உள்ளடக்கத்திற்கான பொறுப்பை டப்ளினில் நிர்வகிக்கிறோம்.

எங்களது ஐரோப்பியத் தலைமையகத்தில் அமைந்துள்ள GSEC டப்ளின் அலுவலகம், சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கம் பரவுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள Google நிபுணர்களுக்கான பிராந்திய மையமாக உள்ளது. மேலும் ஆட்சியில் இருப்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சட்டத்துறையினர் ஆகியோருடன் இந்தப் பணியைப் பகிர்ந்துகொள்வதற்கான இடமாகவும் திகழ்கிறது.

எங்களது உள்ளடக்கப் பொறுப்பு முன்னெடுப்புகள் குறித்த விரிவான பார்வை.

எங்களது நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுக்களின் மையமாக டப்ளின் உள்ளது. இக்குழுக்களில் உள்ள பல்வேறு கொள்கை நிபுணர்களும் சிறப்பு வல்லுநர்களும் பகுப்பாய்வாளர்களும் சமீபத்திய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை மூலம் பயனர்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைப்பதற்குப் பணியாற்றி வருகின்றனர். இந்த முன்னெடுப்புகள் அவர்களது பணிக்குக் கூடுதல் வெளிப்படைத்தன்மையை வழங்குகின்றன.

YouTube செயல்படும் விதம்

எங்கள் கொள்கைகள், தயாரிப்புகள் மற்றும் செயல்கள் பற்றிய ஒரு பார்வை

ஒவ்வொரு நாளும் தகவல்களுக்காகவும், ஆர்வமூட்டும் விஷயங்களுக்காகவும், கேளிக்கைக்காகவும் லட்சக்கணக்கானோர் YouTube பார்க்கின்றனர். YouTube செயல்படும் விதம் குறித்துச் சிறிது காலமாகவே நாங்கள் கேள்விகளைப் பெற்று வருகிறோம். எனவே இந்தக் கேள்விகள் சிலவற்றுக்கான பதில்களை வழங்க இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளோம். மேலும் எங்களின் இந்தச் சமூகத்தை உருவாக்குகிற பயனர்கள், கிரியேட்டர்கள், கலைஞர்கள் ஆகியோர் சார்ந்திருக்கக்கூடிய பொறுப்புள்ள தளத்தை உருவாக்கி வளர்க்க என்ன செய்துவருகிறோம் என்பதையும் இங்கு விளக்கியுள்ளோம்.

சிறுவர் பாதுகாப்புக்கான கருவிகள்

ஆன்லைனில் சிறார் வன்கொடுமை & சிறார்களைத் தவறாக வழிநடத்துதலை எதிர்த்தல்

"Google நிறுவனம் ஆன்லைனில் சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த உள்ளடக்கத்திற்கு (Child Sexual Abuse Material - CSAM) எதிராகப் போராடவும் அதைப் பரப்ப எங்கள் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உறுதிகொண்டுள்ளது. ஆன்லைனில் சிறார் பாலியல் முறைகேடுகளை எதிர்க்க நாங்கள் அதிகம் முயல்கிறோம், மேலும் எங்கள் தளங்களில் தகாத நடவடிக்கைகளைத் தடுக்கவும், கண்டறியவும், அகற்றவும் எங்களுக்குச் சொந்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். பிற நிறுவனங்கள் CSAM உள்ளடக்கத்தைக் கண்டறிந்து அவற்றின் தளங்களில் அகற்றுவதற்கு உதவும் வகையில் எங்கள் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்தி கருவிகளை உருவாக்கிப் பகிர்ந்து வருகிறோம்."

வெளிப்படைத்தன்மை அறிக்கை

தகவல்களுக்கான அணுகல் குறித்த தரவைப் பகிர்தல்

அரசு மற்றும் பெருநிறுவனங்களின் கொள்கைகளும் செயல்களும் தனியுரிமை, பாதுகாப்பு, தகவலுக்கான அணுகல் ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள, 2010ம் ஆண்டு முதல் வெளிப்படைத்தன்மை அறிக்கையை Google வழக்கமாகப் பகிர்ந்து வருகிறது. உள்ளடக்கத்தை அகற்றக்கூறி அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள், பதிப்புரிமை காரணமாக அகற்றப்பட்ட உள்ளடக்கம், YouTube சமூக வழிகாட்டுதல்களின் அமலாக்கம், Googleளில் அரசியல் விளம்பரங்களைக் காட்டுதல் போன்ற பல தரவை எங்களின் வெளிப்படைத்தன்மை அறிக்கை தளத்தில் பார்க்கலாம்.

GSEC டப்ளினில் பணிபுரிபவர்களை அறிந்துகொள்ளுங்கள்.

Google பாதுகாப்புப் பொறியியல் மையத்தில் நூற்றுக்கணக்கான பகுப்பாய்வாளர்கள் பொறியாளர்கள், கொள்கை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிறந்த மற்றும் பாதுகாப்பான இணையத்தை உருவாக்குவதற்காகப் பணியாற்றுகின்றனர்.

அமண்டா ஸ்டோரி

“எங்களின் உள்ளடக்கத்திற்கான பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துகிறோம் என்பதைச் சட்டத் துறையினரும் கொள்கை உருவாக்குநர்களும் ஆராய்ச்சியாளர்களும் நேரடியாகப் புரிந்துகொள்வதை GSEC டப்ளின் எளிதாக்குகிறது.”

Amanda Storey

DIRECTOR OF TRUST & SAFETY

ஹெலன் ஓ’ஷியா

“எங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்களைப் பாதுகாப்பதும், பயனர்கள், எங்கள் கூட்டாளர்கள், நாங்கள் இணைந்து செயல்படும் சமூகங்கள் ஆகியோரின் நம்பிக்கையைப் பெறுவதும், தவறாகப் பயன்படுத்தக்கூடிய மற்றும் தவறான நோக்கமுடையவர்களை முறியடிக்க Googleளுக்கு உதவுவதுமே எங்களின் நோக்கமாகும்.”

Helen O’Shea

HEAD OF CONTENT RISK & COMPLIANCE

மேரி ஃபீலன்

“அதிகாரப்பூர்வத் தகவல்களை வல்லுநர்களிடமிருந்து பெற்று பயனர்களுக்கு வழங்க எங்களின் முறையான செயலாக்கக் கட்டமைப்பு உதவுகிறது. மேலும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கத்திலிருந்து பயனர்களைப் பாதுகாக்கவும் செய்கிறது.”

Mary Phelan

DIRECTOR OF TRUST & SAFETY

கிளேர் லில்லியின் படம்

எங்களின் தளங்களில் உள்ள தகவல்களை மக்கள் எளிதாக அணுக உதவுவதற்கும், அதேவேளையில் தவறான பயன்பாடு மற்றும் தீங்கு (ஆஃப்லைன் & ஆன்லைன் இரண்டிலும்) ஆகியவற்றில் இருந்து இந்தத் தளங்களையும் அவற்றைப் பயன்படுத்துபவர்களையும் பாதுகாக்கவும் எங்கள் குழுவினர் ஒவ்வொரு நாளும் பணியாற்றிக்கொண்டு வருகின்றனர்.

Claire Lilley

CHILD ABUSE ENFORCEMENT MANAGER

ரக்கேல் ரூயிஸின் படம்

"GSEC மூலம், பயனர் விவரங்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுகிற பாதுகாப்பான இடத்தில் எங்களின் உள்ளடக்க மதிப்பீட்டு சிஸ்டங்களும் மற்ற தொழில்நுட்பங்களும் செயல்படும் விதம் குறித்த கூடுதல் விவரங்களைச் சட்டத்துறையினரால் அணுக முடியும்.”

Brian Crowley

DIRECTOR OF GLOBAL ADS AND CONTENT INVESTIGATIONS

நூரியா கோம்ஸ் கடாஹியாவின் படம்

"எங்களின் தளங்களின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, எங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்களையும் பிசினஸ்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதைத் தெளிவான மற்றும் வெளிப்படையான கொள்கைகள், செயல்முறைகள் ஆகியவற்றின் மூலம் செய்ய வேண்டும்."

Nuria Gómez Cadahía

TECHNICAL PROGRAM MANAGER

ஓலி இர்வினின் படம்

"இந்தப் பகுதியில் எங்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுக்களின் மையமாக டப்ளின் உள்ளது. இக்குழுக்களில் உள்ள பல்வேறு கொள்கை நிபுணர்களும், சிறப்பு வல்லுநர்களும், பொறியாளர்களும் சமீபத்திய தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தி பயனர்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைப்பதற்குப் பணியாற்றி வருகின்றனர்."

Ollie Irwin

STRATEGIC RISK MANAGER

Google பாதுகாப்புப் பொறியியல் மையத்தின் பின்னணியில்
உள்ளவர்கள்.

உலகெங்கிலும் உள்ள பயனர்களுடன் பேசி இணையப் பாதுகாப்பு குறித்த அவர்களின் குறைகளைப் புரிந்துகொள்கிறோம். ஆன்லைனில் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதற்கு அடுத்த தலைமுறை தீர்வுகளை உருவாக்க, எங்கள் பொறியாளர்கள் குழுவுக்கு இடத்தையும் ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குகிறோம்.

இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்

உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.