுமின்றி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பயனர்கள் இணையத்தில் உலாவ விரும்புகிறார்கள். அவ்வாறு உலாவும்போது அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான இயல்புநிலை அமைப்புகளை நாங்கள் வழங்க வேண்டும்.”
Jochen Eisinger
DIRECTOR OF ENGINEERING
“வசதி, தொழில்நுட்பத் திறன் போன்ற வேறுபாடில்லாமல் தனியுரிமை அம்சங்களைப் பெறுவதற்கான உரிமை அனைவருக்குமே உள்ளது. தங்களுக்கு எது சரியானது, அந்த நேரத்தில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் தேர்வுசெய்ய உதவும் கருவிகளை அனைவருக்கும் உருவாக்கித் தருவதே எங்களின் குறிக்கோளாகும்.”
Audrey An
PRODUCT MANAGER
“ஆன்லைன் உபயோகத்தின் முழுக் கட்டுப்பாடும் தங்களிடம் உள்ளதாகப் பயனர்கள் உணர்கின்ற அதேவேளையில், அவர்களால் இணையத்தில் பாதுகாப்பாகவும் உலாவ முடிய வேண்டும். வலுவான இயல்புநிலைப் பாதுகாப்புகள், பயன்படுத்துவதற்கு எளிதான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை ஆன்லைனில் பயனர் பாதுகாப்பின் முக்கிய அம்சங்களாகவும் எங்கள் தினசரி லட்சியமாகவும் உள்ளன.”
Sabine Borsay
PRODUCT MANAGER
-

உள்ளவர்கள்.
உலகெங்கிலும் உள்ள பயனர்களுடன் பேசி இணையப் பாதுகாப்பு குறித்த அவர்களின் குறைகளைப் புரிந்துகொள்கிறோம். ஆன்லைனில் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதற்கு அடுத்த தலைமுறை தீர்வுகளை உருவாக்க, எங்கள் பொறியாளர்கள் குழுவுக்கு இடத்தையும் ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குகிறோம்.